ஒவ்வொரு முறையும் ஆழ்ந்து
ஆழ்ந்து
உள் செல்லும் போதும்
தாமரை ஒவ்வொரு இதழாக
விரித்துக் கொண்டிருந்தது
இதழ் விரிய சிந்தனை உயர
மகரந்தத்தின் மத்தியில்
நானும் மலரும் இணைந்ததும்
மணம் வீசியது
இதழ்கள் வாடிய பின் உதிரலாம்
உதிர்ந்த பின்
விதையாக மாறலாம்
எறும்புக்கோ மண்ணுக்கோ உணவாகலாம்
அங்கே துப்பாக்கி முனையில்
மலர் எரிக்கப்படலாம்
சிதைக்கப்படலாம்
அவர்கள்
மொட்டுக்களைக் கீறி
இரத்தத்தை நக்கி குடிக்கலாம்
கம்சனைப் போல மொட்டுக்களை அழிக்க
தலைமைகள் ஆணையிடலாம்
இங்கே தாமரை மலர்ந்தென்ன புண்ணியம்
இரத்த வாடையல்லவா
வீசுகிறது எங்கும்.

- துவாரகா சாமிநாதன்

Pin It