எப்படியோ ஆட்சிக்கு வந்துவிட்டார் விஜய். இன்று அவர்தான் முதலமைச்சர். சட்டமன்ற நிகழ்வுகளின்போது அவரை ஒரு முதலமைச்சராகப் பார்க்கிறார்கள்.

சட்டப்பேரவையில் முதலில் மக்கள் பிரச்சனைகளைப் பேச வேண்டும்.

எதிர்கட்சித் தலைவர், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அங்கேயே பதில் சொல்ல வேண்டும்.

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி அவர்களின் பேச்சுக்கு, பேரவையிலேயே பதில் சொல்லாமல் வீட்டுக்குப் போய் X தளத்தில் பதில் சொல்வது முதல்வருக்கு உரிய தகுதி ஆகாது.

கஜானா காலியாக இருக்கிறது என்று பேசிய சிறிது நேரத்தில் கஜானாவில் என்ன இருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும் என்று சொல்வதில் முரண் இருக்கிறது. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்வதுபோல 'பணம் இருக்கிறது. மக்களுக்குக் கொடுக்க மனமும், ஆட்சித் திறனும் வேண்டும்' என்பதை கவனத்தில் முதல்வர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் என்று ஆட்சிக்கு வர அள்ளி வீசிய வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவார் முதல்வர் விஜய் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கு ஜோசியக் காரர்களை அரசின் பக்கத்தில் வைத்து சோதிடம் பார்க்க மாட்டார் முதல்வர், என்று நம்புவோமாக.

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.