இஞ்சியை தோல் நீக்கி, பொடிப்பொடியாக நறுக்க வேண்டும். இத்துடன் சம அளவு தேன் கலந்து 20 முதல் 30 நாள் ஊற வைத்து, பின் தினம் காலை இரவு 10 கிராம் அளவு சாப்பிட வேண்டும். இதனால் பசிமந்தம், பசியின்மை, வாயுக் கோளாறு, மலச்சிக்கல், அஜீரணம் நீங்கும். பசியைத் தூண்டும். ஞாபக சக்தியை வளர்க்கும்.
வேப்ப எண்ணெயை மஞ்சள் சேர்த்து பித்த வெடிப்பில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
4 லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் 50 கிராம் சீரகத்தைப் போட்டு மீண்டும் கொதிக்க வைத்து இறக்கவும். இதை அன்றாடம் குடிநீராகப் பயன்படுத்தினால் மூத்திரக் கடுப்பு, அஜீரணம் ஏற்படாது.
குப்பைமேனி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பூசி வந்தால் சிரங்கு குணமாகும்.
மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்கள், கர்ப்பிணிகள் தினமும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் சாப்பிட்டு வந்தால் சிந்த பலன்கள் கிட்டும். ஜீரணசக்தி அதிகரிக்கும். உடல் உஷ்ணம்ó தணியும். நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கும்.
கருத்தரித்த பின் மூன்று மாதங்கள் வரை ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உண்பது நல்லது. கீரைகள், தானியங்களில் ஃ போலிக் அமிலம் போதுமான அளவு உள்ளது.
காரட்டை பச்சையாக உண்பது சிறந்தது. பறித்து காலந்தாழ்த்தி சமைப்பதாலோ, அதிக நேரம் கொதிக்க வைப்பதாலோ உயிர்ச்சத்து அழிந்து விடும். காரட்டில் ‘காரட்டின்’ என்ற சிறப்புப் பொருள் உள்ளது. பால், வெண்ணைய்க்குச் சமமாக Vitamin A அதிகமுள்ள காரட்டை தினம் உண்பதால் பார்வை திறன் அதிகரிக்கும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் முள்ளங்கி பெரும்பங்கினை வகிக்கிறது. இதனை வாரம் 2 முறை உணவில் சேர்த்தால் நீரிழிவு கட்டுப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் குறைவாக இருக்கும் செங்கை மாவட்டத்தில் நடத்திய ஓர் ஆய்வின் இறுதியில் வெளியிடப்பட்ட இக்கருத்தில் முள்ளங்கியை அம்மாவட்ட மக்கள் அதிகளவு பயன்படுத்தியதே அந்நோய் அதிகம் இல்லாததற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
பெரும்பாலான நோய்களுக்குப் பிறப்பிடம் வயிறு. மாதுளம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு பெரும்பாலான வயிற்றுக் கோளாறுகள் வராது. சீதக்கடுப்பு, இரத்த பேதி, அஜீரணம்,கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், இரத்த சோகை ஆகியன மாதுளை சாப்பிடுவதால் வராமல் தடுக்கலாம்.
வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மீது தடவினால் சில நாளிலேயே காயம் ஆறும்.
துளசி இலை, வேப்ப இலை பால்விட்டு அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் ஈறுபேன்கள் தொல்லை ஒழியும்.
முருங்கை மரப் பிசினை இடித்துத் தூளாக்கி, தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் பலமடைந்து ஆண்மை பெருகும்.
உடலுறவுக்கு முன் தேனுடன் பால் சேர்த்து அருந்தி வந்தால் உடலுறவில் முழு இன்பம் கிடைக்கும்.
ஆண்மை குறைவு உள்ளவர்கள் அமுக்கிரா கிழங்குப் பொடியுடன் தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை நிறைவு பெறமுடியும்.
சீரகத்தை வறுத்துப் பொடியாக்கிச் சமஅளவு வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
தினமும் பப்பாளி சாப்பிடுவதால் உடலிலுள்ள துர்நீர்கள் வியர்வை மூலமாகவும் சிறுநீர் வழியாகவும் வெளியேறும்; மலச்சிக்கல் தீரும்! மூலத்தையும் குணப்படுத்தும்.
சாம்பிராணிப் புகையில் கந்தகம் அதிகம் உள்ளது. இதனால் பிஞ்சுக் குழந்தைகளின் நுரையீரல் பாதிக்கப்படும். குழந்தை களுக்குக் குளித்த பின் சாம்பிராணி புகை போடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பதற்கு மருத்துவ அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை. குழந்தையின் தோற்றம், நிறம், உடலமைப்பு எனப் பல்வேறு அம்சங்களும் கருவிலேயே ஜீன்கள் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. இத்தகைய மரபியல் காரணங்களால் இந்தியக் குழந்தைகள் கருப்பாகவும், ஆப்ரிக்க குழந்தைகள் அதிகக் கருப்பாகவும், அமெரிக்கக் குழந்தைகள் வெள்ளையாகவும் பிறக்கின்றன. குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தையின் நிறம் செக்கச்செவேர் என மாறிவிடும் என்பது உண்மையானால் உலகம் முழுவதும் நிற வேற்றுமைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.