சங்கிகள் அடாவடியை எதிர்த்து - அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன
பா.ஜ.க.-இந்து முன்னணி அடா வடியை எதிர்த்து அனைத்துக் கட்சி களும் களத்தில் இறங்கும் நடவடிக்கை திருப்பூரில் தொடங்கி இருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி பள்ளி நூலகத் திற்கு தன்னார்வலர் பெரியார் புத்தகங்களை கொடையாக வழங்கியதை எதிர்த்து பள்ளிக்கு அத்துமீறி நுழைந்து ஆசிரியர் களை மிரட்டிய பாஜகவினர்!
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் பெரியார் புத்தகம் மொத்தமாக விநியோகம் செய்ததாகக் கூறி, பள்ளியை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்துக்கு தன்னார்வலர்கள் புத்தகங்கள் வழங்கி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெரியார் எழுதிய, ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் சுமார் 2 ஆயிரம் பிரதிகளை தன்னார்வலர் ஒருவர் வழங்கினார்.
இதனை அறிந்த திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை யில் பாஜகவினர் சுமார் 10 பேர் பள்ளி வளாகத்துக்கு வந்து, புத்தகங்களை யாருக்கும் தரக் கூடாது என்றனர். மொத்த மாக எதற்காக 2 ஆயிரம் பிரதிகள் வழங்கினார்கள் என, பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரிடம் கேள்வி எழுப்பி தகறாறு செய்துள்ளனர்.
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்களை மிரட்டி ரவுடித்தனம் செய்த சமூக விரோத பாஜக வினரை கைது செய்ய வலியுறுத்தி திவிக சார்பில் திருப்பூரில் திவிக மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமையில் 13.11.2021 அன்று காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை மனு காலை 11 மணிக்கு அளிக்கப்பட்டது.
திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சி இந்து முன்னணி போன்ற மதவெறி அமைப்பு களின் அராஜக போக்கையும், அத்து மீறல்களை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் 12.11.2021 வெள்ளிக்கிழமை திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் முயற்சியில் இந்திய கம்னியூஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி இந்து முன்னணி போன்ற மதவாத அமைப்பு களின் அராஜக அத்துமீறல்கள் மற்றும் ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் வழங்கப் பட்டதை எதிர்த்து சட்ட விரோதமாக பெண்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து ஆசிரியர்களை மிரட்டிய பாஜக, இந்து முன்னணியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு செல்வது என அனைத்துக் கட்சிகளின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக முகில் இராசு (மாவட்ட தலைவர் திவிக), ராமசாமி (தெற்குப் பகுதி பொறுப்பாளர் திவிக), மாரிமுத்து (வேலம் பாளையம் பகுதி கழகப் பொறுப்பாளர் திவிக) ஆகியோர் கலந்து கொண்டனர்.
பங்கேற்ற அமைப்புகள் : திருப்பூரில் கே.சுப்பராயன் எம்.பி, தலைமையில் வெள்ளியன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் திமுக சார்பில் டி.கே.டி. மு. நாகராசன், என். தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர். கிருஷ்ணன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நாகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன், கொமதேக, முஸ்லிம் லீக், தமுமுக, த.பெ.தி.க., தி.க, உள்பட அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ். பற்றி காமராஜர்
“குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்து தீருவேன் என்றே சொல்கின்றான். அவன்தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைக்கிறார்கள். என் வீட்டுக்குத் தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். என் வேலையை நான் செய்தே தீருவேன்.”
- 11.12.1966 சேலம் பேருரை. நவசக்தி 15.12.1966
ஆர்.எஸ்.எஸ். பற்றி காந்தி
“‘வார்தா’ ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் அழைப்பின் பெயரில் காந்தி பார்வையிட சென்ற போது காந்தியின் சீடர் காந்தியிடம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நல்ல சேவைகளை செய் கிறார்கள் என்று சொன்ன போது. காந்தியார் அளித்த பதில் என்ன தெரியுமா?
“ஹிட்லரின் நாசிப்படையும், முசோலியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.”