அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

maatru_maruthuvam_logo_100

தீபா பதிப்பகம்,
29/9-A, பழைய டிரங்க் ரோடு, (TELC சர்ச் எதிர்புறம்),
சாத்தூர் - 6262 203.
தொடர்புக்கு: 94431 45700, 97901 21096

                ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதைப் போல கொழுப்பு சத்து இன்றி எந்த உடலும் இருக்க வாய்ப்பில்லை எனலாம். ஏனெனில் உடல் இயக்கத்திற்கான அடிப்படை தேவையாக கொழுப்பு மற்றும் அதன் வகையைச் சேர்ந்த கொலஸ்ட்ரால் விளங்குகிறது. மனித உடலுக்கு கொழுப்பு பல்வேறு நன்மைகளைச் செய்து நண்பனைப் போல் இருந்து கொண்டு சில நேரங்களில் மிக மோசமான எதிரியைப் போல செயல்பட்டு நமது அஜாக்கிரதையால் உயிருக்கு வேட்டு வைக்கும் வேலையை கச்சி தமாக செய்து முடித்து விடுகிறது.

நன்மைகள் :

                உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை மூடிப் பாதுகாக் கும் சவ்வு உருவா கிடவும் கோடை காலங்களில் உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறி உடலின் வெப்பம் குறைந்து விடாமல் உடல் வெப்பத்தை சீராக பராமரித்து தோல், முடியை ஆரோக்கிய மாக இருக்கவும் வெளிப்புற அதிர்வுகளிலிருந்து உடல் உள் உறுப்புக்களை பாதுகாத்து, உடல் செல்கள் நல்லமுறையில் இயங்கிடவும் ஃபிரிரேடி கல் டேமேஜ் (Free Radical Damage) எனும் செல்களின் சேதாரத்தை தடுத்து மோசமான புற்றுநோய் போன்ற கொடிய நோய் ஏற்படாமல் கவனித்து கொள்கிறது. நாள்தோறும் ஐம்புலன்கள் மூலமாக கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் உச்சிமுதல் பாதம் வரை அமையப் பெற்ற கொலஸ்ட்ரால் உதவியோடு நரம்புகளில் உணர்வு களை கடத்துவது, ஞாபகங்களை சேமிப்பது, தேகம் மென்மையாக அமைவதற்கான திசுக்களை கட்டமைப்பதிலும் ஆண் பெண் புறபாலுறுப்பு களின் வளர்ச்சியை நெறிப்படுத்து வதற்கான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டிரோஜன் புரோகெஸ்டி ரான் ஆகிய ஹார்மோன் உற்பத்தி ஆவதற்கும் சில குறிப்பிட்ட நோய்களிலிருந்து உடல் உறுப்புகள் பாதிக்காத வகையில் தடுத்தும் அன்னிய பொருள் ஏதேனும் இரத்த ஒட்டத்தில் கலந்துவிட்டால் அப்பொருள் ஏதாவது ஒரு வழியில் உடலை விட்டு வெளியேறும் வரை கொழுப்பு திசு அப்பொருளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து உடலின் கடமை தவறாத காவலா ளியாக தனது பணியை பொறுப்புடன் மேற் கொள்கிறது. உடலின் தேவைக்கு போக மீதமுள்ள கொழுப்பு கல்லீரலிலும் உடலின் தோலுக்கு அடியில் உள்ள திசுக்களில் சேமிக்கப்பட்டு பட்டினியின் போது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.

                இப்படி உடலின் இயக்கத்திற்கு ஆதார சக்திகளின் ஒன்றாக திகழும் கொலஸ்ட்ரால் மனித உடலுக்கு எதிரான வேலையில் ஈடுபடுவது எப்படி?

                பார்ப்பதற்கு வெண்மை நிறம் கொண்ட மெழுகு போன்ற தோற்றமுள்ள கொழுப்பு வகையை சேர்ந்த ஒரு பொருள் தான் கொலஸ்ட் ரால். நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்கு வந்து சேர்கிற கொலஸ்ட்ரால் இரத்தத்தில் நேரடியாக கலந்து கரையாது என்பதற்காக உடலுக்குள் வந்து சேர்கிற கொலஸ்ட்ராலுக்கு தகுந்தாற் போல கல்லீரலும் லிபோபுரோட்டின் (Lipo protine) எனும் கொழுப்பு புரதத்தை உற்பத்தி செய்து உடலுக்குள் வந்து சேரும் கொலஸ்ட்ரால் மீது போர்வை போல் படிந்து உடலின் பல பாகங்களுக்கு நகர்த்தி செல்கிறது.

                உணவின் மூலம் உடலுக்கு வந்து சேர்கிற மிகக் குறைந்த அடர்த்தி உள்ள கொழுப்பு புரதத்துடன் கல்லீரலிலிருந்து உற்பத்தியான லிபோ புரோட்டின் சேர்ந்தால் மிக குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு (Very Low Density Protine V.L.D.L) ஆகும். அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு புரதத்துடன் - லிபோபுரோட்டின் சேரும் போது அதிக அடர்த்தி கொண்ட கொழுப்பு ( High Density Lipo Protine H.D.L ) எனப்படும். V.L.D.L இரத்தத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு பயன்பட்டபின் குறைந்த அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.

                (Low Density Lipo Protine L.D.L ) இந்த LDL கொலஸ்ட்ரால் தான் மனிதஉடலுக்கு வில்லனாக திகழ்கிறது. விருந்து, பண்டிகை போன்ற நாட்களில் எண்ணெய், நெய்யில் பொரித்த, வறுத்த உணவு களை அதிகளவு உண்பதால் உடலுக்குள் அதிகள வில் வரும் கொலஸ்டிரால் கல்லீரல் மூலம் உற்பத்தியாகும் லிபோ புரோட்டின் எனும் கொழுப்பு புரதம் இவை இரண்டும் அதிகரிக்கும் போது இயற்கையாகவே L.D.Lகொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து விடும்.

V.L.D.L ஐவிட H.D.L ல் கொழுப்பு புரதம் சற்று அதிகமாக இருப்பதால் இரத்த பிளாஸ்மாவில் உள்ள புரதத்துடன் சேர்ந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கு இரத்த நாளத்தின் உட்புற சுவர் களில் அதிகப்படியான கொலஸ்டிராலை படியச் செய்து விடிகிறது. தொடர்ந்து இம்மாதிரி இரத்த நாளங்களில் படிந்து வருவதின் காரணமாக இரத்த நாளங்களின் உட்புறம் குறுகலாகவும், ரத்தநாளம் தடிமனாகவும் ஆகிவிடுகிறது, இதன் காரணமாக இதயத்திற்கும் மற்ற அனைத்து உடல் உறுப்பு களுக்கும் இயல்பான வேகத்தில் இரத்தம் சென்ற டைவதில்லை. பிராணவாயும் போதுமான அளவு உடலுறுப்புக்களுக்கு கிடைப்பதில் தடையேற் படுகிறது. மூளைக்குச் செல்லும் இரத்த நாளத்தில் தடையேற்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கும் பிற ஏனைய உறுப்பு களின் இரத்த நாளம் பாதிக்கப்படும் போது சம்பந்தப்பட்ட உறுப்புகள் பாதித்து முகப்பரு முதல் ஆண்மைக்குறைபாடு, இரத்தக்கொதிப்பு, மனநிலைபாதிப்பு வரை ஏற்படும்.

                LDL கொலஸ்ட்ராலின் சதிச் செயலை முறியடிக்கும் பணியை HDL கொலஸ்ட்ரால் கூடுமானவரை மேற்க்கொண்டு நண்பனாகச் செயல்படுகிறது. இரத்த நாளங்களில் LDL கொலஸ்ட்ரால் படியவிட்டுச் சென்ற கெட்ட கொலஸ்ட்ராலை சுத்தம் செய்து கல்லீரல் வழி யாக வெளியேற்ற உதவுகிறது. இதனால் மார டைப்பு, இரத்த நாளநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்திட உடலில் HDL கொலஸ்ட்ரால் குறைந்து LDL கொலஸ்ட்ரால் அதிகரிக்க வேண்டும்.

கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணம் :               பரம்பரை, சோம்பேறித்தனம், உடற்பயிற்சி யின்மை, புகை, மதுபழக்கம், மனஅழுத்தம், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் விரும்பி உண்ணுதல், சர்க்கரை நோய், நாள மில்லா சுரப்பிகளின் சமச்சீரற்ற நிலைஆகிய காரணங்களால் கொலஸ்டிரால் அதிகரிக்கிறது.

L.D.L. குறைந்து H.D.L. அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

 • புகை, மது தவிர்க்க வேண்டும்.
 • தினம் நடைபயிற்சி, உடற்பயிற்சி, எடை குறைக்க முயற்சி, யோகசன பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
 • நார்சத்துள்ள உணவு, கீரைகள், தினசரி உணவில் தேவை
 • காளான், ஆப்பிள், இதர பழ வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்
 • பசலைக்கீரை கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்
 • இறைச்சி உணவின் போது நார்சத்துள்ள உணவும் சேர்த்து உண்ண வேண்டும்
 • கடல் வாழ் உயிரினங்களை உணவில் சேர்ப்பது நல்லது
 • பால், பாலிலிருந்து உருவான உணவுப் பொருள்கள் தவிர்த்தல் நல்லது.
 • அதிக மாவுப் பண்டங்கள் கூடாது
 • வெண்னெய், தயிர், நெய் தவிர்க்க வேண்டும்
 • மூளை, ஈரல் போன்ற அசைவ உணவு கூடவே கூடாது
 • ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு 500 மி.லி.எண்ணைக்கு அதிகமாக சமையலில் பயன்படுத்தக் கூடாது.

ஹோமியோபதி சிகிச்சை :

 • அல்லியம் சட்டிவம் 6 தினம் 3 வேளை (கொலஸ்ட்ரால் குறையும் வரை)
 • செலிட்டோனியம் 3 தினம் இருவேளை பொருத்தமான மருந்து தேர்வு செய்து தரப்பட வேண்டும்

மற்ற சில ஹோமியோபதி மருந்துகள் :

                சல்பர், லைகோபோடியம், ரக்ஸ்வாமிகா, பல்சட்டிலா, பைடோலக்கா பெர்ரி, பாஸ்பரஸ், தூஜா, ராவோல்பியா, காலிப்புரோமேடம், அம்மோனியம் மூர், கல்கேரியா கார்ப், கொலஸ்ட்ரினம்.

Pin It
 • எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவனுக்கு வயது 7; இளையவளுக்கு வயது 4. இரண்டு பேருக்கும் சளிபிடிக்காத நாளே இல்லை. இரண்டு பேருக்கும் சேர்ந்தே சளி பிடிக்கிறது. அல்லது இரண்டு பேருக்கும் மாறி மாறி சளிப்பிடிக்கிறது. இவர்களை வயிற்றில் சுமந்த காலம் முதல் இன்று வரை ஆங்கில மருத்துவம் தான் பார்த்து வருகிறேன். நோய் நீங்கிய பாடில்லை. இளையவளுக்கு இப்போது ரட்ங்ங்க்ஷ்ண்ய்ஞ் வரத் துவங்கிவிட்டது. கணக்கு வழக்கு இல்லாமல் பணம் செலவழித்தும் நலம் கிடைக்க வில்லை. ஹோமியோபதி சிகிச்சை மூலம் என் குழந்தைகளை தீராத சளித் தொந்தரவிலிருந்து காப்பாற்ற முடியுமா? -T-சாவித்திரி, பள்ளிப்பாளையம். 
 • மிகுந்த மனஉளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளான உங்களைப் போன்ற பெற்றோர் விழித்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகளைக்கூட நோயாளிகளைப் போல நடத்தும் மருத்துவமே அலோபதி. மரத்திலே காய் கனியும் வரை காத்திராமல் குறுக்குவழியில் பறித்து செயற்கை / ரசாயன முறையில் பழுக்க வைத்து விற்கப்படும் பழங்களைப் போல 100க்கு 90 முதல் 95 விழுக்காடு சிசேரியன் மூலம் குழந்தையை பெறச் செய்கிறது அலோபதி மருத்துவம். பிறந்த நாள் முதல் காலவாரியாக பல தடுப்புந்துகளை பிஞ்சு உடலுக்குள்   செலுத்தி இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலை நிர்மூலம் செய்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஓர் குட்டிப் பிரபஞ்சம். இயற்கையின் ஆற்றல்களும் தன்மைகளும் ஒவ்வொரு குழந்தைக் குள்ளும் உண்டு. 

ஆங்கில ரசாயன மருந்துகள் மூலம் நம் குழந்தைகளின் உடலில் அமைந்துள்ள இயற்கையான (நோய் எதிர்ப்பு)ஆற்றல் தகர்க்கப்பட்டு நோய்கள் முற்றுகையிடுகின்றன. ஆங்கில மருத்துவத்திலுள்ள குழந்தை நல நிபுணர்களிடம் பெற்றோரும் பிள்ளைகளும் கூட்டம் கூட்ட   மாக காத்திருந்து பெறும் சிகிச்சைகளின் ஒட்டுமொத்த பலன் தான் என்ன? உங்கள் பிள்ளைகளே உதாரணம்!

ஹோமியோபதி மருத்துவம் உங்கள் குழந்தைகளுக்கு நோயிலிருந்து முழு விடுதலை அளிக்கும். சமீப ஆண்டுகளாக மத்தியரசு மக்கள் நல்வாழ்வுத்துறை தாய் சேய் நலத்தில் ஹோமியோபதியின் சிறப்பிடம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து வருகிறது. ஆயினும் இது இன்னும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். விரிவான விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டால் உங்களைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களும் குழந்தைகளும் பயனடைவார்கள். அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரைச் சந்தியுங்கள்.

 • சமீபத்தில் ‘ஹீலர்’ ஒருவரின் சொற்பொழிவைக் கேட்டேன். ரத்த அழுத்தம் உள்ளவர் கள் ‘உப்பு’ குறைத்துக் கொள்ளவோ, நிறுத்தவோ அவசியமில்லை. வேண்டியளவு உப்பு சாப்பிடலாம் என்று கூறினார். “இதனால் தற்காலிகமாக ஆ.ட. கூடுவது போல் தெரியும். கவலைப்படாதீர்கள். அதனால் ஒன்றுமில்லை” என்று ஆணித்தரமாக கூறினார். நான் 10 ஆண்டுகளாக பிரஷர் மாத்திரை சாப்பிட்டு வரக்கூடியவன். ‘ஹீலர்’ கூறியதைப் போல சாப்பிடும் முறைகளில் சில மாற்றங்களைச் செய்து,                 சாதம், குழம்பு, காய்கறிகளில் உப்பு சேர்த்து சாப்பிடத் துவங்கினேன். தற்பொழுது பிரஷர் நன்கு ஏறிவிட்டது. தலைபாரம், உடற்சோர்வு, பலவீனம், கிறுகிறுப்பு என       உடலில் பலவிதத் தொந்தரவுகள் வரத் துவங்கிவிட்டன. நான் செய்தது... செய்வது... சரியா தவறா? இயற்கை மருத்துவத்தின் அடிப்படையில்தான் அந்த ஹீலர் ஆலோசனைகள் வழங்குவது போல நினைத்தேன். தாங்கள் கருத்து என்ன?         - K.ராமன், திண்டுக்கல்.
 • உப்பு, சீனி, பால் மூன்றையும் ‘மூன்று வெண்ணிற நஞ்சுகள்’ என்று இயற்கை மருத்துவம் வருணித்து எச்சரிப்பது உலகறிந்தது. ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி பலரது வாழ்க்கைக்குப் பொருந்தாது. உலகின் பலநாடுகளில் மக்கள் மத்தியில் ‘உப்பு’ பற்றிய விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது.

