நெத்தியில் முத்த்திடடேன்
நிலக்கடலைப் பூ வாசனை
செவ்விதழில் முத்தமிட்டேன்
வெப்பாலைப் பூ வாசனை
நாசியில் முத்தமிட்டேன்
மரமல்லிப்பூ வாசனை
கழுத்தில் முத்தமிட்டேன்
நுணாப்பூ வாசனை
நெஞ்சுக்குழியில் முத்தமிட்டேன்
முல்லைப்பூ வாசனை
கொங்கையில் முத்தமிட்டேன்
மனோ ரஞ்சிதப் பூ வாசனை,
நாபிக் கமலத்தில் முத்தமிட்டேன்
செந்தாமரை வாசனை
தோள்களில் முத்தமிட்டேன்
செண்பகப்பூ வாசனை
அல்குலில் முத்தமிட்டேன்.
நிலமெங்கும் புளியம்பூ வாசனை
திருப்பி அவள் முத்தமிட்டாள்.
ஜாதிப் பூவில் மலர் வளையத்துடன்
ஓடி வருகிறது ஊர்
சாதிக்கு எதிரான
யுத்தத்தை சத்தமிட்டு
தொடங்குவதை விட
ஒரு முத்தமிட்டுத் தொடங்குவோம்!
முத்தமே துணை

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.