manickam tagoreஇரண்டுமே எதிர்பார்த்ததுதான்! தேர்தலில் கூட்டணி அமைத்து நம்மோடு பயணித்த காங்கிரஸ் கட்சி, சேர்ந்து இருந்த போதே பிரிந்து நின்றது!

கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் திமுகவை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தனர்! அவர்களில் ஒருவர் இப்போது தவெக ஆதரவில் நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினர் ஆகிவிட்டார்.

இன்னொருவர் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இப்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இது அவர்களின் பிழை இல்லை! கூடாநட்பு கேடாய் முடியும் என்று அறிந்தும், அவர்களை நம்பி நாம் நட்புக்குக் கை கொடுத்தோம்!

ஆனால் அவர்கள் கழுத்துக்கு மாலை விழும் இடம் நோக்கிச் சென்று விட்டார்கள்!

மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், எப்போதும் உணர்ச்சி வயப்பட்டுப் பேசக் கூடியவர். ஆனால் எப்போதாவது தான், உண்மையைப் பேசக் கூடியவராக இருந்திருக்கிறார்! வாரிசு அரசியலை எதிர்த்து கட்சியை விட்டு விலகிச் சென்ற அவர் தன் மகன் துரை வைகோவை கட்சிக்கு வாரிசாக்கினார்.

அவரோ அப்பாவை மிஞ்சிய கோபக்காரராகவும், ரோஷக்காரராகவும் இருக்கிறார். திமுக கூட்டணி தொடராது என்பதை மறைமுகமாகவும், தவெக ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்பதை நேரடியாகவும் அவர் பல நாள்களுக்கு முன்பே கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகிக்கும் துரை வைகோ மிக விரைவில் அந்தப் பதவியை விட்டு விரைவில் விலகிவிடுவார் என்று புரிகிறது! ரோஷக்காரர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள்!

- சுப.வீரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.