2001 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னை தமிழ்நாட்டின் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 33,36,695. தொடர்ந்து கோயம்புத்தூர், வேலூர் மாவட்டங்கள் அதிக எழுத்தறிவு பெற்றோரை உள்ளடக்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கன்னியாகுமரி மாவட்டம் தான் எழுத்தறிவில் முதலிடம் பெற்றிருந்தது. இப்போது அந்த மாவட்டம் 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எழுத்தறிவு குறைந்த மாவட்டமாக பெரம்பலூர் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை வெறும் 2,86,197 தானாம்.

Pin It