Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

சமூக வலைத்தளங்களில் தவ்ஹீத் ஜமா அத்தின் நிறுவனரான பி.ஜைனுல் ஆபிதீன் பேசியதாக ஒரு ஆடியோ வைரலாகப் பரவி வருகின்றது. பொதுவாக பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பெரியாரிய இயக்கங்களையும், மார்க்சிய இயக்கங்களையும் அவ்வப்போது தரக்குறைவாக விமர்சனம் செய்யும் வீடியோக்களைத்தான் அவரது ரசிகக் குஞ்சுகள் சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவார்கள். ஆனால் இந்த முறை வைரலாகப் பரவிவரும் ஆடியோ, பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் முற்போக்கு இயக்கங்கள் மீது ஆதாரமற்ற அவதூறுகளைப் பரப்பும் ஆடியோ அல்ல. அந்த ஆடியோ தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான ஆடியோவாக இனி இருக்கப் போகின்றது. அந்த ஆடியோ பல சமூகப் பிரச்சினைகளை அடி ஆழம் வரை சென்று ஆராய்ந்து, அதற்குப் பலவிதமான தீர்வுகளையும் முன்வைக்கின்றது. குறிப்பாக ஆண்குறியின் நீளம் பற்றிய மார்க்க அறிஞரின் பார்வை வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது. வாத்ஸாயனரே வாய் பிளந்துவிடுவார் அந்த ஆடியோவைக் கேட்டால். இனி இந்த ஆடியோ செக்ஸ் டாக்டர்களால் 'எழுச்சி'யை இழந்தவர்களுக்குப் பெருமளவில் பரிந்துரைக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது.

P Jainulabdeenபி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் காதலுக்கு மிக பெரிய எதிரி. அதுவும் காதலர் தினம் என்று வந்துவிட்டால் தவ்ஹீத் ஜமாத்தின் போஸ்ட்டர்கள் தான் தமிழ்நாட்டில் ஹைலைட். “கன்னியரைக் கற்பழிக்க காமூகர்கள் கண்டுப்பிடித்த கழிசடை தினம், காதலின் பேரால் கற்பை சூறையாட ஒரு தினம் தேவையா? புறக்கணிப்போம் இந்தக் கலாச்சார சீரழிவை... சிந்தீப்பீர்! சீரழிந்து விடாதீர்கள்!!" என்று இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டும் அல்லாமல், நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களின் கற்பையும் பாதுகாக்கும் பெரும்பணியைத் தொடர்ந்து செய்துவருகின்றது. பி.ஜைனுல் ஆபிதீனுக்கு காதல் என்றால்தான் பிடிக்காதே ஒழிய கள்ளக்காதல் என்றால், அதை ரசித்து ருசித்து செய்யக்கூடியவர் போலிருக்கிறது. நாம் அதைச் சொல்லவில்லை. தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினர்களாக இருந்து முக்கிய பதவிகளை வகித்த நபர்கள் தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் ஒருசேரச் சொல்லும் ஒரே குற்றச்சாட்டு பி.ஜைனுல் ஆபிதீன் ஒரு கேடுகெட்ட பொம்பளப் பொறுக்கி என்பதுதான். TNTJ அலுவலகமே ஒரு விபச்சார விடுதியாகத்தான் செயல்பட்டு வருகின்றதாக குற்றம் சாட்டுகின்றார்கள். மேற்படி அவர்களின் குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் ஆதாரம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் அந்த ஆடியோ.

சென்னை அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண், தன்னுடைய குடிகாரக் கணவனை கண்டிக்க வேண்டும் என்று TNTJ-வில் உள்ள பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றார். அதற்கு இவர் “அந்த குடிகாரப் பயலை குலா சொல்லிட்டு வந்துரு.. உன்னை நானே வைச்சிக்கிறேன்” என்று சொல்லி இருக்கின்றார். அந்தப் பெண்ணும் தன்னுடைய கணவனை குலா சொல்லிவிட்டு, இவனை நம்பி வந்திருக்கின்றார். ஆனால் தன்னை நம்பி வந்த அந்தப் பெண்ணுக்கான பொருளாதாரத் தேவைகள் எதையும் பூர்த்தி செய்யாமல், ஒரு பாலியல் அடிமையாகவே நடத்தி இருக்கின்றார். இதனால் அந்தப் பெண் இவரிடம் இருந்து நஷ்ட ஈடு பெற வழக்கறிஞரை அணுகியுள்ளார். அவர் பெரிய இடத்து சமாச்சாரம் என்பதால் TNTJ சம்பந்தப்பட்டவர்களிடமே அந்தப் பெண்னை அனுப்பி இருக்கின்றார். முதலில் நம்ப மறுத்த அவர்கள் அந்தப் பெண் அவர்கள் முன்னிலையிலேயே மார்க்க அறிஞர் பி.ஜெவுக்கு போன் போட்டு பேசியிருக்கின்றார். மார்க்க அறிஞரும் தனது வழக்கமான காதல் ரசம் சொட்டும் பேச்சை பேசியிருக்கின்றார். இதை டேப் செய்து எடுத்துக்கொண்டு போய், பி.ஜெவை அவர்கள் மிரட்டியிருக்கின்றார்கள். உடனே கட்சியில் இருந்து விலகவேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கின்றார்கள். இது எல்லாம் நடந்த சம்பவங்கள். (http://mdfazlulilahi.blogspot.in/2015/04/tntj_20.html)