இரத்த அழுத்தம் மட்டுமின்றி, நீரிழிவு நோய், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் பல முக்கிய நோய்கள் அதிகரித்து வருவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாக ‘உப்பு’ அமைந்துள்ளது. இந்த ‘உப்பு’ தொடர்பான சில விவரங்களைத் தெரிந்து கொள்வோம். 

உலகிலேயே முதன் முதலில் கடல்நீரிலிருந்து சோடியம் உப்பைப் பிரித்ùடுத்தவர்கள் எகிப்தியர்களே. அவர்களது மொழியில் ‘நேட்ரான்’ (NATRON) எனப்பெயர் வைத்தார்கள். இறந்த உடல்களை பதப்படுத்துவதற்கு (‘மம்மி’க்களை பாடம் செய்வதற்கு) உப்பைப் பயன்படுத்தினர். ஆதிகாலத்தில் போரில், வேட்டையில் ஈடுபட்ட மனிதர்களுக்கு ‘சோடியம் உப்பு’ கண்டுபிடித்து    புது மாதிரியான அனுபவத்தை தந்தது. 

அன்றைய உடலுழைப்பு சார்ந்த வாழ்க்கை யில் மனித உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறியது. ரத்தத்திலுள்ள சோடியம் உப் பின் சமநிலை அவ்வப்போது குறைந்தது. போர்க் காலத்தில் வீரர்கள் உடல் சோர்ந்து விழும்போது அவர்களின் கையில் உப்புக்கட்டிகள் கொடுக்கப் பட்டன. அதேபோல நாக்கில் சிறிது உப்பு பட்டவுடன் உற்சாகம் ஏற்பட்டுவிடும்.       ஆகவே அப்போது தங்கத்தைவிட உப்பு உயர்வானதாக மதிக்கப்பட்டது. உப்பை (SALT) உழைப்பின் ஊதியமாகப் பெற்ற காலம் உண்டு. நஹப்ற் லிருந்து பிறந்த சொல்தான் SALARY ! 

இன்று ஏன் எல்லா மருத்துவ முறைகளும் உப்புக்கு எதிராகக் கொடிபிடிக்கின்றன? உடலுழைப்பு குறைந்து வரும் காலம் இது. ஒரு பகுதியினர் எப்போதும் உட்கார்ந்த நிலையில், குளிரூட்டப்பட்ட அறைகளில் வேலை பார்க்கிறார்கள்.      பதப்படுத்துவதற்கும், சில உணவுகளில் சற்று சுவை கூட்டவும் பயன்படுத்தத் துவங்கிய உப்பை இன்று உணவுகளில் அதிகளவு சேர்க்கும் நிலை வந்துவிட்டது. ஒரு நபரின் ரத்தத்தில் மொத்தம் 200 கிராம் சோடியம் இருக்கவேண்டும். அதிகமானால் வியர்வை, சிறுநீர் மலம் மூலம் உப்பு வெளியேற்றப்படும். நமது சிறுநீரகங்கள் ஒரு லிட்டர் சிறுநீரில் 2 கிராம் உப்பை வெளியேற்றுகின்றன. (12 கிராம் உப்பை வெளியேற்ற வேண்டுமானால் ஆறு லிட்டர் சிறுநீர் கழிக்கவேண்டும்!)

உடல் குறைபாடு காரணமாக சிறுநீரகம் சோடியம் உப்பை வெளியேற்றுவதில் பலவீனம் ஏற்பட்டால் உடல் பருமன் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிறுநீரக கோளாறு, இருதய அடைப்பு போன்ற அபாயங்களும் ஏற்படக்கூடும்.பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

மனித உடலுக்கு பொட்டாசியம், மெக்னீஷியம், கால்சியம்,   சோடியம் ஆகிய 4 உப்புகள் அத்தியாவசியமானவை. இவற்றில் சோடியம் உப்பை மட்டுமே கடல்நீரிலிருந்து பிரித்துப் பயன்படுத்துகிறோம். சோடியம் உப்பு ஏற்படுத்தும் பல உடல்நலப் பிரச்சினைகளை முன்னிட்டு கடலுக்குள் இருக்கும் பவளப் பாறைகளிலிருந்து கிடைக்கும் மெக்னீஷியம், புரோட் டீன்கள் அடங்கிய ‘கோரல்உப்பு’ (COREL SALT), ஜப்பான், அமெரிக்காவில் பிரபலமடைந்து    வருகிறது. மலைப் பிரதேசங்களில் பாறை வடிவில் கிடைக்கும் சோடியம் மிகக் மிகக் குறைவாகவும், சல்பர், மெக்னீஷியம், கால்சியம் அதிகமாகவும் உள்ள இந்து உப்பை இந்தியாவில் ஒரு பகுதியினர் பயன்படுத்துகின்றனர்.

கடுமையான உடலுழைப்பு இல்லாத நிலையில் தினசரி வெறும் 2 கிராம் உப்பே ஒருவருக்கு போதுமானது. ஆனால் நிலைமை என்ன? காலை முதல் இரவு வரை ஒவ்வொரு நபரும் தேவையைவிட மிக அதிகமாக உப்பை உட்கொள்ள நேரிடுகிறது. உடலில் உப்பு மூலம் சோடியம் அளவு அதிகரிப்பதால் உயிர் அணுக்களை பாதிக்கிறது. ஆண்மை குறைகிறது, கருத்தரிக்கும் வாய்ப்புகளும் குறைகின்றன. எனவே தான், ரத்த அழுத்தம் முதல் மலட்டுத்தன்மை வரை ஏற்படுத்தும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுமாறு மருத்துவங்கள் மன்றாடுகின்றன.

நண்பரே! உங்களைப் போன்றவர்களை உப்பு சாப்பிடுமாறு ஊக்குவிப்பவர் ஹீலரா கில்லரா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். உப்பைக் குறையுங்கள். பாக்கெட் உப்பு வேண்டாம். அதில் 99% சோடியம் உள்ளது. கல் உப்பில் 40% தான் சோடியம் உள்ளது. கல் உப்பை வாங்குங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி குறைத்து உபயோகியுங்கள். ரத்த அழுத்தப் பிரச்சினைக்கு அலோபதி சிகிச்சை வேண்டாம். ஹோமியோபதி சிகிச்சையில் நீங்கள் (வாழ்   நாள் முழுதும் மாத்திரையடிமையாவதை மாற்றி) விரைவில் நலம் பெறமுடியும்.

 • என் மனைவிக்கு கடந்த 3 வருடமாக ஒவ்வொரு மாதமும் பத்துநாட்களுக்கு மேல் ரத்தப் போக்கு ஏற்படுகிறது. இடுப்புவலி, வயிற்றுவலி, கால் கை உளைச்சல், தலை சுற்றல், வாந்தி, சோர்வு ஏற்பட்டு, மிகவும் பலவீனமாக இருக்கிறாள். வயது 29. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது பிரசவத்திற்குப் பின்னர்தான் இந்த மாதிரி அளவுக்கு அதிகமாக மாதப்போக்கு ஏற்படுகிறது. பலவிதமான மருந்து மாத்திரை சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை. கர்ப்பப்பையை எடுத்து விடுங்கள். வேறு தீர்வு இல்லை!என்கிறார்கள். மருந்து மாத்திரைகளில்லாமல் இயற்கை மருத்துவம் மூலம் என் மனைவியின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமா?-T. வரதன், கரூர்.
 • உங்கள் மனைவி போல சில பெண்கள் பெரும்போக்கு காரணமாக அவதிப்பட நேரிடுகிறது. ரத்தம் அதிகளவு வெளியேறுவதால் ரத்த சோகை (ANAEMIA) தாக்குகிறது. மேலும் தலைசுற்றல், மயக்கம், குமட்டல், உடல் அசதி, பலவீனம், உடல் முழுதும் வலி, தூக்கமின்மை, சுரம், இடுப்பு வலி, கால் நரம்புகள் இழுப்பு (CRAMPS), தசைவலி, பதட்டம் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதிகப்போக்கு ஏற்பட அடிப்படையான காரணங்கள் உள்ளன. கர்ப்பப்பை பலவீனம், இயக் குநீர் (HARMONES) சுரப்பிகளில் ஏற்றத் தாழ்வு, மன அழுத்தம், கவலை, கோபம், எரிச்சல், உடற்பயிற்சி யின்மை, சத்துள்ள உணவுகள் சாப்பிடாமை போன்ற காரணங்கள் முக்கியமானவை.

