வெற்றியைத் தவறவிட்ட தலைவர் ஸ்டாலின் அவர்கள், அன்று மாலையே தன்னுடைய கொளத்தூர் தொகுதிக்குச் சென்றார். ஆயிரமாயிரம் மக்களுக்கிடையே தன் நன்றியினைத் தெரிவித்தார்.

அழுது கலங்கிய தொண்டர்களை வண்டியில் இருந்தபடியே ஆறுதல் படுத்தினார், நிதானமாக.

mk stalin thanking kolathoor peopleவெற்றிபெற்ற விஜய் இன்னமும் தொகுதிப் பக்கம் போகவில்லை. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி, பாவம் என்ன செய்வார், அவர்?

அமையப்போகும் ஆட்சிக்குத் திமுகழகம், ஆறு மாதங்கள் எந்தவோர் இடையூறும் தராமல் கவனிப்போம்.

மகளிருக்கு விஜயின் தேர்தல் வாக்குறுதியான மாதம் 2,500 ரூபாய் தருவது கடினம் என்றாலும், தொடர்ந்து நாங்கள் கொடுத்த 1,000 ரூபாவையாவது கொடுக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.

ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் என்ற விஜயின் வாக்குறுதிக்கு வாய்ப்பில்லை, என்றாலும் கொடுத்தால் மகிழ்ச்சிதான் என்று தலைமைத்துவப் பொறுப்போடு பேசியிருக்கும் தலைவர் ஸ்டாலின் அவர்கள், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவோ அல்லது மறுதேர்தல் நடத்துவதையோ தான் ஏற்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.