நம் தீரா தாகத்தால்
தீர்ந்து போன நதிகள்,
தவறிய ஒற்றைய அழைப்பில்
மீண்டும் தவழ்ந்திடுமா?
இடுகாட்டு ஈசன் பெயரில்
சுடுகாடு ஆன காடு
சுரக்குமோ மழைப் பாலை.
மரம் என்னும் மடி அறுத்த பின்
ஜடா முடி ஈசனின்
ஜடையில் இனி கங்கை புரள்வதெங்கே ?
அவன் கூந்தல் அறுத்த குருவே
ஆண்டெல்லாம் அவன் பாதம் தொழுதாலும்
உன் பாவம் போகுமோ?
தவறிய அழைப்பெல்லாம்
தவறான உன் செயல் திருத்துமோ?

- அ.செய்யது முஹம்மது

Pin It