இப்படிப்பட்ட பெண்கள் முதலில் போதுமான ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். ரத்தப்போக்கு நாட்களில் வேகமாக நடப்பது, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது கூடாது; அதிக எடை தூக்கக் கூடாது. ஆடைகளை இறுக்கமாக அணியக்கூடாது. உள்ளாடை அடிக்கடி மாற்றுதல் நல்லது. தினம் மூச்சுப் பயிற்சி உற்சாகம் தரும். காலை முதல் இரவு வரை ஐந்தாறு தடவைகளுக்கு மேல் பழச்சாறுகளை தேன் கலந்த அருந்தவேண்டும்.(முக்கியமாக அத்திப்பழம், பேரீச்சை, மாதுளம்பழம், ஆப்பிள், சப்போட்டா, நாவற்பழம், கருப்பு திராட்சை) வெண்பூசணி சாறு, பீட்ரூட் சாறு, காரட் சாறு, கொத்தமல்லி இலைச்சாறு, கருவேப்பிலைச் சாறு, முள்ளங்கி இலைச்சாறு, அருகம்புல் சாறு ஆகியவற்றில் தேன் கலந்து தினமும் ஒரு சாறு பருகி வரலாம். (இவற்றில் சீனி சேர்க்காதீர்கள்; தயவு செய்து ஐஸ் சேர்க்காதீர்கள், இனிப்பு தேவை எனில் தேன் மட்டும் சேர்க்கலாம்)

வாழைப்பூ கசாயம், மருதம்பட்டை கசாயம், அசோக மரப்பட்டை கசாயம் போன்றவை அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் அற்புத சக்திமிக்கவை. (பொதுவாக துவர்ப்புச் சுவைமிக்க உணவுகள் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும்)

இத்தகைய இயற்கை முறைச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது ... அருகிலுள்ள ஹோமியோ,                சித்த, ஆயுர்வேத, இயற்கை மருத்துவ நிபுணர் யாரையேனும் நேரில் சந்தித்து, ஆலோசனை பெற்று தேவையெனில் (பக்க விளைவு இல்லாத) மருந்துகளும் சேர்த்தே சாப்பிடச் செய்யலாம்.உங்கள் மனைவியின் மாதப்போக்கு சில மாதங்களில் சீராகும்!

 • நான் எடை குறைவாக, ஒல்லியாக இருக்கிறேன். ஓரளவாவது சதை போட வேண்டும் என்று விரும்புகிறேன். என் வயது 23. என் நண்பர்கள் எனக்குக் கூறும் ஆலோசனைகள் 1) வாராவாரம் தவறாமல் நான்கைந்து முறை பீர் சாப்பிட வேண்டும் (பீர் உடலுக்கு நல்லது, எடை கூடும், உடல் குளிர்ச்சியடையும் என்பது அவர்களின் கருத்து) 2) பச்சை முட்டைகளாகத் தினமும் சாப்பிட வேண்டும். 3) சில சத்துமாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த ஆலோசனைகள் என் எடையை அதிகரிக்குமா?                              - K.பத்மராஜன், தஞ்சாவூர்.

 நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்ன பணியாற்றுகிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனால் இக்கேள்வியில் உங்கள் நண்பர்களின் அறியாமையும் உங்களின் அப்பாவித்தனமும் பளிச்செனத் தெரிகிறது. பீர் குடித்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது; எடை கூடும் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். பீர் குடித்தால் தொந்தி விழும்.  

முட்டையைப் பச்சையாகக் குடிப்பதும் நல்லதல்ல. அஜீரணக் கோளாறுகளும் வேறு சில வியாதிகளும் உண்டாகும். உடல் எடையை அதிகரிக்கும் நோக்கோடு எந்தவித மாத்திரை மருந்துகள் எந்த ஆங்கில மருத்துவ நிபுணர் ஆலோசனையின்பேரில் சாப்பிட்டாலும் வீதியில் போகிற சனியனை விலைகொடுத்து வாங்கிய கதைதான். வேண்டாம் விபரீத விளையாட்டு. 

உங்கள் தோற்றம் ஒல்லியாக இருப்பது ஒன்றும் தவறில்லை, ஆரோக்கியமாக இருப்பது தான் முக்கியம். உயரத்திற்கேற்ற எடை என்று உள்ளதா எனப் பாருங்கள். உதரணமாக உயரம் 168 செ.மீ என்றால் 168-100=68 என்று கணக்கிடுங்கள். இதைவிடக் குறைவாக இருந்தால் சற்றே அதிகரிக்க சரியான வழிமுறைகளைச் கண்டுப்பிடியுங்கள். 

தினமும் உடற்பயிற்சி அல்லது யோகாசனப் பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள். அத்துடன் சத்தான உணவுகள், புரதம், மாவு, இனிப்பு, கொழுப்புச் சத்துக்களும் அவசியம். மரபணுக் களும் நாளமில்லாச் சுரப்பிகளும் உடல் எடையை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 • எங்கள் பகுதியில் ஒரு ஹோமியோபதி மருத்துவர், தலைமுடி சம்பந்தமான பிரச்சினைக்காக சிகிச்சை பெறச் சென்றபோது ஷாம்பூ உபயோகிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். ஷாம்பூகளில்லாமல் தலைமுடியைச் சுத்தமாகப் பராமரிக்க முடியுமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஷாம்பூ களால் எவ்வித நன்மையும் இல்லையா? -N .ஜெயஸ்ரீ, திருவாடானை.
 • ஷாம்பூ மட்டுமின்றி இன்றைய நவநாகரிக உலகில் குவிக்கப்பட்டுள்ள எண்ணற்ற அழகு சாதனப் பொருள்கள் எதிலும் குறிப்பிடத்தக்க நன்மைகள் ஏதுமில்லை. விளம்பரங்களின் கவர்ச்சி வலையில் மக்கள் மீள முடியாமல் வீழ்ந்துவிடுகின்றனர். ஷாம்பூ உபயோகித்தால் சுத்தமாவது மட்டுமின்றி தலைமுடியை தரைவரை வளரச்செய்து தவழவிடலாம் என்று விளம்பரங்கள் புளுகித் தள்ளுகின்றன. ஒரு பானம் குடித்தால் உங்கள் பிள்ளைகள் உயரமாக வளரும் என்கிறார்கள். மற்றொரு பானம் குடித்தால் உங்கள் பிள்ளைகள் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்று அகிலத்தை ஆளுவார்கள் என்கிறார்கள். ஒரு கிரீம் பூசினால் ஒரு சில வாரங்களில் கருப்பு நிறம் சிவப்பாக மாறிவிடும் என்கிறார்கள். இவை போன்ற விளம்பரங்களின் பின்னால் உள்ள உண்மைக்குப் புறம்பான பித்தலாட்டங்களால் வெகுவாக பாதிக்கப்படுவது படித்த, நடுத்தர வர்க்கத்து மக்களே.

