உனக்கும் எனக்குமான 
இடைவெளியில் 
இடையில் நிற்கிறது மெளனம்; 
மௌனத்தை மொழிபெயர்க்கையில் 
வார்த்தையால் வசீகரிப்பதும் 
வாளால் வெட்டுண்டு போவதும் 
நிகழுமாகையால் 
விட்டு விடுகிறேன் 
சத்தக் கூடுகளின் சஞ்சாரத்தை விட 
மௌனமே 
மொழிகளில் சிறந்த மொழியென்று! 

- ந.சுரேஷ், ஈரோடு

Pin It