ladyபெண்களை இழிவாக பேசியதாக எவனோ பிஜேபியை சேர்ந்த அனாமத்து சங்கி கூமுட்டை கொடுத்த புகாரின் அடிப்படையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் மீது சென்னை குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஒரு கட்சியின் தலைவரின் மீது புகார் கொடுக்கும் போது அதில் உள்ள உண்மைத் தன்மையை அறிந்து புகாரை பதிவு செய்யும் அளவுக்குக் கூட தமிழக காவல்துறையினரிடன் அறிவில்லையா இல்லை சங்கிகள் என்ன புகாரை யார் மீது கொடுத்தாலும் அதை பதிவு செய்வதுதான் அதன் வேலையா என்ற கேள்வி எழுகின்றது.

திருமாவளவன் மீது பதிவு செய்த வழக்கை விசாரிப்பதற்கு முன் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்தது என்பது பற்றி முதலில் விசாரிக்கப்பட வேண்டும். தமிழக காவல்துறையில் பல காவிகள் காக்கிக்குள் ஒளிந்திருக்கின்றது என்ற முற்போக்கு இயக்கங்களின் குற்றச்சாட்டு எவ்வளவு உண்மையானது என்பது இதன் மூலம் வெளிப்பட்டு இருக்கின்றது.

தன் வாழ்நாளில் தன்மானம், சுயமரியாதை போன்ற வார்த்தைகளை கேட்டறியாத சங்கி கும்பல் திருமாவளவன் அவர்கள் பேசியதை வெட்டியும் ஒட்டியும் அவர் இந்துப் பெண்களை இழிவு படுத்திவிட்டார் என திட்டமிட்டே பொய்யுரைத்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் எப்பொழுதெல்லாம் சங்கிக்கும்பல் இந்து மதத்தை அவமதித்து விட்டார்கள் என கூக்குரல் இடுகின்றதோ அப்பொழுதெல்லாம் அது மேலும் மேலும் அம்பலமாகி அதன் ஆபாச அயோக்கியத்தனம் ஊர் சிரித்து இருக்கின்றது.

இந்துமதம் பெண்களை தெய்வமாக வணங்குகின்றது என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சொல்லும் சங்கிகளும் சங்கிகளின் அடிவருடிகளும் முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்கப் பார்க்கின்றார்கள். உண்மையில் இன்று தென் இந்தியா முழுவதும் தாய் தெய்வ வழிபாடுகள் பெரிய அளவில் இருப்பதற்கும் அது மதிக்கப்படுவதற்கும் காரணம் அவை இந்த மண்ணில் ஏற்கெனவே இருந்த தாய்வழிச் சமூகத்தின் நீட்சியாக இருப்பதுதான். தமிழில் கொற்றவை வழிபாடு இதற்கு சிறந்த உதாரணம்.

இன்று தமிழர்கள் அங்கம்மா ,அங்கலம்மா,அம்மன் ,அம்மாரி, அரிக்கம்மா, அன்னம்மா, ஈலம்மா, உடலம்மா, ஊரம்மா, எல்லம்மா, எர்ரம்மா, ஏழைகாத்தம்மா இசக்கியம்மன் என பல பெயர்களில் தாய் தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.

இவை எல்லாம் பெரும்பாலும் கொலையில் உதித்த தெய்வங்கள் ஆகும். இவைகளுக்கு எந்தவித பார்ப்பன ஆபாச புளுகு கதைகளும் கிடையாது. இந்தக் கோயில்களில் பெண்கள் தீட்டாக கருதப்படுவது கிடையாது. ஆனால் பார்ப்பனியம் பெண்களை தீட்டாக, அருவருக்கதக்கவர்களாக போதிக்கின்றது

பொதுவாக இந்துமதம் என்றில்லாமல் எல்லா மதங்களுமே பெண்களின் உரிமைகளை நிராகரிக்கின்றன. இதற்கு காரணம் அனைத்து மதங்களும் தாய் வழி சமூக அமைப்பு தகர்ந்து தந்ததைவழி சமூக அமைப்பு உருவான காலத்தில் ஏற்பட்டதாகும். மதங்கள் அனைத்தும் ஆணின் பார்வை வழியே சொல்லப்பட்டதால் அந்தச் சமூக அமைப்பில் பெண்களின் இடம் எவ்வாறு இருந்ததோ அதையே தான் அவர்கள் பிரதி பலித்தார்கள்.

இன்று தீட்டாகவும், அருவருப்பானதாகும் கருதப்படும் மாதவிலக்கு என்பது எல்லா காலங்களிலும் அவ்வாறு பார்க்கப்படவில்லை என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆணாதிக்க தந்தை வழி சமூக அமைப்பு ஏற்படுவதற்கு முன்பு மாதவிலக்கு என்பது புனிதமானதாகவே கருதப்பட்டு வந்தது. மாதவிலக்கு இரத்தம் என்பது வளமையின் குறியீடாக பார்க்கப்பட்டது.