இந்த ஒரு பெண்ணிடம் மட்டும் அல்லாமல், மேலும் சில பெண்கள் என இவனின் காள்ளக்காதலிகளின் வரிசை கண்ணுக்கெட்டிய தூரம் வரை செல்கின்றது. இவனது சிறப்பு என்னவென்றால் இவன் ஒரு பெண்ணுக்கு கள்ளக்காதலை எப்படி தெரியப்படுத்துவான் என்றால், அதை ஒரு கடிதமாக எழுதி குரானில் வைத்துக் கொடுப்பானாம். கள்ளக்காதலை சொல்லும் முறையில் கூட தன்னை ஒரு மார்க்க அறிஞன் என்று நிரூபிப்பவன். இந்து மதத்தில் மட்டும் அல்லாமல் எல்லா மதத்திலும் மார்க்க அறிஞன் என்று சொல்லிக்கொள்ளும் அனைவருமே பக்கா பொம்பளப் பொறுக்கிகளாகத்தான் இருக்கின்றார்கள். அப்படி இருப்பவர்கள் தான் மார்க்க அறிஞராகவும் இருக்க முடிகின்றது போலும்.

இந்த பி.ஜெ சாதாரண ஆள் கிடையாது. தனக்குப் பிடிக்காதவர்கள் மீது பத்வா விதித்து இம்சைப்படுத்துபவன். இஸ்லாத்தில் இருந்து வெளியேறி, கிருஸ்தவராக மதம் மாறி, மாந்ரீகம் செய்துவந்த நாகூர் ஆலிம் ஜார்ஜ் என்பவருக்கும், அல்லாவுக்கு இணைவைத்ததாக சென்னை கேகே நகரைச் சேர்ந்த பள்ளிவாசல் இமாம் கமருஸ்ஸமான், ஜிஹாத் கமிட்டி தலைவர் அல்ஹாஜ் பழனிபாபா, கோட்டூர் ஜிந்தா போன்ற பல பேருக்கு பி.ஜெ பத்வா கொடுத்ததாக சொல்லப்படுகின்றது. பி.ஜெ செக்ஸ் மூடில் இருந்தால் அடுத்தவன் பொண்டாட்டிக்குப் பாவாடையும் வாங்கித் தருவான், கோபமாக இருந்தால் தனக்குப் பிடிக்காதவர்கள் மீது பத்வாவும் விதிப்பான். ஒரு பக்கம் மாமா வேலையையும் பார்ப்பான், இன்னொரு பக்கம் மார்க்க வேலைகளையும் பார்ப்பான். அவனுக்கு மாமா வேலையும், மார்க்க வேலையும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான்.

ஆனால் இவ்வளவு தூரம் அம்பலப்பட்டு அசிங்கப்பட்ட போதும் பி.ஜெவோ இல்லை, அவனுக்கு சொம்பு தூக்கும் அவனது அடிமைகளோ இதற்காக வெட்கப்பட்டதுபோலத் தெரியவில்லை. மாறாக இப்போது வெளியாகி இருக்கும் இந்த ஆடியோவை TNTJ கும்பல் நித்தியானந்தா ஸ்டைலில் மறுத்துள்ளது. அது யாரோ பி.ஜெ போலவே மிமிக்கிரி செய்திருக்கின்றார்களாம். அப்படி என்றால் அந்த ஆடியோவில் பேசும் பெண்ணின் குரலும் மிமிக்ரியா? இப்படி ஒரு கேவலமான காமவெறிபிடித்த உரையாடலை இதற்கு முன் தமிழ்ச்சமூகம் மட்டும் அல்லாமல் இந்தியாவே கேட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு ஆபாசமான அசிங்கமான உரையாடல். இவன் போனிலேயே இப்படி பேசுகின்றான் என்றால், இன்னும் TNTJ அலுவலகத்தில் வைத்து என்ன என்ன செய்திருப்பான்? அதை உரையாடலில் வரும் அந்தப் பெண்ணே சொல்லுகின்றார், 'பி.ஜெ அந்த விஷயத்தில் படு வேகமாம்'. மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்ற பழமொழிக்கு பி.ஜெ மிக பொருத்தமானவன் என்பதை நிரூபித்து இருக்கின்றான்.

