அவளைLover

அணைத்து

அழுத்தி முத்தமிட்டான்.

 

அவள்

வெட்கப்படவுமில்லை

சிணுங்கவுமில்லை.

 

பின்

அவன் விருப்பப்படி

அவளை எரிக்காமல்

புதைத்துவிட்டனர்.

 

====

சாளரம் ஊடே

நுழைகின்ற

வெயில் கீற்றில்

தெரிகின்ற

தூசி துகள்கள்

எப்போதும் நிதானமின்றி

அலைகின்றன

எதையோ தேடியபடி…

 

சாளரம் அடைபட்டால்

நின்று போகும்

ஆட்டமெல்லாம்.

 

====

 

காதலர்களின்

பூங்கா பேச்சினில்

கொஞ்சம் கொஞ்சமாய்

பிடுங்கப்பட்டு

அணுஅணுவாய்

இறந்து கொண்டிருந்தன

புற்களும்

தூரத்தில் ஒரு

இதயமும்..

 

====

 

அவள் பிரிந்தபின்

அவன்

வெயிலை

ரசிக்க கற்றுக்கொண்டான்.

 

- அய்யப்பராஜ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.