தாந்திரீகத்தில் மாதவிலக்கு ரத்தத்திற்கு காபுஷ்பம் என்று பெயர். இந்தச் சொல்லானது தாவரங்களுடனான உறவைக் காட்டுவதாகும். பெண் குழந்தையைப் பெறுவதுபோல, இச்செடியும் பூத்துக் காய்க்கிறது. பெண் பிறப்புறுப்பு செடி அல்லது லதா என்று அழைக்கப்பட்டது. கருவுறுதலுக்கு முன்னர் மாதவிலக்கு நிகழ்வது போலக் காய்ப்பதற்கு முன்னர் பூ பூக்கிறது என்று நம்பப்பட்டது இதனால் மாதவிலக்கு இரத்தம் புஷ்பம் என்றும் அழைக்கப்பட்டது.

“மாதவிலக்கு இரத்தம் மனித விருத்திக்கு அடிப்படையாகவும், வளமையின் குறியீடாக வும் தொல்பழங்கால தாய்வழிச் சமூகத்தால் கருதப்பட்டது. விதைப்பதற்கு முன்பு தங்கள் வயல் வெளியில் ஒரு கல்லை நட்டு அதற்கு குங்குமம் பூசுகின்றார்கள். இந்த குங்குமம் என்பது மாதவிலக்கு இரத்தத்தின் குறியீடு ஆகும். இதன் மூலம் வயல்களில் உற்பத்தியை பெருக்க முடியும் என அவர்கள் நம்பினர்.

பண்டையக் காலத்திலும், மத்திய காலத்திலும் வாழ்ந்த இயற்கைவளம் சார்ந்த சிந்தனையாளர்களான அரிஸ்டாட்டில், பிளினி போன்றோர் மாதவிலக்கு நின்ற பின்னர் கருப்பையில் தேங்கியிருக்கும் இரத்தத்திலிருந்து கரு உருவாகிறது என்று கருதினார்கள்.

தாம்சன், “மனித இனவிருத்தி சார்ந்த மந்திரத்தில் அதன் முடிவு (குழந்தை) பற்றிக் கவனிப்பதில்லை. அதில் இடம்பெறும் செயல் முறைக்குத்தான் (பிரசவக் கழிவுகள், மாதவிலக்கு இரத்தம்) அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. எனவே மாதவிலக்கு இரத்தம், பிரசவக் காலக் கழிவுகள் ஆகியன பெண்ணிடம் உள்ள உயிர்ச் சத்தியின் வெளித்தோற்றங்கள் என்று கருதப்படுகின்றன. தொல்பழங்காலக் கருத்துப்படி மாதவிலக்கு என்பது குழந்தைப் பேற்றிற்கு ஒப்பதான செயலாகும்” என்கின்றார்.

“இந்தியாவின் பிற்கால மதங்களில் இந்தப் தொல்பழங்கால நம்பிக்கைகள் இடம் பெற்றிருந்தன. வானம் இடித்து முதல் மழைத்துளி விழும்போது பூமித்தாய் மாதவிலக்காகித்தான் கருவுறுவதற்கு வேண்டிய செழிப்பை உருவாக்கிக் கொள்கின்றாள் என்று வங்காளத்தில் நம்பப்படுகிறது. அப்போது உழவு, விதைப்பது, பிற விவசாய வேலைகள் எல்லாவற்றையும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அந்த நாளில் கொண்டாடப்படும் சடங்கு ‘அம்வுவசி’ எனப்படுகிறது.”

“இதே போலத் திருவனந்தபுரத்தில் கோயிலில் அவ்வப்போது ஒரு முக்கிய சடங்கு இடம் பெறுகின்றது. இதற்கு ‘திரிப்புக்கரட்டு’ சடங்கு அல்லது சுத்தி செய்தல் என்று பொருள். இது அம்மன் மாதவிலக்காகிறாள் என்பதைக் குறிக்கிறது. இது ஆண்டொன்றிற்கு எட்டு அல்லது பத்துத் தடவை நிகழ்கிறது. அம்மன் உலோகச் சிலையைச் சுற்றி அணியும் துணியில் மாத விலக்கின் போது உண்டாகும் இரத்தக் கறைகள் காணப்படுகின்றன. (அவ்வாறு நம்பப் படுகின்றது) இத் துணியை வஞ்சிப் புழா அல்லது தளவூர் பட்டியில் உள்ள பெண்களுக்கு அனுப்பிச் சோதிக்கிறார்கள்.

