சில நாட்களுக்கு முன் செய்தித் தாளை பார்க்கையில் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அந்த தகவலை உங்களோடு பகிர விரும்புகிறேன். நீங்கள் மின் வெட்டினால் பாதிக்கப்பட்டவர் என்றால் இது உங்களுக்கு பயன் தரும்.

பொதுவாக நம் மாநிலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் காற்றாலைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் அதிகமாக இருக்கும். தற்போது 3400 MW  வரை தயாரிக்கப்படுகிறது.  ஆனால் இதை முழுமையாக உபயோகிக்க முடியவில்லை. TANGEDCO (TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD) கடந்த வாரம் மட்டும் இரு முறை கிட்டத்தட்ட 500 MW  மின்சாரத்தை வீணாக்கியுள்ளது.   இது எப்படி என்று பார்ப்போம். TANGEDCO வில் தற்போது உள்ள கட்டமைப்பு  வசதியில் 2900 MW  மட்டுமே மின்சாரத்தை   கடத்தும் திறன் உள்ளதால்  காற்றாலைகள் மூலம் தயாரிக்கப்பட்ட 3400 MW  மின்சாரத்தில் 2900 MW  மட்டுமே எடுத்துக் கொண்டு மீதி உள்ள 500  MW  மின்சாரத்தை வீணாக்கி உள்ளது. இந்த ௦500  MW   மின்சாரம் இருந்தால் இந்த மின் தட்டுப்பாட்டை ஓரளவிற்கு சமாளித்து விடலாம்.

தற்போது   உள்ள மின் தேவை 10,000 MW. ஆனால் பல்வேறு முறைகளில் தயாரிக்கப்படும் மின் அளவு 11,000 MW.  இத்தனைக்கும் தற்போது நீர் மின் நிலையங்களில் தயாரிக்கப்படும் மின் அளவும் மழை மற்றும் நீர் வரத்துகளில் அணையை திறந்து விடுவதால் கடந்த காலங்களை விட அதிகரித்து உள்ளது. எனினும் மோசமான கட்டமைப்பு  வசதிகளால் முழுமையாக மின் உற்பத்தியை உபயோகப்படுத்த முடியாமல் வீணாக்குகிறோம்.

காற்றின் மூலம் மின் ஆக்கியின் (GENERATOR ) உதவியோடு மின் சக்தி பெறப்படுகிறது.

மிகு  மின்அழுத்த மேல்நிலை செலுத்துக் கம்பிகள் (High voltage transmission line)  மூலம் சக்தி அருகில் உள்ள துணை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின் மின் தொகுப்பிற்கு (GRID) அனுப்பப்படுகிறது.

மின் தொகுப்பில் (பொதுவாக 760 KV (அ) 400 KV)   இருந்து  மாநிலத்தின் துணை மின் நிலையங்களுக்கு (400 KV / 230   KV / 132 KV / 66 KV / 33 KV / 11  KV)    வரிசைப்படி அனுப்பி வைக்கப்படும். பெரும்பாலும் 33 KV சிறு ஊர்களிலும் 11 KV கிராமங்களிலும் இருக்கும். எஞ்சியவை நகரங்களிலும் மாநகரங்களிலும் இருக்கும்.

எப்படி வீணானது ? எப்படி தவிர்க்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள மின் அனுப்பும் பிணையம் (transmission  network) ஒரே சமயத்தில் காற்றாலைகள் மூலம் தயாரிக்கப்படும் 3400 MW  மின் அளவை தாங்கிச் சென்று கடத்தும் அளவிற்கு கொள் திறன் கொண்டதாக இல்லை.

அதிக கொள்திறன் (400 KV மற்றும் 230 KV) துணை மின் நிலையங்கள் குறைவாகவும் அதே சமயம் தூரமாகவும் இருப்பது. பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட அத்தகைய துணை மின் நிலையங்கள் பல்வேறு இடங்களில் தேவைப்படுகிறது.

11 KV  துணை மின் நிலையங்களை 33 KV மின் நிலையங்களாக மேம்படுத்துதல் மற்றும் நடப்பு நிலைக்கேற்ற மின் அளவைத் தாங்கும் நவீன அதிக கொள்திறன் கொண்டு துணை  மின் நிலையங்கள்.

இந்த புதிய ஆட்சி இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக மின் வெட்டினை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுப்பார்களா?

துணைச் செய்தி

சென்னையில் சௌகார்பேட்டையில் உள்ள CMDA approval  இல்லாத ஒரு கட்டிடத்திற்கு  135  மின் இணைப்புகள் கொடுத்துள்ளது நம் மின் வாரியம்.  வாழ்க.

http://www.siasat.com/english/news/135-power-lines-building-without-approval 

Pin It