மின்கம்பியில் உட்கார்ந்து
ஊடலில் பாடும்
கரிச்சான்களின் பாடலில்
தீப்பற்றிக்
குளிர்காய்கிறது
பனிக்கால வெயில்.
எல்லாப் பக்கமும் குருத்து விட்டு
முளைவிடுகிறது
நீ
பார்க்கும் போதெல்லாம்
மஞ்சள் கிழங்காகும்
என் அந்திப் பொழுது.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.