முடியின் தன்மை அவரவரது பாரம்பரியம், வயது, உடல் ஆரோக்கிய நிலை போன்றவற்றினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புகளால் உலர்ந்த கூந்தலில் ஈரப்பசையினை உண்டாக்கவோ, பட்டுப்போல் மென்மையாக மாற்றவோ இயலாது. சேதமடைந்த முடிகளைப் புதுப்பிக்க ஷாம்புகளால் முடியாது. ஏனென்றால் ஷாம்பூ என்பது தண்ணீர், டிடர்ஜெண்ட், எண்ணெய், வாசனைப் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த கலவையாகும். ஷாம்புகளில் வரும் நுரைக்கும், முடி & தலைதோலின் சுத்தம் & சுகாதாரத்திற்கும்   எந்தச் சம்பந்தமுமில்லை.

தலைத்தோல் அரிப்பு, படை, பொடுகு உள்ளவர்கள் ஷாம்பூ பயன்படுத்திக் கொண்டே சிகிச்சையும் சேய்து வந்தால் நிச்சயமாகத் தோற்றுப் போவீர்கள். ஒருக்காலும் நலம் கிட்டாது.சுத்தமான சீயக்காய் பொடி, கடலை மாவு, பாசிபயறுமாவு போன்றவை எவ்விதத் தீங்கும் ஏற்படுத்தாத இயற்கையான பொருட்கள். இவற்றை ஷாம்பூக்கு பதில் பயன்படுத்துங்கள்.

 • எனக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளாகின்றன. வயது 33. கணவரின் வயது 37.           ஏழு வயதில் பையன் இருக்கிறான். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் இரண்டாம் தடவையாக கருவுற்றேன். கருத்தரித்தது தெரியாமலேயே சிறுநீர் தொற்று (Urinary infection) க்காக தொடர்ச்சியாக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டேன். பிறக்கப் போகும் குழந்தைக்கு அதனால் மூளைவளர்ச்சியின்மை உள்பட குறைபாடுகள் ஏற்படக்கூடும் என்று டாக்டர் எச்சரித்ததால் கருக்கலைப்பு செய்துவிட்டேன் இன்றுவரை அதன்பின் கர்ப்பம் ஏற்படவேயில்லை. டாக்டர் கருக்கலைப்பு செய்து கொண்டதால் தான் இந்த பாதிப்பா? இதற்குத் தீர்வு தான் என்ன? - N. லட்சுமிசிவராஜ், வத்தலகுண்டு. 
 • ஹிஸ்ட்ரோ சால்பிஞ்சோ கிராம் அல்லது லேப்ராஸ்கோபி சோதனை செய்து கருக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என்று பாருங்கள் பொதுவாக எம்.டி,பி. எனப்படும் Medical Termination of `Pergnanacy செய்யும்போது Fallobian Tube அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு அப்படி ஏற்பட்டால் கருவுறுதல் சாத்தியமில்லை.

ஒருவேளை அடைப்பு ஏதுமில்லை என்று சோதனைமூலம் தெரியவந்தால் மிண்டும் கருவுறுவதில் பிரச்சினை எதுவு மிருக்காது என்றாலும் ஆங்கிலமருத்துவத்தில் DC செய்து கொள்ளுமாறு கூறுவார்கள். இதன்பின் குழந்தை பிறக்கக் கூடும் எனக் காத்திருப்பார்கள். ஆரம்பம் முதல் செய்ததவறுகள் போலவே இதுவும் அமையும்.

அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். மிச்சசொச்சமுள்ள கருவுறும் வாய்ப்பை அலோபதி சிகிச்சைகள் மூலம் இழந்து விடாமல் ஹோமியோபதி மூலம் உங்களிடம் இன்னொரு அழகிய பூ மலரட்டும்! நம்பிக்கையோடு ஹோமியோபதி சிகிச்சைக்குச் செல்லுங்கள்.

 • எங்குபார்த்தாலும் கற்றாழை ஜøஸ், கற்றாழை சோப், கற்றாழை களிம்பு, கற்றாழை பானங்கள் என்று விற்கப்படுகிறதே! கற்றாழையில் அப்படியென்ன விசேசம்? எங்கள் பகுதியில் இப்போது கூட கிராமப்புறங்களில் வீடுகளின் முன்புறம் திருஷ்டி பரிகாரமாக கற்றாழையைக் கட்டுகின்றனர். கற்றாழை திருஷ்டிப் பொருளா? மருந்துப் பொருளா? - J. கஜேந்திரன், பரமக்குடி. 
 • “நாள்பட்ட புண், வயிற்றுவலி, மூலம், மலச்சிக்கல், வயிறு நோய்கள், பூச்சிக்கடி, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களுக்கு கற்றாழையைக் கொடுக்கலாம்” என்று அரிஸ்டாடில் கூறியிருப்பதிலிருந்து இது எவ்வளவு தொன்மையான, வலிமையான இயற்கை மருந்து எனப் புரிந்து கொள்ளலாம். 

உண்மையில் கற்றாழை எந்த வீட்டில் உள்ளதோ அங்கே நோய்கள் நெருங்காது. மரணம் தள்ளிப்போகும். எனவே வீட்டு முன்பு கற்றாழையைக் கட்டிவைக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட விஷயம் வேறு விதமாகப் பொருள் கொள்ளப்பட்டுவிட்டது. கற்றாழை எனப்படும் இந்த அன்னிய நாட்டுச் செடி நான்காம் நூற்றாண்டில்தான் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது.

அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் கற்றாழை கொஞ்சம் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாந்தி, வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறு போன்ற பலவித வயிற்று கோளாறு காரக்கு சிறந்த நிவாரணி இது.

கற்றாழையில் வைட்டமின், என்சைம்கள், மினரல் மற்றும் அமினோ ஆசிட் எல்லாம் உள்ளன. காயங்கள் . புண்கள் மீது கற்றாழை மருந்தைத் தடவினால் விரைவில் ஆறுகின்றன.

காயங்களால் ஏற்படூம் வலியை நீக்குகிற சக்தியும் கற்றாழைக்கு உள்ளது. காயங்களின் உள்ளே துழைந்திருக்கும் பாக்டீரியா, ஃபங்கஸ், வைரஸ் போன்ற கிருமிகளையும் கற்றாழை அழித்தொழிக்கும். 

மேலும் கற்றாழையில் உள்ள ஆண்ட்டிசெப்டிக் ஏஜெண்ட்டுகள் நம் தோலின் வறட்சியைப்     போக்கி ஈரத்தன்மை ஏற்படுகின்றன. அரிப்பை நீக்குகின்றன. தோலிலுள்ள நச்சுத் தன்மை

நீங்கி ரத்த ஒட்டம் அதிகரிக்கச் செய்கிறது. கற்றாழையின் பலன்கள் இன்னும் ஏராளம் உள்ளன! 

 • அக்குப்பிரசர் மூலம் மலச்சிக்கல் குணமாகுமா ? எங்கள் வீட்டில் பெரியவர்கள், சிறியவர்கள் வித்தயாசமின்றி எல்லோருக்கும் மலச்சிக்கல் ஒருபெரிய பிரச்சினையாக உள்ளது. கைப்பக்குவமாக பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. அக்குப்பிரசர் செய்துபார்த்தால் பலன் கிடைக்குமா டாக்டர்? - M. கார்குழலி, மன்னார்குடி. 
 • நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும். போதியளவு நீர் அருந்தாமையால், உணவில் நார்ச்சத்து இல்லாமையால், துரித உணவுகளால், பேக்கரிப் பண்டங்களால், உடற் பயிற்சியின்மையால் மலச்சிக்கல் ஏற்படுவதால் இவற்றை சரிசெய்ய வேண்டும். 

