நான் கண்விழித்து படித்த போது
நீ கூட விழித்தபோது
நினைத்து கொண்டேன்..
Father and sonநீ சிறு வயதில் சரியாக
படித்ததில்லையென்று !!

நான் கிரிக்கெட்டில்
கோப்பை வாங்கியவுடன்
நீ தெண்டுல்கர் என்பதை போல்
பெருமை பேசியவுடன்
நினைத்து கொண்டேன்....
நீ விளையாடியதேயில்லையென்று !!

நான் பள்ளியில்
முதல் மாணவனானபோது
நீ ஊரெல்லாம் சொல்லிய போது
நினைத்து கொண்டேன்...
நீ பதக்கமே வாங்கியதில்லையென்று !!

நான் சிறு பிணியில் விழுந்தாலும்
நீ துரும்பாக இளைத்தாயே
நினைத்து கொண்டேன்....
உனக்கு பயம் ஜாஸ்தியென்று !!

நான் கடவுசீட்டுக்காக
காவல் நிலையம் சென்ற போது
நீ வக்கீல் நண்பனுடன் வந்து நின்றாயே
நினைத்து கொண்டேன்....
உனக்கு பதற்றம் அதிகமென்று !!

நான் சிறிய வேலை சேர்ந்தவுடன்
நீ ஆட்சி தலைவராய் நினைத்த போது
நினைத்து கொண்டேன்....
நீ தொழிலாளி என்பதாலென்று !!

என் காதல் திருமணம் நடக்க,
நீ பிறர் காலை பிடித்தவுடன்
நினைத்து கொண்டேன்....
உனக்கு தைரியம் குறைவென்று

என் குழந்தை பிறந்தவுடன்....
எனைப் பார்த்து சிரித்தவுடன்
உண்மை தெரிந்ததப்பா!!
உன் பெருமை புரிந்ததப்பா!!
தகப்பனானதினால் தன்னையே தந்தாயென்று!!!

சுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It