சாமியோவ்!!! ஊசி மணி, பாசி வித்த
சாமிகண்ணு பேசறேங்கோ!!!
புள்ளைய படிக்க வைக்க பள்ளிக்கூடம் போனேங்கோ!!
வெள்ளையும் சொள்ளையுமா வாத்திமாரு இருந்தாங்கோ!
வெள்ளைகாரன் பாஷையெல்லாம் வெளுத்து வாங்கினாங்கோ!
சுளையா பணம் கொடுத்து விண்ணப்பம் வாங்கினேங்கோ!
புள்ளைக்கு இடங்கேட்டு காலில் விழுந்தேங்கோ!
எம்புள்ள படிக்க எனக்கு பரீட்சை வைச்சாங்கோ!
தேமேன்னு முழிச்சு பெயிலு னேங்கோ!

ஏஞ்சாமி!! படிச்ச வெள்ளை சாமி!!
படிச்சவன் புள்ளைதான் படிக்க முடியுங்களா?
படிச்ச வாத்திங்க சொல்லி கொடுத்தாக்க..
கான்வென்ட் படிப்பெல்லாம் எம்புள்ள படிக்காதா?
சொன்னா அடிப்பாங்க...சொல்லாம வந்தேங்க...

லாட்டரி அடிச்சுதுங்கோ!! லட்சமா கொட்டிச்சுங்கோ!!
கேட்டரிங் செஞ்சேங்கோ! பல கறி வித்தேங்கோ!
கோடீஸ்வரன் ஆனேங்கோ! கோட்டெல்லாம் போட்டேங்கோ!
முன்னாடி நான் போன இஸ்கூல வாங்கினேங்கோ!
சொன்னா நம்ப மாட்டீங்கோ!! சத்தியமா சொல்றேங்கோ!
படிக்காத எம்புள்ள கரஸ்பாண்டு ஆனாங்கோ! (அவன் முன்னே)
படிச்ச வாத்தியெல்லாம் கை கட்டி புகழ் பாடறங்கோ!!

கற்பனை பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It