பெரியார் திராவிடர் கழகம் தமிழர்களிடம் மலிந்து கிடக்கும் மேலும் புற்றுநோய் போல பரவிக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை கலைந்திடவும், தமிழர்கள் தன்மானத்துடனும், இனமானத்துடனும் வாழ்ந்திடவும் தமிழகம் முழுவதிலும் இது போன்ற பயிற்சி முகாம்களை நடத்திக் கொண்டு வருகிறது. பொதுவாகவே தமிழர்கள் புரிந்தாலும் புரியாவிட்டாலும், தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அறிந்தாலும் அறியாவிட்டாலும், பணம் இருந்தாலும் பணம் இல்லாவிட்டாலும் கோயில்கள், மதுபானக்கடைகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், கேளிக்கை விடுதிகளில் மற்றும் மருந்தகங்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்வது வழக்கம். ஆனால் இது நாள் வரை நாம் ஏன் அங்கு செல்கின்றோம் அதற்கான மூலகாரணம் என்ன என்பதனை இது வரை கிஞ்சிதும் சிந்தித்துப் பார்த்ததில்லை. நடைமுறை பழக்கவழக்கங்களை அறிவைக் கொண்டு எப்படி பகுத்தறிந்து வாழ்வது என்பதனை பயிற்றுதரும் பயிற்சிமுகாமை நாங்கள் மிகச்சிரமம் எடுத்து அக்கறையுடன் நடத்திக் கொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக உங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பெண்கள் மற்றும் திருநங்கைகள் கலந்து கொள்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். கலந்து கொள்ள விரும்புபவர்கள் ரூ.100 செலுத்தி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அனைவருக்கும் உணவு மற்றும் தங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து குறித்து தோழர்களிடம் கலந்து பேசி முடிவுசெய்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு : த.ப.சி.குமரன் - 9444025408, 9941759641

பகுத்தறிவு முகாமின் பயிற்றுவிப்பாளர்கள்

தலைவர் : த.செ.மணி - பெரியார் திராவிடர் கழகம்

துணைத்தலைவர் : செகதீசன் - பெரியார் திராவிடர் கழகம்

பொதுச்செயலாளர் : கு.இராமகிருட்டினன் - பெரியார் திராவிடர் கழகம்

பொதுச்செயலாளர் : க.இராசேந்திரன் - பெரியார் திராவிடர் கழகம்

மற்றும் பலர்

இடம் : மேல்பனப்பாக்கம், காஞ்சிபுரம்

நாள் : பிப்ரவரி 27,28 - 2010

நேரம் : பிப்ரவரி 27 காலை 9.30 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5.30 மணிக்கு முடியவுள்ளது.

குறிப்பு : பயிற்சி முகாம் குறித்த நேரத்தில் தொடங்கும், அருள்கூர்ந்து தோழர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

Pin It