ஆள்காட்டி விரலின் கடைசியில் LI-4 என்ற புள்ளியிலும், கீழுதட்டின் அடியில் முகவாயில் உள்ள புள்ளியிலும் தொப்புளுக்கு கீழே 2 விரல் அகலம் தள்ளி உள்ள புள்ளியிலும், தொப்புளுக்குப் பக்கவாட்டில் 3விரல் அகலம் தள்ளி உள்ள புள்ளிகளிலும் சிலநிமிடம் தினமும்       காலை, மாலை அழுத்தம் தரவேண்டும். மலச்சிக்கல் மட்டுமின்றி வேறுபல அஜீரணத் தொந்தரவுகளும் சேர்ந்து குணமாகும். புள்ளிகள் இடத்தைக் கண்டறிவதில், பிரசர் கொடுப்பதில் குழப்பம், தயக்கம் இருப்பின் அருகிலுள்ள தகுதியும் அனுபவமும் நிறைந்த அக்குப்பிரசர் தெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெறுங்கள். 

 • என் நண்பண் வயது 22. அவனுக்கு பெண்களைப் போல முகத்தில் மீசை வளராமல் வாளிப்பாக உள்ளது. இதனால் அவனுக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டு யாருடனும் கலகலப்பாகப் பேசிப் பழகுவதில்லை அவனது அக்காவிற்கு வயது 24. அவர்களுக்கு முகத்தில் ஆண்களைப் போல மீசை அரும்பியுள்ளது. அது அவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனால் சங்கோஜமும் தாழ்வு மனப்பான்மையும் கொண்டு சந்தோசமேயில்லாமல் இருக்கிறார்கள். இவர்களின் தாயார் சமீபத்தில் டைபாய்டு சுரத்தால் பாதிக்கப்பட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை பெற்றார். தற்போது சுரம் இல்லை. ஆனால் அவருக்கு எப்போதுமில்லாதளவுக்கு முடிகொட்டுவதால் அதிர்ச்சி யடைந்துள்ளார். அருகிலுள்ள பியூட்டி பார்லர்களை நம்பிப் பணம் செலவழித்தும் இவர்கள் அனைவருக்கும் வேதனைதான் மிச்சம் . இப்பிரச்சினைகளைத் தீர்க்க மாற்றுமருத்துவ சிகிச்சை உள்ளதா?- L. நாராயணன், வில்லாபுரம், மதுரை. 
 • நண்பர் நாராயணன் அவர்களே! உங்கள் நண்பர் மற்றும் அவரது அக்கா, அம்மா மூவரின் முடிப் பிரச்சினைகளும் விரைவில் முடிவு காணக் கூடிய பிரச்சினைகளே! அழகு நிலையங்களிலோ, அலோபதி சிகிச்சையிலோ இப்பிச்சினைகளுக்கு விடைகாண முடியாது. ஹோமியோபதி மருத்துவம் ஒன்றுதான் மூவரின் பிரச்சினைகளுக்கும் முற்றுப் புள்ளிவைக்க உதவும். 

                 ஆணுக்கு அழகூட்டி, கம்பீரம் ஏற்படுத்தும் ஆண்மை அடையாளமாய் அமைவது மீசை. மீசை முளைப்பதற்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன்தான் காரணம். இது சுரக்கா விட்டால் அல்லது குறைவாக சுரந்தால் மீசை முளைப்பதில் பிரச்சினை வரும். ஹோமியோபதியில் தைராய்டினம், நேட்ரம்முர், செபியா மற்றும் சில மருந்துகள் உறுதியாக மீசை அரும்பச் செய்யும். 

                 முகத்தில் மீசை வளர்ந்துள்ள பெண்களுக்கு ஆண் ஹார்மோன்கள் சற்று அதிகரித்ததன் விளைவு அது. தூஜா, ஒலியம் ஜெகோரி யஸ் ஆகிய ஹோமியோ மருந்துகள் மீசை முடிகளை மறையச் செய்து பெண்ணின் இயற்கையான முக்அழகை மீட்டு வழங்கும். 

                 சிலருக்கு டைபாய்டு சுரத்திற்குப் பின் முடிகொட்டும். உங்கள் நண்பரின் அம்மாவிற்கு ஆசிட் புளோர் (Acid Flour)30 இ என்ற ஹோமியோ மருந்து நிவாரணமளிக்கும். முடிஉதிர்தல் முடிவுக்கு வரும். அருகிலுள்ள ஹோமியோ மருத்துவரை அணுகி மூவரும் அவரது ஆலோசனை பெற்று மருந்துகள் உண்பது விரைவான நலம் பெற உதவும். 

 • எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களாகிறது. முதல் 2 வருடம் உறவு இனிமை யாக இருந்தது. ஓரு குழந்தைக்குத் தந்தை ஆனேன். மனைவி கருவுற்றபோதும், பிரசவித்த பிறகும் பலமாதம் தனித்திருந்தேன். பின்னர் தான் பிரச்சினை ஆரம்பித்தது. எழுச்சி முன்பு போல இல்லை; உறவின் நேரமும் சுருங்கி விட்டது. என் மனைவியைப் பொறுத்தவரை குழந்தை பெற்றபின் செக்ஸில் விருப்பமே இல்லாதவளாக மாறி விட்டாள்! என் வற்புறுத்தலுக்கு இணங்கினால் மதனநீர் சுரக்காமல் அவள் வலியை உணர்கிறாள். எங்களது தாம்பத்திய உறவு பழங்கதை போல ஆகிவிட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். மாற்று மருத்துவத்தில் எங்களின் பாலியல் நலப் பிரச்சினை களைத் தீர்க்க வழியைக் கூறுங்கள். - பால்கணேசன், காரைக்கால். 
 • பாலியல் நலச் சிக்கல்களைத் தீர்க்க வயாகரா போன்றவை ஆங்கிலமருத்துவம் விஞ்ஞானப் போர்வையில் சிபாரிசு செய்யும் வன்முறைத்தனமான மருந்துகளாகும். இப்பிரச்சினைகளைச் சிறப்பாக, இயற்கையாக, பக்கவிளைவு இன்றித் தீர்ப்பதற்கு ஹோமியோபதி உள்ளிட்ட மாற்றுமருத்துவங்களே ஏற்றவை. 

       நீங்கள் இருவரும் சர்க்கரைநோய் உள்ளதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.மன அழுத்தம், பரபரப்பு குழப்பங்களுக்கு இடமில்லாத அமைதியான சூழல் உறவுக்கு உகர்ந்தது. ஆண்களின் எழுச்சிசக்தியை மேம்படுத்த Selenium, Conium, Ustilago, Agnus Castus, Damiana போன்ற பல ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. ஹோமியோ மருத்துவர் மேற்பார்வையில் இம்மருந்துகளில் உங்களுக்குரியதை தேர்வு செய்து சிகிச்சை பெறுங்கள்.

       பெண்களின் ஒருபகுதியினருக்கு மாதவிடாய் முற்றுப் பெற்ற (Menopause) பிறகும் பாலுணர்வு விருப்பம் குறையாமல் நீடிக்கிறது. ஒருபகுதியினருக்கு ஒருகுழந்தை பெற்றதும் குறைந்து விடுகிறது. குழந்தையை பராமரிப்பது, குடும்பவேலைகள் போன்ற காரணங்களால் மனநிலை, உடல் நிலையில் பெண்களுக்கு மாற்றம் ஏற்பட்டு பாலுறவு விருப்பம் சரிந்து விடுகிறது. காரணமறிந்து, பிரச்சினையின் தன்மையறிந்து பெண்களின் உடலுறவு விருப்பத்தை இயற்கையாக மீட்பதற்கு, மதனநீரை சுரக்கச் செய்வதற்கு, உறவின் போது ஏற்படும் வலித்துயரை நீக்கி உறவில் பரவச உணர்வை உருவாக்குவதற்கு ஹோமியோபதி மருந்துகள் உள்ளன.தம்பதியர் இருவரும் அருகிலுள்ள ஹோமியோபதி மருத்துவரை அணுகுங்கள். மீண்டும் உங்கள் இல்லத்தில் தாம்பத்தியஉறவு செழிக்கட்டும்.

