வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் வசிக்கும் கவிஞர். துரை சரவணக்குமார் அவர்கள் எழுதியிருக்கும் "நிலவின் முதுகு" தன்முனைக் கவிதைகளின் தொகுப்பு தமிழுக்கு புதுவரவு.

ஹக்கூ, சென்ரியூ லிமரைக்கூ போல, தன்முனைக் கவிதை வடிவத்தில், நான்கு வரிகளில் கவிதைகளை கருத்து செறிவோடு எழுதியுள்ளார்.thavathurai selvan bookவேலூர் மாவட்ட கவிஞர்கள் மத்தியில் தன்னுடைய முதல் கவிதை தொகுப்பிலேயே தன்முனைக் கவிதைகள் தொகுப்பை படைத்து தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்திருக்கிறார், இளம் படைப்பாளி கவிஞர். துரை. சரவணகுமார் அவர்கள்.

கவிதை தொகுப்பில் சொல்ல வந்த கருத்தை நான்கு வரிகளில் எளியச் சொற்களை அடுக்கி அபாரமாக கருத்தை சொல்லியிருக்கிறார்.

இயற்கை, காதல், தன்னமிக்கை, விடாமுயற்சி, அன்பு, பணிவு, துணிவு போன்ற கருத்துக்களை உள்ளக்கிய கவிதை தொகுப்பாக இருக்கிறது.

தன்முனைப்பில் ......

"பண்பை மறந்தாலும்
துறவிக்கு இழப்பில்லை
அன்பைத் துறந்தால்
பிறவிக்கு பயனில்லை."

"கசக்கி எறிந்த பின்னும்
கமழ்கின்ற நறுமணம்
மனிதருக்கு மலர்கள் தரும்
மிகச் சிறந்த மன்னிப்பு."

"பிள்ளைப் பேறு அற்றவர்களை
மனத்தாலும் பழிக்க வேண்டாம்
மகரந்தம் இல்லாத பூக்களும்
மண் மீது பேரழகே." - என்கிறார்.

இதுபோல நிறைய கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. காதல் பற்றிய தன்முனைக் கவிதைகளை எழுதுவதில் தமிழில் தனக்கென ஒரு இடம்பிடிப்பார். காதல் கவிதைகளில்

"காதல் வெள்ளம் மீறுவதால்
அணை அணை என்கிறாய்
காதல் கைதி நான்
பிணை பிணை என்கிறேன்".

மற்றொரு கவிதையில்,

ஒரு முத்தம் போதுமா
அத்தனையும் மறக்க
ஒன்றை துவக்கி வை
அத்தனையும் துறக்க - என்கிறார்.

தன்முனைக் கவிதை தொகுப்பு என்றாலும் பெரும்பாலும் தன்முனைக் காதல் கவிதை தொகுப்பாக எழுதியிருக்கிறார்.

மேலும் சில காதல் கவிதைகள்...

"நான் கொடுத்த காதல்
பூவில் ஒரு கனித்துளி
நீ கொடுத்த சாதல்
பாலையில் ஒரு பனித்துளி." என்கிறார்.

"அவள் சூடிய மல்லிகை
அடுப்பங்கரையில் ஒன்று விழுந்தது
தேன் திட்டு என்றே அதை
எறும்பு எடுத்துச் சென்றது."

"காதலிக்க நேரமில்லை
என்கிறாய் நீ
பறப்பதற்கு நேரமில்லை என்றால்
அது பறவைக்கு அழகா". என்கிறார்.

"ஒவ்வொரு மனிதனுக்கும்
கருப்புப் பக்கம் உண்டு
நிலவின் காட்டாத
முகத்தைப் போல." - புத்தகத்தின் தலைப்பிற்கான கவிதை அருமையாக எழுதியுள்ளார்.

மேலும் இத் தொகுப்பில் மிகச் சிறப்பான கவிதைகளை தந்து சிறப்பான தொரு தன்முனைக் கவிதைத் தொகுப்பாக தந்திருந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

நூல் : நிலவின் முதுகு
ஆசிரியர்: தவத்துரை செல்வன்
வெளியீடு : நீர்க்கண்ணாடி பதிப்பகம்
விலை : 110

- கவிஞர் மு.பிரபு, வேலூர்.