இக்காலத்தில் கர்ப்பக்கிரகம் மூடப்பட்டு சிலை தனிக் கொட்டகையில் வைக்கப்படுகிறது. இத் துணியை பெண் சலவைத் தொழிலாளி வெளுத்தபின் அவளே எடுத்துக் கொள்கிறாள். அது மறுபடியும் பயன்படுத்தப்படுவதில்லை. சாயம் போன இத்துணிக்கு மிகுந்த தேவை உண்டு. இது ஒரு புனிதச் சின்னமாக விளங்குவதால் பெண்கள் விரும்பி வாங்குகின்றனர்.”

“அதேபோல சங்கனூரில் பார்வதியின் மாதவிலக்கிற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அஸ்ஸாமில் காமக்கியாவும் இது போன்றதாகும்.உற்பத்தி, இன விருத்தியை ஒன்றாக்கும் மந்திர நம்பிக்கைகள் தாந்திரீகத்துடன் தொடர்புடையவை என்றால், மாதவிலக்கு இரத்தத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் இயல்பானதே” என்கிறார் ஆய்வாளர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா.

எப்போது இந்திய சமூகத்தில் பார்ப்பனியம் ஒரு மதமாக கோலோச்சியதோ அப்போதில் இருந்துதான் பெண்கள் பற்றிய மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்தன. இந்துமத புராணங்கள் இந்திரனுடைய பிரம்மஹத்தி தோஷத்தில் மூன்றிலொரு பாகத்தை பெண்கள் ஏற்றுக் கொண்டதால் அவர்கள் பூப்படைந்ததாக கூறுகின்றது.

இதனால் மாதவிடாய் ஆன பெண்கள் பிரம்மஹத்தி வடிவை அணிந்து கொண்டிருப்பவள் என்று சொல்லப்பட்டது. மேலும் பெண்கள் எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும் அவர்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டதால் தாழ்ந்த குலமாகவே கருதப்பட்டனர். இதனால் சொர்க்கம் செல்லும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. எட்டு வயதுக்குள் பெண்களுக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்துவிட வேண்டும். அப்படி பூப்படையும் காலம்வரை செய்யாதிருப்பது பெரும் குற்றத்திற்குரிய தண்டனையாகக் கருதப்பட்டது.

பூப்படைவதற்கு முன் பெண்ணை திருமணம் செய்து கொடுக்காத தந்தை அப்பெண்ணின் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் மாதவிடாயை பருக வேண்டும் அல்லது “பிராமணனுக்கு” கொழுத்த பசுவை தானமாகக் கொடுத்துவிடவேண்டும்.

பெண்களின் மீது எவ்வளவு வன்மம் நிறைந்த பார்வை பார்ப்பனியத்துக்கு இருந்திருந் தால் இப்படியொரு தண்டனையை வழங்கியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். பெண் களுக்கு இந்துமதம் சம உரிமையை கொடுத்திருக்கின்றது என்று பேசிக்கொண்டே அவர்களின் அத்தனை உரிமைகளையும் புராண புரட்டுகளின் மூலம் பறித்தது பார்ப்பன இந்துமதம்.

புராணங்களை எழுதியவன் எல்லாம் யார் என்று தெரியாது, அதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது, உள்ளபடியே இந்துமதம் பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்தே பார்க்கின்றது என்று சண்டைக்கு வருபவர்களுக்கு சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதிய தெய்வத்தின் குரல் என்ற நூலை படித்து உண்மையை தெரிந்து கொள்ளலாம். அதில்

“ஆலயங்களுக்கு உள்ளேயே நடக்கிற அநாசாரங்களை என்னைத் தவிர யாரும் எடுத்துச் சொல்லமாட்டார்கள் போலிருக்கிறது. அதையும் நானே சொல்கிறேன். இப்போதெல்லாம் டூரிஸ்டுகள், 45, 50 நாள் யாத்திரை கோஷ்டிகள், காலேஜ் பெண்கள், ட்ரெயினிங் ஸ்கூல் பெண்கள் என்று பலர் கூட்டம் கூட்டமாகக் கோயில்களுக்கு பஸ்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் எத்தனையோ பேர் விலகியிருக்க வேண்டிய காலத்திலும் தரிசனத்திற்கு வந்து விடுகிறார்கள்.

இப்படி செய்வது தோஷம் என்று தெரியாததாலேயே பெரும்பாலும் கோயிலுக்கு வந்து விடுகிறார்கள். முன்பெல்லாம் வீட்டு விலக்கு என்று அவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும் கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்து விடுகிறார்கள். ‘ஸ்வாமிக்கு ஏது தீட்டு?’ சீர்திருத்தக்காரர்கள் நான் சொல்வதை ஆட்ஷேபிக்கலாம்.

