Water Drop On Leaf

ஊதியப் புகையில்
நச்சுகளின் ஊர்வலத்தில்
காற்றின் நுரையீரல்!
_________________

வெப்பச் சலனத்தில்
பொழிந்த மழையில்
சலன மழையாய்
நடைபாதை வாசிகள்!
______________

கம்பங்கள் கலவரமானது
அரசியல் கொடிகளை
ஏற்றும் போது!
_______________

நம்பிக்கை வேலியைச் சுற்றி
படர்ந்திருக்கிறது சில
சந்தேகக் கொடிகள்!
______________

அள்ளிப் பருகலாம்
அதீதத்தின் அற்புதத்தை
குழந்தையாய் மாறும் போது
குழந்தை உலகில் நுழையும் போது!
__________________________

இலைகளில் ஓவியம்
பட்டுத் தெறித்த
நீர்த்துளி தூரிகையால்!

- ந.சுரேஷ், ஈரோடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.