அருளாசி வேண்டுமென
அதிரடியாய் அடிவாரங்களில் நுழைகிறார்கள்.
அருள்தரிசனம் வேண்டி
ஆன்லைனில் பதிவு செய்து
காத்துக் கிடக்கிறார்கள்.
அருள்வாக்கு கிடைக்குமென்று
வரிசையில் ஏங்கித் தவிக்கிறார்கள்.
விஐபி தரிசனம் பொது தரிசனம்
கால்கடுக்க விடிய விடிய
வியர்வை வழிய தவம் கிடக்கிறார்கள்.
நெடுவெயில் குடித்து
கட்டணமில்லா நிழலாசி தரும்
புங்கன் மரத்தடியில்
நின்று கொண்டிருக்கிறேன்..

- சதீஷ் குமரன்

Pin It