Forest roadஅடர்ந்த தலைமுடியின்
பிரிக்கும்
நடுவகிடாய்
காட்டினுள்
முளைத்த
புது தார்ச்சாலை...

எப்போதும்போல்
சுதந்திரமாய்
உலாவி
“சட்டென”
தலைக் கவசத்தின்
கண்ணாடியில் பட்டு
வழிந்த
பூச்சியின்
வெள்ளைநிறக் குருதி
சொல்லும்
வனசாலைகளில்
விலங்கின்
வலி.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.