Pin It

                        எல்லா நதிகளும் ஒன்றாய் சங்கமிக்கும் இடம் கடல். அது போல எல்லா மருத்துவ முறைகளுக்கும் மனிதனை நலமாக்குதல் (CURING) ஒன்று தான் இறுதி இலக்கு என்று பொத்தாம் பொதுவாய் கருத்து கூறப்படுவதுண்டு. மரம் செடி  கொடிகளையும் உயிர்களையும் அழித்து, வீடுகளை அழித்து, நகரங்களை நிர்மூலமாக்கி பெரும்துயரத்தை ஏற்படுத்தி விட்டு ஒங்காரக் கூச்சலோடு கடலில் விழும் நதிகள் உண்டு. தனக்கென்று தனிப்பாதை வகுத்து உயிர்களை, பயிர்களை அழிக்காமல் அமைதியாய் ஒடிக் கடலோடு கை குலுக்கும் நதிகள் உண்டு. இவ்விரு வகை நதிகளை யும் ஒன்றாய் எடுத்துக்கொள்ள முடியுமா? எல்லா மருத்துவ முறை களுக்கும் ஒரே இலக்கு என்பதை ஏற்க முடியுமா?

                        உலக நல நிறுவனத்தின் தெளிவான வரை யறையின்படி மனிதன் உடல் ரீதியாக மட்டு மின்றி மனரீதி யாகவும், சமூகரீதியாகவும் நலமாக இருப்பதையே நலம் என்றும் ஆரோக்கியம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆங்கில மருத்துவம் உடல்ரீதியான சிகிச்சையை மட்டுமே பிரதானமாகக் கொள்கிறது அதிலும் ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள், பின் விளைவுகளிலிருந்து யாரும் எளிதில் தப்பி விட முடியாது.

                        ஆங்கிலேயர்கள் காலனியாதிக்கம் செலுத் திய பல நாடுகள் விடுதலையடைந்துவிட்ட பின் னரும் ஆங்கில மருத்துவ முறையிலிருந்து விடுபட முடியவில்லை. ஒவ்வொரு நாட்டின் தாய்மருத்து வங்களும், மாற்றுமுறை மருத்துவங்களும் மக்களிடம் பரவிச் செல்வாக்குப் பெறும்போது மட்டுமே ஆங்கில மருத்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை கிட்டும் தற்போது  ஒருங்கிணைந்த மருத்துவம் என்ற அணுகுமுறை குறித்து பல நாடுகள் கொள் கையளவில் விவாதித்து ஏற்றுக்கொள்கின்றன. அப்படியொரு அணுகுமுறை நடைமுறைக்கு வருமாயின் ஆங்கில மருத்துவத்தின் ஒரு சில அம்சங்களையும், அறுவை சிகிச்சையையும் சேர்க்க வேண்டிய  அவசியம் ஏற்படும். ஆயிணும் ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படையான அணுகுமுறை - தத்துவப்பார்வை மட்டுமே ஒருங்கிணைந்த மருத்துவத்தினை வழிநடத்தத் தகுதி யானது. அத்த கைய காலச்சூழல் வருங்காலத்தில் வரக்கூடும்.

       இன்றைய நிலையில் ஆங்கி லச் சிகிச்சை யின் பக்க விளைவு களை, பின் விளை வுகளை ஒவ்வா மையைக் குண மாக்க ஹோமி யோபதி மருந்து கள் பயன்படுகின் றன. இயற்கை நோய்களை மட்டுமின்றி மருந்து, மாத்திரைகள், ரசாயனப் பொருட்கள், போதைப் பொருட்கள், நச்சுப் பொருட்களால் ஏற்பட்ட உடல்நலக் கேடுகளையும் ஹோமியோபதி மருந்துகள் அகற்றி நிவாரணமும், நலமும் அளிக்கின்றன. அத்தகைய ஹோமியோ பதி மருந்துகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஆர்சனிகம் ஆல்பம் 30C :

       ஆங்கில எதிர்உயிரி (Antibiotics)  மருந்து களால் ஏற்படும் ஒவ்வாமை, அதிகளவு ஆங்கில மருந்துகள் (Drug Overdoses)  எடுத்துக் கொண்டதால் ஏற்படும் பின்விளைவுகள், மார்பின், ஹெராயின், மயக்கமூட்டும் பிற போதைப் பொருட்களுக்கு அடிமையான நிலை, புற்றுநோய் சிகிச்சைக்குரிய ஹீமோதெரபின் பக்கவிளைவுகள் ... போன்றவற்றிற்கு ஆர்சனிகம் ஆல்பம் பயன்படும். ஆர்சனிகம் ஆல்பம்  நோய்க்குறிகள் குளிரிலும், நண்பகல் மற்றும் நள்ளிரவிலும் அதிகரிக்கும். வெப்பத்திலும் , வெப்பமான உணவு, வெப்பமான பானங்களிôலும் குறையும்.

ஆர்னிகா 200C:

                         அலோபதி மருந்து மாத்திரைகள் காரண மாக ஏற்படும் வலிப்பு நோயை ஆர்னிகா குணப் படுத்தும். (சில ஆங்கில மருந்துகள் மூளையில் தேவையற்ற தூண்டல்கள் ஏற்படுத்த, தசைகளைத் தன்னிச்சையாக சுருங்கி விரிவடையச் செய்து வலிப்பை ஏற்படுத்துகின்றன.)

காட்சியம் 30C :   புற்றுநோயாளிகளுக்கு ஆங்கில முறைச் சிகிச்சையில், ஹீமோ தெரபி மற்றும் கதிர்வீச்சுச் சிகிச்சை (Che-motherahpy and Radiation Theraphy)  அளிக்கப்படுவதால் ஏற்படும் குமட்டல், கருநிற வாந்தி மற்றும் கடுமையான இதர பக்கவிளைவு களை முறிப்பதற்கு காட்மியம் சல்ப் பயன்படும். இத்தகைய குறிகளுடைய நோயாளிகள் பலரும் எதுவும் சாப்பிட இயலாமல் துயருற்று மாண்டு போகிறார்கள். காட்மியம் சல்ப் இவர்களைக் காப்பாற்ற உதவுகிறது.

ஜெல்சியம் 200C :                    ஆங்கில மருந்து, மாத்திரைகளால் ஏற்பட்ட தூக்கமின்மை, ஒவ்வாமைக்காகப் போடப்படும் ஊசி மருந்துகள் (Allergy Injections)   ஏற்படுத்தும் வியாதிக்குறிகள் போன்றவற்றிற்கு ஜெல்சிமியம் சிறந்து.

லேடம்பால்30C :  ஊசி குத்தியதால் ஏற்படும் வீக்கத்தில் குளிர்உணர்ச்சியும், தொடமுடியாதளவு வலியும் இருத்தல், ஸ்டீராய்டு, கார்டிசோன் ஊசி மருந்து களுக்கு ஏற்படும் பின் விளைவுகள், பல்சிகிச்சை யின் போது போடப்படும் மயக்க ஊசியால் ஏற்படும் தாடைப்பிடிப்பு (Jaw Stiffness)   போன்ற வற்றிற்கு லேடம்பால் பயன்படும். (கார்டிசோன் மருந்தின் பின் விளைவாக உடலில் உப்பு மற்றும் நீர் தங்கி வீக்கங்கள் ஏற்படுகின்றன.)

பாஸ்பரஸ் 30C :

       போதைப் பொருட்கள், மயக்க மருந்துகள் காரணமாகத் தோன்றும் அதி ஒவ்வாமை (Hyper Sensitivity) உடனடி திருப்திக்காக குறிப்பிட்ட சில மருந்து மாத்திரைகளை அடிக்கடிச் சார்ந்து விட்ட அடிமை நிலை (Drug Dependency) உட்கொள்ளும் மருந்துகளின் நாற்றம் வியர்வையில் ஏற்படுதல் ஆகியவற்றிற்கு பாஸ்பரஸ் பயன்படும். 

