விபத்தால் ஏற்படும் எலும்பு முறிவு உட்பட்ட காயங்களுக்கு பயிற்சி பெறாத வைத்தியர்களிடம் கட்டுப்போடுவதால் கைகளை இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விபத்துக்களில் கை, கால்களில் ஏற்படும் லேசான ரத்தக்கட்டு, காயங்கள், எலும்பு முறிவுக்கு கிராமப்புறங்களில் பலர் முறையாக பயிற்சி பெறாத நாட்டு வைத்தியர்களை நம்பிச் செல்கின்றனர். அவர்களின் முறையற்ற சிகிச்சையால் நாளடைவில் பலர் கைகளையே இழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படுவோரின் வருகை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அதிகரித்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் ப்ரியா (10). சில மாதங்களுக்கு முன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இடது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் பயிற்சி பெறாத வைத்தியர் ஒருவர், விளக்கெண்ணெய், துணி, மட்டை வைத்து கையை இருக கட்டினார். சில நாளில் ரத்த ஓட்டம் தடைபட்டு கை புண்ணானதுடன், மணிக்கட்டு விரல்கள் முன்னோக்கி வளைந்து, கை செயலிழந்துவிட்டது. இதே போல் உசிலம்பட்டிப் பகுதியை சேர்ந்த வீரன் மகன் நீதிமுத்து(12) ஆலமரத்தில் இருந்து கீழே விழுந்ததில் இடது கை பாதிக்கப்பட்டதால் பயிற்சி இல்லாத கிராமப்புற வைத்தியரிடம் கட்டினார். முட்டை பத்து, துணி, மூங்கில் வைத்து கட்டியதால் கை வளைந்து மோசமான நிலையில் உள்ளது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள இவர்களுக்கு ஆபரேஷன் மூலம் கையை நிமிர்த்தும் வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் சந்திரபிரகாசம் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட வேண்டும். ஆனால் பயிற்சி பெறாத வைத்தியர்களிடம் செல்கின்றனர். அங்கு முட்டைபத்து, மூங்கில் தப்பை வைத்து இறுக்க கட்டுகின்றனர். இதனால் கைகளில் ரத்த ஓட்டம் பாதிப்பதுடன் தசை, தசைநார், நரம்புகள் அழுத்தம் பெறுகின்றன. அதனை உடனே சரிசெய்ய வேண்டும். ஆனால் அறியாமையால் கையில் கட்டுடன் பல நாட்கள் இருக்கின்றனர். இதனால் நாளடைவில் கை முழுவதும் செயலிழந்து போகிறது. இதனை சரிசெய்ய பலமுறை ஆபரேஷன் செய்ய வேண்டும். இதனால் முழுபயன் கிடைக்கும் என கூறமுடியாது.
எலும்பு முறிவு பிரிவின் தலைமை டாக்டர் பிரபாகரன் கூறுகையில், ‘கீழே விழுவதால் பாதிக்கப்படுவோரில் 90 சதவீதம் பேர் லேசான காயம், ரத்தக்கட்டு போன்றவற்றிற்காக செல்கின்றனர். அவர்களுக்கும் கையில் கட்டுபோட்டு இறுகக் கட்டிவிடுகின்றனர். எலும்பு முறிவு பகுதியில் முறையான சிகிச்சை அளித்தால் 3 முதல் 6 வாரங்களில் சரியாகிவிடும் தகுதியான டாக்டர்களிடம் உடனே ஆலோசனை பெற்றால் இந்த அவலத்தை தவிர்க்கலாம்’ என்றார்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- உச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்
- பட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன?
- ஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன?
- ஹரிஹரனை கொன்ற சூத்திர சாதிவெறி
- வினா - விடை
- புனைவுகளைப் புனைவுகள் கொண்டே நேர் செய்தல்
- செந்நெல் - அகத்திலிருந்து எழுந்த குரல்
- ஒப்பனைக்காரர் வீதி
- தாத்தாவின் கைத்தடி
- ஈரோட்டில் மகாநாடுகள்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: எலும்பு நோய்கள்
எலும்பு முறிவுக்கு நாட்டுக்கட்டா?
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.