பி.ஜெ. அடுத்தவன் பொண்டாட்டிகளை மட்டும் அபகரிப்பது கிடையாது. மார்க்க வகுப்பு என்ற பெயரில் மதரஸாக்களில் பெண்களுக்கு வகுப்பு எடுக்கும் போதும் மிக கீழ்த்தரமான ஆபாசமான விஷயங்களைத்தான் மார்க்க வகுப்பு என்ற பெயரில் எடுப்பானாம். இதை எல்லாம் சேர்த்து வைத்துப் பார்க்கும் போது பி.ஜெவின் முழு நேர வேலையுமே பெண்களை எப்படி வளைத்துப் போடுவது என்பதுதான் என்று தெரிகின்றது. அதற்கு இஸ்லாமை ஒரு கேடயமாக இந்த அயோக்கியன் பயன்படுத்தி வந்திருக்கின்றான். சவுதியில் இலங்கையைச் சேர்ந்த இசுலாமியப் பெண் ரிசானா நஃபீக் மரண தண்டனை விதிக்கப்பட்டு, கொல்லப்பட்டபோது அதை நியாயப்படுத்தி பேசிய இந்த வகாபிச கடுங்கோட்பாட்டுவாதி, இப்போது தான் ஊர் மேய்ந்ததற்கு என்ன தண்டனை என்று சொல்வானா? ஷரியத் சட்டப்படி இவனின் எந்த உறுப்பை இப்போது வெட்டுவது? குற்றம்செய்த உறுப்பை வெட்டுவதுதான் நியாயமாக இருக்க முடியும். அதை TNTJ கும்பல் செய்யுமா என்று தெரியவில்லை.

சவுதி சேக்குகளிடம் இருந்து பணம் பெற்று அதன் மூலம் கட்சி நடத்தும் பி.ஜெ., சவுதி சேக்குகள் போன்றே ஊர் மேயும் பேர்வழிகளாய் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான செய்தி இல்லைதான். ஆனால் இவ்வளவு கீழ்த்தரமான பொம்பளப் பொறுக்கியாக இருந்துகொண்டு பெரியாரிய இயக்கங்களையும், மார்க்சிய இயக்கங்களையும் அவதூறு பேச இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என்றுதான் நாம் கேட்கின்றோம். பல பெண்களுடன் கள்ள உறவை வைத்திருக்கும் இந்த மாமா பயலுக்கு 'காதலர் தினம் கொண்டாடுவதால் கற்பு போய்விடும்' என்று சொல்வதற்கும், 'வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டுப் போவார்கள்' என்று சொல்வதற்கும் என்ன யோக்கியதை இருக்கின்றது? ஊர்மேய்பவனுக்கும் கற்புக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

எனவே இஸ்லாமிய மக்கள் இந்த பி.ஜெ மாமா பயலிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இவன் நடத்தும் எந்தக் கூட்டத்திற்கு உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளையோ, ஏன் கிழவிகளையோ கூட அனுப்பி வைத்துவிடாதீர்கள். மிக மோசமான காமக்கொடூரன் இந்த பி.ஜெ. இவன் பேசும் ஏகத்துவம், அது, இது எல்லாம் இவன் ஊர்மேய்வதற்காக போட்டிருக்கும் வேடம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தையே தூக்கி நிறுத்த பிறந்த வகாபிகள் நாங்கள் தான் என கடுங்கோட்டுபாட்டு வாதத்தைப் பேசி இஸ்லாமிய மக்களை மூளைச்சலவை செய்யும் இந்தக் கும்பலின் உண்மையான யோக்கியதையை தெரிந்துகொள்ளுங்கள்.

