flightபொம்மைக்குப் பவுடரிட்டு
ஆடை அணிவித்தாற் போன்ற
பணிப் பெண்கள்
ஆக்ஸிஜன் போத்தலை
எங்ஙனம் செருகுவது
பாராசூட்டை
எப்படி விரிப்பது
எங்கே அமர்வது
எங்கே கழிப்பது
எங்கே முழிப்பதென
காதைப் பிழியும்
அதே ஆங்கில
நுனிநாக்கு அறிவுரைகள்
பூனைக்கு உருட்டி வைத்தாற்போல்
ஒரு கவளச்சாதமும்
பால், சர்க்கரை, தேத்தூள்
தனித்தனிசகிதமாய்
நாமே தயாரித்துக்கொள்ளும்
தேநீரென
ரொம்பவே அலுத்துவிட்டது
இந்த விமானப் பயணங்கள்.
பின்னரும்
தலைக்கு மேலாய் கடக்கும்
இந்த விமானங்களில்
குழந்தையாகித்தான்
பின் மீள்கிறேன்.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

More articles by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.