ஊருக்கு வெளியே
யாருமற்ற
புளியந்தோப்பில்
உன் மனதைத் திறந்து
மடியில் என் தலைசாய்த்து
என் காதில் ரகசியமாய்
காதலைச் சொன்னபோது
கொடுவா மீசையும்
வெட்டருவா கையில் இருந்தும்
அதிர்ச்சியில்
விழிபிதுங்கிய
வேட்டைக் கருப்பு
ஊரார் உருவாக்கப் போகும்
கலவரத்தை நினைத்து
இன்று வரை சிலையாகவே
நிற்பதை
அறிவாயா தோழி!?

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.