அடுத்த 'கருஞ்சட்டைத் தமிழர்' மின்னிதழ் ஜூன் 4 ஆம் தேதிக்குப் பின்னர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வெளிவர இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகால சாதனைகளாக மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்ல முடியாமல், 'முஜ்ரா' ஆபாச நடனம்வரை பேசி எதிர்கட்சிகளை இழிவுபடுத்த எவ்வளவோ முயன்றும், அது பயனற்றுப் போக தோல்வி பயத்துடன் கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார் விஷ்ணுவின் 11ஆம் 'பரமபிதா' அவதாரமான மோடி, தியானம் செய்வதற்காக.

பிரச்சாரம் முடிந்து அடுத்த 48 மணிநேரம் தேர்தல் நடத்தை விதியின்படி அமைதியாக இருக்கவேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம்தான் அமைதியாக இருக்கிறது.

இது ஒரு கூத்து என்றால், திடீரென்று, காந்தி பற்றிப் பேசுகிறார் அந்த பிரம்மபுத்திரர்.

"காந்தி என்ற படம் வெளிவந்த பிறகுதான் காந்தியை தெரிந்து கொண்டார்கள் பிறர்" என்று பேசியிருக்கிறார் மோடி.

ரிச்சர்ட் அட்டன்பரோவின் 'காந்தி' திரைப்படம் டில்லியில் 1982 நவம்பர் 30, இங்கிலாந்தில் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டது.

அதற்கு முன்னரே 1879ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1931 ஆம் ஆண்டிலேயே காந்திக்கு ஒரு கடிதம் எழுதி அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

காந்தியாரும் ஐன்ஸ்டீனுக்குப் பதில் எழுதினார் என்ற வரலாறு தெரியுமா இந்தக் கடவுள் அவதாரத்திற்கு?

20,000 புத்தகங்கள் படித்த அந்த மகானுபாவராவது இதைச் சொல்லி இருக்கலாம் மோடிக்கு.

இன்று கிராமங்களில் வயதான பாமர மக்கள் கூட காந்தியைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் சென்னை போன்ற பெறுநகர்ப் புறங்களில் கூட ஆர்.எஸ்.எஸ் இன் பிதாமகர்தளான கோல்வால்கர், சாவர்கரைப் பெரும்பாலான படித்தவர்களுக்குக் தெரியவில்லை என்பது கூட பிரம்மாவால் அனுப்பப்பட்ட அந்த மோடிக்குத் தெரியவில்லையே!

விவேகாநந்தர் இந்துமதம் குறித்துப் பேசினார். மோடி இந்துத்வா என்ற மதவெறியைப் பேசுகிறார்.

விவேகாநந்தரைப் பற்றித் தெரியாமல் தியானம் செய்வதும், வரலாறைப் படிக்காமல் காந்தியாரைப் பற்றிப் பேசுவதும் வடிவேலுவின் `காமடி' யாக அல்லவா இருக்கிறது!

மக்கள் கலைஞர் பிரகாஷ்ராஜ் சொல்வது போல "அவர் ஒரு டெஸ்ட்டியூப் பேபி".

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It