பேருந்தில் நீ வாங்கித் தந்த டிக்கட்டைதான்
சொர்க்கம் செல்லவும்
பயன்படுத்துகிறேன் நான்

*
நிதானமாகவே வா
என் சவப்பெட்டியில்
குளிர்சாதன வசதி இருக்கிறது

*
திருவிழா நேரக் குழப்பம் சகஜம்தான்
மற்ற நாட்களிலுமா
கோயில் எது, உன் வீடு எது என்பது

*
நீ இருக்கும் தெருவில்
நிலவு காட்டி சோறூட்டுவதை
வன்மையாகக் கண்டிக்கிறேன்

*
வடகத்துக்கு மட்டுமா வருகின்றன
காக்கைகள்
கொடி காயும் உன்
குட்டைப் பாவாடைக்கும் தான்

*
'ஒரு நிமிஷம்....யூதரா.... போன்' என்பார்கள்
அந்த ஒரு நிமிஷம் காதலின் ஒரு யுகம்
எல்லாம் கெடுத்து விட்டது அலைபேசி
அழைத்ததும் எடுத்து விடுகிறாய்

*
நூலகத்தில் நீ படித்தவையெல்லாம்
தனி ரேக்கில்
தலைப்பு - ஆசீர்வதிக்கப்பட்ட புத்தகங்கள்

*
வாய் சிவக்க மென்று நினைவூட்டுகிறாய்
கொட்டப்பாக்கும் கொழுந்து வெற்றிலையும்
கொடுத்து வைத்ததென்று

*
மற்றதெல்லாம் வெறும் சக்கை
நீ சுவைத்து துப்பியது தான்
கரும்புச் சக்கை

*
மற்ற பலூனெல்லாம் காற்றில் பறக்கிறது
நீ விட்ட பலூன் மட்டும் தான்
காதலில் பறக்கிறது

- கவிஜி

Pin It