வீடுவிட்டு வெளியே வந்தால்Romeo

கண்ணாலே களங்கம் செய்து

உதடு குவித்து உணர்ச்சி காட்டி

என் கண்களைத் தினம்

கலங்க வைப்பான்...

 

பார்வையால் பறித்துவிட

நினைக்குமவனுக்கே

பிய்த்துக் கொடுத்துவிடலாம்

என்றாலும்

என்னோடு சேர்த்தே வேண்டும்

என்பான் ஈனப் பயல்!

 

கட்டவிழ்த்து அலைவதானால்

கதவிடுக்கில் ஒதுங்கட்டும்

அதில் தப்பேயில்லை

என்னை நச்சரித்தே

நாளும் பின்னால் வரும்

இவன் நாய்க்குப் பிள்ளை!

 

கற்பில்லை

கலாச்சாரமில்லை

காலம் மாறிப்போனதென்பவனுக்கு

எனக்கு

விருப்பமில்லையென்பது மட்டும்

விளங்கவேயில்லை!

 

- நாவிஷ் செந்தில்குமார்

Pin It