periyar and kamarajarஜெர்மனியின் மொத்த ஜனத்தொகை 66000000 (ஆறுகோடியே அருபது லக்ஷம்). இதில் 3 கோடியே 21 லக்ஷம் ஆண்கள். பெண்கள் 3 கோடியே 39 லக்ஷம். ஆகவே பெண்கள் ஆண்களை விட 18 லட்சம் பேர்கள் அதிகமாய் இருக்கிறார்கள். பெண்கள் அடுப்பங்கரைக்கும், படுக்கை அறைக்குத்தான் லாயக்கென்று சொல்லி இந்தியப் பெண்களைக் கூட அந்தப்படி நினைக்கும்படி செய்துவிட்ட ஹிட்லரே இந்த 18 லக்ஷம் பெண்களைப் பாதிரியாகச் சொல்லுகின்றீர்களா? அல்லது சங்கராச்சாரிகளாகவும், மடாதிபதி, தம்பிரான்களாகவும் ஆகச் சொல்லுகிறீர்களா? அல்லது ஆளுக்கு 60,000 பெண்களை கலியாணம் செய்து கொண்ட தசரத மகாராஜாவைப்போல் ஒரு ஐம்பது தசரத மகாராஜாவை சிருஸ்டிக்கிறீரா? என்ன செய்யப் போகிறீர். மற்றும் இந்தப் பெண்கள் சராசரி 4 வருஷத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெற்றாலும் வருஷம் 4.5 லக்ஷம் பிரஜைகள் அதிகமாகுமே. ஆதலால் அதை தடுக்க என்று கர்ப்பத் தடைப் பிரசாரம் செய்வதற்காக இவர்களை கன்னியா மாடத்துக்காவது அனுப்ப உத்தேசித்து இருக்கிறீரா?

(பகுத்தறிவு துணைத் தலையங்கம் 02.09.1934)

Pin It