சாக்கிய முனி புத்தர்
விலை ரூ.60

‘நான்கு பார்ப்பனிய தத்துவக் கோட்பாடுகளையும் புத்தர் கடுமையாக எதிர்த்துச் சாடினார். ‘எதார்த்த உலகத்தில் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவே இவ்வுலக இயக்கம். துன்பத்துக்குக் காரணம் மனித மனங்களே அன்றி வேறில்லை’ என்று அறிவுடன் போதனை செய்தார். பார்ப்பனியக் கோட்பாடுகளைத் தகர்த்தெறியப் பாடுபட்ட புத்தர், எப்படி மகாவிஷ்ணுவின் அவதாரம் ஆவார்? இது புத்தரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாதவர்களின் திரிபுவாதமாகும்.’

ஆசிரியர் : முருக சிவகுமார், பக்கங்கள் : 160,விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2

தும்பிகள் மரணமுறும் காலம்
விலை ரூ.60

‘கிராமத்தின் குணங்களை கேலி பேசுவதாகத்தான் கடந்த கால வரலாறு அமைந்துவிட்டது. கற்றவர்கள், நகரத்தில் வாழ வாய்ப்பு பெற்றவர்கள், நாலு விஷயம் தெரிந்தவர்கள், தங்களின் மேதமையை இந்த எளிமையான மனிதர்களை வைத்தே நிரூபித்துக் கொண்டார்கள். கிராம மனிதர்களை மாற்றுகிறோம் என்கிற எல்லாவித முயற்சியும், அவர்களை மேலும் பாதாளத்தில் தள்ளியது அல்லது அவர்களை இடம்பெயரச் செய்து, நகரத்தில் ஒரு நவீன அகதியாக அல்லது செல்வந்தர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஒரு கூலியாக மாற்றியது.’

ஆசிரியர் : ரா. பச்சியப்பன், பக்கங்கள் : 128 வெளியீடு : பொன்னி, 2/1758, சாரதி நகர், என்பீல்டு நிழற்சாலை, மடிப்பாக்கம், சென்னை-600 091

மார்க்சியம் பெரியாரியம் தேசியம்
விலை ரூ.60

கருத்துப் போராட்ட எழுத்துக்களில் தனி முத்திரையைப் பதித்துள்ள இந்த மார்க்சியச் சிந்தனையாளர், தமிழ்த் தேசியவாதிகள் சிலரை எதிர்கொள்ளும் முறை பாட்டாளி வர்க்க சர்வதேசியம், பெரியாரின் புரட்சிகரச் சிந்தனை, தேசிய இனச் சிக்கல், தமிழ்ப் பண்பாடு, தேசங்களின் உருவாக்கம் முதலியன குறித்த ஆழமான விளக்கங்களாக விரிவடைகின்றது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் படைப்புகளில் இதுவரை தமிழுக்கு அறிமுகமாயிராத சில பகுதிகளுக்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.’

ஆசிரியர் : எஸ்.வி. ராஜதுரை. பக்கங்கள் : 136. வெளியீடு : விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் (வடக்கு), கோயம்புத்தூர் 15 பேசி : 0422-2576772

வேலைக்கு ரெடியா?
விலை ரூ.45

‘வேலை தேடுவதையே வேலையாகக் கொண்டுள்ள எத்தனையோ இளைஞர்கள், எங்கே தவறு செய்கிறோம் என்று யோசித்திருந்தால், யோசித்த அந்த வினாடியே ஏதாவது வேலையில் அமர்ந்திருக்கலாம். அதிகம் படிக்காத சிலருக்கு வேலை கிடைப்பதும், அதிகம் படித்திருந்தாலும் பலருக்கு வேலை கிடைக்காமல் போவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. நேர்காணலுக்கு செல்கிறவர்கள் எப்படி செல்ல வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? போன்ற அடிப்படை விஷயங்கள் இந்நூலில் அலசப்பட்டுள்ளன. ‘

ஆசிரியர் : மா. ஆண்டோ பீட்டர், பக்கங்கள் : 112. வெளியீடு : சாப்ட்வியூ பப்ளிகேஷன்ஸ், ‘தமிழ்க்குடில்’, 118, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை 29

சாவேஸ்
விலை ரூ.90

மக்கள் என்ற கருத்தானது, திட்டவட்டமான உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மழுப்பலானதாகவோ அரைகுறையானதாகவோ இருக்கக் கூடாது. ஒரு மக்களினம் வாழ்வதற்கு, அவர்கள் ஒரே வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டவர்களாக இருப்பதும், ஒரே பிரதேசத்தில் வசிப்பது மட்டும் போதாது. நாம் அனைவரும் ஒன்று என்ற உணர்வையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த மக்கள் பொதுவான நீரூற்றிலிருந்து நீர் பருகுபவர்களாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பொதுவான சமூக செயல்திட்டத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.’

தமிழில் : சொ. பிரபாகரன், பக்கங்கள் : 192, வெளியீடு : பாரதி புத்தகாலயம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018. பேசி : 044 24332424

மறுவாழ்வு
நன்கொடை ரூ.10

‘என்னதான் நமது சட்டங்களும் சனநாயகமும் சமத்துவம் பேசினாலும், அரசாங்கப் பணியாகவே இருந்தாலும்கூட மலம் அள்ளும் தொழில் சாதிப் பணியாகவே எஞ்சியுள்ளது. சட்டம் போட்டு இதன் மிக மோசமான வெளிப்பாடுகளை களைய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும், அத்தொழிலின் மீது சார்த்தப்பட்டுள்ள சாதி அடையாளத்தைப் பற்றிப் பேச -அரசும், நம்மில் பலரும் எல்லா நேரங்களிலும் முற்படுவதில்லை. ‘

ஆசிரியர் : ஜனகப்பிரியா. பக்கங்கள் : 48. வெளியீடு : அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழு, வினோபா கிராமம், கல்லமநாயக்கன்பட்டி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
Pin It