உலகில் எல்லா மதவாதிகளும் மதத்தை முதலாளிகளுக்கு சேவை செய்யவும், பெண்களைப் பாலியல் ரீதியாக சுரண்டவும் மட்டுமே பயன்படுத்துகின்றார்கள். அதில் இந்துமதம், இஸ்லாமிய மதம், கிருஸ்தவ மதம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. சங்கராச்சாரிக்கும், பி.ஜெவுக்கும் இந்த விடயத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது. இருவருக்குமே தன்னிடம் வரும் அனைத்துப் பெண்களையும் தன்னுடைய சொந்தப் பொருளாகக் கருதி, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் மட்டுமே மேலோங்கி இருக்கின்றது. பி.ஜெ போன்ற மாமா பயல்கள் மீது பல ஆண்டுகளாக பாலியல் புகார்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தாலும், அது இப்போதுதான் அம்பலம் ஏறியிருக்கின்றது. காலம் மாறிவிட்டது என்பதைத்தான் இது காட்டுகின்றது. மதத்தை வைத்து சாமானிய மனிதர்களை அடிமைப்படுத்தி, தங்களுடைய கைப்பாவைகளாக மாற்றி ஆட்டிவைக்க நினைக்கும் ஒவ்வொரு மதவாதியும் நிச்சயம் இது போல் ஒருநாள் அம்பலப்பட்டுப் போவது உறுதி. எந்த மக்களை ஏமாற்றி தன்னைச் சுற்றி தெய்வீக ஒளிவட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார்களோ, அதே மக்களால் செருப்பாலேயே ஓட, ஓட அவர்கள் விரட்டி அடிக்கப்படத்தான் போகின்றார்கள்.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Yasar arafath A 2017-08-30 11:03
nalla vilaku pudichi paatha pola
Report to administrator
0 #2 மனிதன் 2017-08-30 13:53
பிரபல நடிகர்களின் ரசிகர்கள் எப்படி கண்மூடித்தனமான வெறியர்களாக இருக்கிறார்களோ அதேபோலத்தான் இந்த மதவெறி கும்பலின் ரசிக குஞ்சுகள்.இவர்க ளை எல்லாம் எதிர்கொள்ளவே முடியாது.you cant argue with fools and morons.PERIOD
Report to administrator
+5 #3 sathya 2017-08-31 09:59
As a periyarist , i condemn this post.
Without having proper evidence , with a random post from a blog and audio track , how can the writter use harsh words and directly accuse person?
Report to administrator
+4 #4 Niyamath Ali 2017-08-31 10:22
யோவ் அந்த மனிதரை பற்றிய அவதூறுகள் கடந்த 30 ஆண்டுகளாக பரப்பபட்டு வருகிறது.இது தெரியாமல் அவர் காம பேச்சு பேசியதை பக்கத்தில் இருந்து பார்த்தது போல கட்டுரை வடிப்பது கீற்றுக்கு அழகல்ல.
Report to administrator
+2 #5 Mohd thaheer 2017-08-31 15:39
Ellavatrayum neril parthathupol eluthuringo social mediavil varum news ellam original enru namburingala..
Report to administrator
+1 #6 Siraj 2017-08-31 17:42
அவர் கம்யூனிசத்தை, மறுப்பை எதிர்கிறார் என்பதற்காக அதற்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்க வக்கில்லாமல் அவர் மீது கூறப்படும் அவதூறை உண்மை போல் எழுதி தனது அரிப்பை கீற்று தீர்த்துக்கொள்க ிறது. தமிழ்நாட்டில் போலீசே இல்லையா பாதிக்கப்பட்டதா க கூறப்படும் பெண்கள் யாரும் போலீசுக்கே போகவில்லையா கட்டப்பஞ்சாயத்த ு செய்ப்பவர்களிடம ் ஏன் போகவேண்டும் அதையும் உண்மை என்று கொஞ்சமாக மூளை உள்ள எவனும் நம்ப மாட்டான்.
Report to administrator
0 #7 ilakiyan 2017-09-06 12:40
பி.ஜே வைப் போல் பல வஹாபி தலைவர்கள் தமிழகத்தில் செயல்படுகிறார்கள்.
இஸ்லாம் நான்கு திருமணங்கள் செய்வதற்கு அனுமதி அளித்திருக்கிறத ு என்ற உரிமையை வைத்துக் கொண்டு. நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பிறகும் மற்றொரு திருமணம் செய்வதற்க்காக நான்கு மனைவிகளில் ஒரு மனைவியை தலாக் சொய்வது, இந்த இடத்தை நிறப்புவதற்காக மற்றொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்வது. நான்கு மணைவிகள் என்ற எண்ணிக்கை முடிவடைந்த பிறகு மீண்டும் அதில் ஒரு மனைவியை குலா கொடுப்பது. வேறொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்வது என்று தன்னுடைய ஆன்மீகப் பணியை செய்யும் ஆன்மீகத் தலைவர்கள் இன்னும் கோவை நகரில் ஆன்மீகப் பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆறு பெண்களை திருமணம் செய்து அதில் ஒரு பெண்ணுக்கு குலாவும், மற்றொரு பெண்ணுக்கு தலாக்கும் கொடுத்து இன்றும் நான்கு மனைவிகளோடு குடும்பம் நடத்திவரும் ஆன்மிகப் பேச்சாளர் எப்பொழுது மாட்டுவார் எனத் தெரியவில்லை
Report to administrator

Add comment


Security code
Refresh