பொன்னாத்தாளின் வீட்டெதிராய்
விடாது
பம் பம் அடித்துக்கொண்டிருந்த
ஐஸ் வண்டிக்காரனிடம்
புள்ளைங்கள கொஞ்சம்
நிம்மதியா விடு என்ற பொன்னாத்தாளின்
சுடு வார்த்தையில்
மெதுவாய் நகரத் தொடங்கிய
ஐஸ் வண்டிக்காரனுக்கும்
பிள்ளைகளிருப்பதை
உரத்துச் சொல்ல வேண்டும்
போலிருந்தது அவனுக்கு.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.