'நுங்கோ யார்?'என வினவின் சொல்வேன்
எங்கெல்ஸ் என்ற செல்வக் கோமான்
விடுதலை அறிஞர் வறுமையில் இருக்கையில்
இடுக்கண் களைந்த நட்பின் விளக்கம்
செல்வம் மிகுந்தும் செருக்கடை யாமல்
வல்லவர் என்றே தலைமையை ஒப்பிய
காரல் மார்க்சே எமக்கும் தலைவர்

(உம்முடைய தலைவர் யார் என்று கேட்பவர்களுக்கு விடை சொல்கிறேன்; விடுதலைக் கருத்தையும் போராட்டத்தையும் அறிவியல் ஆக்கித் தந்த அறிஞர் வறுமையில் இருந்த போது, எங்கெல்ஸ் என்ற பெருஞ் செல்வந்தர் அவருடைய துன்பத்தைக் களைந்து நட்பின் விளக்கமாகத் திகழ்ந்தார். தன்னிட்ம செல்வம் மிகுந்து இருந்த போதும், செருக்கு அடையாமல் தன்னை விட அவரே வல்லவர் என்றும் உயர்ந்தவர் என்றும் ஒப்புக் கொண்டு அவருடைய தலைமையை ஏற்றுக் கொண்டார். அவர் தான் கார்ல் மார்க்ஸ். அவர் தான் எமக்கும் தலைவர்.)

- இராமியா

Pin It