
நான்
உனக்கு வரமா?
சாபமா?
எனக் கேட்கிறாய்!
சாபமாகிப் போன
என் வரம் என்கிறேன்!
அணைத்து
விழியில் முத்தமிட்டு
விடை தருகிறாய்....
கரை தொட்டுத்
திரும்பும் அலையென
திரும்பி பார்க்காது
விரைகிறேன்!
உடைவதற்கு முன்
உன்னை விட்டு...
- இசைமலர்

நான்
உனக்கு வரமா?
சாபமா?
எனக் கேட்கிறாய்!
சாபமாகிப் போன
என் வரம் என்கிறேன்!
அணைத்து
விழியில் முத்தமிட்டு
விடை தருகிறாய்....
கரை தொட்டுத்
திரும்பும் அலையென
திரும்பி பார்க்காது
விரைகிறேன்!
உடைவதற்கு முன்
உன்னை விட்டு...
- இசைமலர்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.