உழைக்கும் மக்களின்
உள்ளங்கை ரேகை தேய
சலவைக் கற்களின்
சாம்ராஜ்யம்;
கலவியல் உன்மத்தம் தான்
காதலின் சின்னமெனில்
அதிசயங்களின் கூரைக்குள்ளே
ஆயிரமாயிரம்
சுரண்டலின் பலிபீடங்கள்!

- ந.சுரேஷ், ஈரோடு

Pin It