இரவின் அமைதியில்Father and son

மகனிடமிருந்து

வந்து விழுந்தன

வரிசையாக்க் கேள்விகள்.

'பெரியவன் ஆயிட்டதால

சீனியர் கேஜி போய்ட்டனா'.

ஆமாமென்றேன்.

'ஜூனியர் கேஜிக்கு பின்னே

சீனியர் கேஜியா'.

ஆமாமென்றேன்.

'பெரியவனான பின்

சின்னவனாக முடியாதில்லை?'

‘அப்படியொன்றும்

சொல்வதற்கில்லை’

- செல்வராஜ் ஜெகதீசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.