குழந்தையின்மை என்ற குறை இன்று பரவலாகக் காணப்படுகிறது. இது கணவன், மனைவி இருவரும் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் குறை இருக்கலாம். திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் எந்தவித கட்டுபாட்டுடன் இல்லாமல் இருந்தும் குழந்தைபேறு இல்லை என்றால் கணவன் மனைவி இருவரும் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதில் சில பிறவிக் குறைபாடுகள் தவிர ஆண்களுக்கான இதரப் பிரச்சனைகளுக்கும், பெண்களுக்கான பிரச்சனைகளுக்கும் பக்க விளைவு இல்லாத ஹோமியோ மருந்துகளும் தீர்வுகளும் உள்ளன.

பெண்களுக்கான குறைகள்

குழந்தையின்மையில், பெண்களுக்கான குறைகள் என பார்த்தோமானால், உளவியல் ரீதியாக,
1. இளவயது திருமணம், மனபக்குவம் அடையாமல் தாம்பத்ய உறவை நினைத்து பயம், அருவருப்பு.
2. மன உளைச்சல், மன இறுக்கம்,மனவேதனை.
3. இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள்.
4. வேகமும், பரபரப்பும், மன அழுத்தமும் உள்ள எந்திர வாழ்க்கை.
5. மிகை உணர்ச்சி நிலை

உறுப்புகளில் குறைபாடு

1. கன்னிதிரை துளையிடபடாமல் இருத்தல். (Hymen unholed)
2. கடிதடம் குறுகி இறுத்தல்.
- பிறப்பிலேயே

- சிக்கலான பிரசவத்திற்கு பின்

3. பிறவியிலேயே கர்ப்பப்பை, சினைபை,
கருக்குழாய் வளர்ச்சியின்மை.
4. கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை இறக்கம்.
5. கர்ப்பப்பை உள்தோல் பாதிப்பு
(endometriosis)
6. (Bicorbenate Uterus) இரட்டை கர்ப்பப்பை
7. (Ovaritis) சினைப்பை வேக்காடு
8. சினைப்பை கட்டிகள் (Ovarian Cryst)
9. கருக்குழாய் அடைப்பு
10. வெள்ளைப்படுதல்.
11. மாதவிடாய் கோளாறுகள்
a)Dysmennorrhoea (membraneus)வலிமிக்க மாதவிடாய்
(Copious menses) அதிக ரத்தப்போக்கு
12. (Habitual abortion) தொடர் கருச் சிதைவு
13. (Obesity) பருமன்
14. சுரப்பி இயக்கக் கோளாறுகள் -
தைராய்டு
பிட்யூட்டரி,
15. குழந்தையின்மைக்கு காரணமாக அமையும் சில நோய் பாதிப்புகள்

# தொற்று நோய்கள்
# புட்டாளம்மை
# காசநோய்
# பால்வினை நோய்கள்
# அதிகமான ஆங்கில வலி நிவாரணிகள்
(குறிப்பாக Spadmodic reliever)
# பாலுணர்ச்சி தூண்டுதலுக்குரிய மருந்துகள்

தீர்வுகள்

முதன்மையாக, சிகிச்சை மேற்கொள்ளு முன், விரிவான துயரர் ஆய்வு (Case taking), மாதவிடாய் முறைகள், முதல் மாதவிடாய், உடலுறவில் நாட்டம், நாட்டமின்மை, உடலுறவின் போது வலி?, உடலுறவு கொள்ளும் முறைகள், நாட்கள், நேரங்கள். இவை எல்லாம் சேகரித்துக் கொண்டு சிகிச்சை ஆரம்பிக்கப் படுகிறது. மருந்துகள் மட்டுமல்லாமல் உணவு முறை உட்பட தம்பதியருக்கு தக்க ஆலோ சனைகளும் சேர்த்து வழங்கப்படுகிறது. அப்பொழுதுதான் குழந்தையின்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண முடியும்.

முதன்மை மருந்துகளாக -

ஆரம்மெட், போராக்ஸ், நேட்.கார்ப், நேட்.மூர், செபியா, கல்.கார்ப், பிளாட்டினா, கிராஃபைட்டிஸ், ஹெலோனியஸ், அலெட்ரீஸ், அக்னஸ், கோனியம்
இடைமருந்துகளாக
மெடோரினம், சல்பர், தைராய்டினம், பிட்யூட்டரினம்.

Arumet - மிகுந்த மன உளைச்சல், Stressful Life, ஆரம்.மெட் நோயாளி,மிகவும் கலாச்சாரமான ஒழுங்கான வாழ்க்கை நெறி முறைகளை கொண்ட நேர்மையானவர். பொதுவாக இவர்கள், தலைமகன் (அ)தலைமகளாக இருப்பார்கள்.
Borax - வெள்ளைபடுதல், வலியுடன் மாதவிடாய்
Nat-carb - பிடிவாதமான மலட்டுதன்மைக்கு
Non retention of seemen - விந்து முழுமையாக பெண்ணுறுப்பிலிருந்து வெளியேறிவிடுதல் காரத்தன்மை, துர்நாற்றமுள்ள கெட்டியான, மஞ்சள் நிறமுடைய, வலியுடன் கூடிய வெள்ளைப்பாடு.குறைவான மாதவிடாய்.
Nat Mur - Aversion to coitus due to paintful from dryness of vagina .முன்னதாக வரக்கூடிய மிக அதிகமான போக்கு கொண்ட மாதவிடாய் , கர்ப்பப்பை இறக்கம்
Sepia - Habitual abortion, கர்ப்பப்பை இறக்கம், உடலுறவில் வெறுப்பு,உடலுறவின் போது வலி, வெள்ளைபடுதல், குறைவான மாதவிடாய்.
மலட்டுதன்மை அதிகமான, மாதவிலக்குடன் Calc-carb, Nat-mur, sulp
வலியுடன் கூடிய மாதவிடாய் - Borax
கருக்குழாய் அடைப்பு - Apismel, medorrinum
சினைப்பை சுருக்கம் (Atrophy & ovary & Mamme) - Iodum
அதிக பாலுறவு விருப்பம் - Kali brom
சினைப்பை பலவீனம், இடது சினைப்பை வலி,
அதிகமான வெள்ளைப்படுதல் - Eupatoriumpus

(கட்டுரை அக்டோபர் 2008 மாற்று மருத்துவம் இதழில் வெளிவந்தது) 

Pin It