கற்களை விட 
வலிமையான 
சொற்களை வீசி விட்டு 
உலவுகிறார்கள் 
வெறுப்பின் உலகில் 
வெப்பமாய்; 
மீண்டும் வருகிறார்கள் 
காயத்திற்கு களிம்பிட 
பூசும் கைகளில் 
பூத்திருக்கிறது 
எரிமலையின் எரிச்சல்! 

**************

உன்னைத் தொலைத்தலும் 
உன்னில் தொலைதலும் 
உணரத் தொடங்கையில் 
படரத் தொடர்கிறது 
உன்னில் வெளிச்சம்! 

- ந.சுரேஷ், ஈரோடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.