சல்பர் 30C:     ஆங்கில மருந்திகளால் குறிப்பாக எதிர் உயிரி மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் தோல்பாதிப்புகள், நீண்ட நாள் மருந்து மாத்திரை உபயோகத்தால் உண்டான மலச்சிக்கல், தூக்க மின்மை போன்ற பிரச்சனைக்களுக்கு சல்பர் ஏற்றது. ஆங்கில மருந்துகள் உண்டாக்கிய நோய்க் குறிகளை நீக்குவதோடு ,அவை உள்ளமுக்கப்பட்ட (Suppressed) நோய்க் குறிகளை விடுவித்து, வெளியேற்றி நலமளிக்கக் கூடியது சல்பர்.

தூஜா 30C :

       தடுப்பூசிகள் (Vaccinations) போட்டபின் தோள் மற்றும் மேற் கை பகுதிகளில் ஏற்படும் வீக்கம், புறப்பாடுகள், (eruptions) அமைதியின்மை, பதட்டம், தூக்கமின்மை, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, கண்வலி, தலைவலி. வலிப்பு, பேச்சு இழப்பு (Loss of Speech)  போன்ற பிரச்சனைகளுக்கு தூஜா நல்ல நிவாரணம் அளிக்கும்.

Pin It

மருத்துவ துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், மருத்துவ வசதி இல்லாத காலத்தோடு ஒப்பிடும் போது, இன்றைய காலத்தில் சுகப்பிரசவம் குறைந்து வருகிறது. இதுதவிர, குறை பிரசவம், எடை குறைவாக குழந்தை பிறத்தல் என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சரியான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் பல்வேறு சிக்கல்களை தவிர்க்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபற்றி பார்ப்போம். 

                   பெண்கள் கருவுற்றது முதல் குழந்தையை பெற்றெடுக்கும் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டும். அதற்கு காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பால், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள பொருட்களை வழக்கத்தைவிட சற்று கூடுதலாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் ஊட்டச் சத்துள்ள உணவை உட்கொண்டால்தான் குழந்தை ஆரோக்கியமுடன் வளரும். 

                   அத்துடன் சுகப்பிரசவத்துக்கும், குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரப்ப தற்கும் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. கர்ப்பிணிகள் இதுபோன்ற சத்துள்ள உணவுப்பொருட்களை கூடுதலாக எடுத்துக் கொண்டால் அவர்களது உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன், கருவில் வளரும் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். 

                   அதே நேரம் உடல் எடையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். 10 கிலோவுக்கு மேல் எடை கூடினால் அதுவும் ஆபத்தானது. பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படும். குறிப்பாக, உடல் பருமனான கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோல், நெய், வெண்ணெய், பாலா டை, ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய், இறைச்சி, வனஸ்பதி ஆகிய கொழுப்புச் சத்து நிறைந்த உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளக் கூடாது. குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. 

                        குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொண்டு அவர்களது ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்து கொள்வது நல்லது. இதன்மூலம் சுகப் பிரசவம் ஏற்படுவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.

Pin It

       மணிக்கட்டின் மேற்பகுதியில் (Dorsal surface) காணப்படும் முண்டு போன்ற வீக்கம் நரம்பணுத்திரள் வீக்கம்  அல்லது நரம்பு முடிச்சு வீக்கம் எனப்படுகிறது. (போயரிக் இதனை An necysted tumour on a tendon எனக் கூறுகிறார்) இத்தகைய முண்டு வீக்கம் மணிக்கட்டின் மேல்புறத்திலோ, (on top of wrist)  கீழ்ப்புறத்திலோ , விரல்கள் முடி வடையும் மூட்டு களிலோ அரிதாக பாதங்களிலோ உருவாகக்கூடும். இது நோயின் விளைவாக தோன்றிய மெல் லிய சுவருள்ள திசுப்பை (cyst) இதனுள்ளே திரவச்சுரப்பு நிரம்பியிருக்கும். இது உருவாவதற் கான தெளிவான காரணம் இன்னும் தெரிய வில்லை என்று அலோபதி மருத்துவம் குறிப்பிடுகிறது.

       இந்த மணிக்கட்டு வீக்கம் பெரியளவில் காணப்பட்டால் வெளிப்படையாக எல்லோரும் பார்க்ககூடிய வகையிலும் விகாரமாகவும் தெரியும்; தோல் பரப்பின் அடியில் சிறிய வடிவத்தில் அமைந்திருந்தால் பிறர் பார்வைக்குட்படாத போதிலும் வலியை ஏற்படுத்திக் கொண்டேயிருக் கும். சிலருக்கு இவ்வலி மணிக்கட்டுப் பகுதியில் (Localised)  மட்டும் நிற்கும் சிலருக்கு இவ்வலி கைவிரல்களிலோ, கையிலோ ஊடுருவிப் பரவி வேதனை தரும்.

       ஆங்கில மருத்துவத்தில் இவ்வீக்கத்திலுள்ள திரவச்சுரப்பை நீக்க, வீக்கத்தை அகற்ற அறுவைச் சிகிச்சை (Gangilonectomy)  வரை மேற்கொள்ளப்படு கிறது. இருப்பினும் இச்சிகிச்சைக்குப் பிறகும் இவ்வீக்கம் மீண்டும் வர வாய்ப்புள்ளது. ஹோமி யோபதி மருத்துவத்தின் அறுவைச் சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. சில பிரத்யோக மருந்துகளும், குணம் குறிகளுக்கேற்ற மருந்துகளும் பயன்படுத்தி நிலையான, நீடித்த பலனைப் பெற முடிகிறது. பக்க விளைவு இல்லாமல், கத்தியோ ஊசியோ காயப் படுத்தாமல், எதிர் உயிரி மருந்துகள் (Anitbiotics)  இல்லாமல், உடம்யில் தழும்பு ஏற்படுத்தாமல் அகவயமான காரணங்களை அகற்றி வீக்கத்தை வற்றச் செய்து . நிரந் தர குணம் பெற முடிகிறது.

  மணிக்கட்டு நரம்பணு முடிச்சு வீக்கத் திற்கும் பயன் படும் முக்கிய முன்று மருந்து கள் ரூடா (Ruta) பென் ஜாயிக் ஆசிட் (Ben-zonic Acid) சிலிகா (Sililca) வீக்கத்து டன் வலியும் இணைந்து துயரப்படுத்தும் போது ரூடா உயர்வீரியம் அற்புதமான பலன் தருகிறது. இருப்பினும் ரூடா 200C வீரியத்திலேயே விகிச்சையைத் துவங் கலாம். ஒரிரு வாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாவிட்டால் உயர்வீரியத்திற்கு சென்று பயன் பெறலாம். இவ்வீக்கத்தில் யூரியா அமிலத்தன்மை (Uricacid Diathesis) காணப் பட்டால் பென் ஜாயிக் ஆசிட் மருந்தும் கால்சியப் படிவங்கள் காணப்பட்டால் கல்கேரியா கார்ப் மருந்தும் தேவைப்படுகின்றன. மருத்துவர் கிளார்க் சல்பர் CM  வீரியத்தில் காலை நேரத்தில் ஒரு வேளை மருந்து மூலம்.. மூன்று வார காலத்தில் மணிக்கட்டு நரம்பு முடிச்சு வீக்கத்ஙதைக் குணப்படுத்தலாம் என அனுபவச் சான்றுடன் சுட்டிக்காட்டுகிறார்.

Ganglion  வீக்கத்தைக் குணப்படுத்த ரூடா. பென் ஜாயிக் ஆசிட், சலிகா, சல்பர், கல்கேரியா கார்ப் போன்ற மருந்துகள் மட்டுமின்றி கல்கேரியா புளோர், தூஜா, பாஸ்பரஸ், ஆர்னிகா , ஸடிக்டா, நேட்ரம் மூர் போன்ற மருந்துகளும் உதவுகின்றன.

Pin It