தீட்டு இல்லாத சுவாமி எங்கேயும் இருக்கிறார். அவரைக் கோயிலில் தான் வந்து தரிசிக்க வேண்டுமென்பதில்லையே? சாஸ்திரப் பிரகாரம் ஸ்வாமியின் சாந்நித்தியத்தைக் கிரகித்துத் தரும் கோயில்களில், அந்த சாஸ்திரங்கள் சொன்ன விதிப்படிதான் ஸ்வாமியைத் தரிசிக்க வேண்டும். இந்த விதிகளை மீறுவதால்தான் பல மகாஷேத்திரங்களில், விபத்து, விபரீதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்” என்றும்,

“இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்திரீகள் ஆஃபீஸுக்குப் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. ‘அட்மாஸ்ஃபைரிக் பொல்யூஷ்ன்’ (Atmospheric Pollution) என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக் காட்டி எதிர் நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள். அந்தப் ‘பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்திரீகளின் தீட்டே. அது செய்கிற கெடுதல் வெளியிலே தெரியாததால் அதைக் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள்.

கவனிக்கிறவர்களையும் ஆசாரப் பைத்தியங்கள் என்று ஒதுக்குகிறார்கள். வாஸ்த்தவத்திலோ இந்தத் தீட்டு அமங்கள சக்திகளையெல்லாம் இழுத்துக் கொண்டு வரும். அதை இப்படி எல்லா இடத்திலும் கலக்க விட்டால் ஜனங்களுக்கு எத்தனை தான் வரும்படி வந்தாலும், கவர்ன்மென்ட் எத்தனைதான் Five Year Plan போட்டாலும் தேசத்தில் துர்பிக்ஷமும், அசந்தியும், வியாதியுமாகத்தான் இருக்கும்” என்றும் கூறுகின்றார்.

உலகத்தில் இருக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் பெண்ணின் மாதவிலக்குத்தான் காரணம் என்று பார்ப்பன தெய்வத்தின் குரலாய் நின்று சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஒலிக்கின்றார். இவனுக்கு பெயர்தான் இந்துமத தலைவன். இன்று திருமாவளவனுக்கு எதிராக கம்பு சுற்றும் எவனும் இந்த கேடுகெட்ட அயோக்கியத்தனமான விமர்சனத்துக்கு பதில் சொல்ல மாட்டார்கள்.

தன்மானமும் சுயமரியாதையும் உள்ளவர்கள் பார்ப்பனியத்தின் இந்த கேடுகெட்ட ஈனச்செயலுக்கு எதிராக வரலாறு தோறும் போராடியே வந்திருக்கின்றார்கள். அதேபோல சூடுசுரணையற்ற நக்கிப்பிழைக்கும் நாய்கள் வரலாறு தோறும் தன்னை பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று இழிவு செய்யும் கேடுகெட்ட மனுவையும் அதை வழிமொழியும் புராண குப்பைகளையும் ஆதரித்தே வந்திருக்கின்றார்கள்.

என்ன எண்ணிகையில் இது போன்ற அற்பபதர்கள் அதிகம் இருக்கும் தைரியம்தான் பார்ப்பன அதன் பாதம்தாங்கிகளை துணிந்து பொய்யுரைக்க தூண்டுகின்றது.

அது போன்ற சூனிய மண்டைகளுக்கு கீழே உள்ள மனுவின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று புரிந்துகொள்வது கடினம்தாம். மனு சொல்கின்றான்

எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது.(10 : 147)

இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது (10 : 148).

இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக. (10 : 154).

அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு.(9 : 14).

நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை.(9 : 15).

இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).

படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்' (9 : 17).

மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சமஸ்காரங்கள் மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளையுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர உபதேசமும் கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (9 : 18).

தன்மானமும் சுமரியாதையும் உள்ளவர்கள் மனு உன்னை பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று இழிவு செய்கின்றது என்று ஆவேசமாக அவனுக்கு மானரோச உணர்ச்சி உண்டாக வேண்டும் என்று கத்துகின்றோம் ஆனால் பார்ப்பன அடிவருடிகளோ நாங்கள் அதை பெருமையாக நினைக்கின்றோம் என்கின்றார்கள்.

அதைத்தான் பெரியார் சொன்னார் “மானமுள்ள ஒருவன் ஆயிரம் பேரிடம் பேசி வென்றுவிடுவான் ஆனால் மானமற்ற ஒருவனிடம் ஆயிரம் பேர் பேசினாலும் வெல்ல முடியாது” என்று. இன்று திருமாவளவனுக்கு எதிராக கம்பு சுற்றும் கோஷ்டிகள் எல்லாம் இந்த வகையை சார்ந்ததுதான்.

- செ.கார்கி 

 

Pin It