வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!
கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!
அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!
தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா?
- குற்றமும் தண்டணையும்
- பொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்
- வெங்காயம்!
- தீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை
- புலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா
- பெரியாரியம்: வேர்களைத் தேடி...
- பெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’
- கருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...
- பெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்
- விவரங்கள்
- எழுத்தாளர்: பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்
வாளினை எடடா!
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.