வீடு புகுந்து கொல்வதை

தேடுதல் வேட்டை என்று சொல்லுங்கள்

முதுகில் குத்துவதை

மோதல் என்று சொல்லுங்கள்

உரிமைக்குப் போராடுபவனை

பயங்கரவாதி என்று சொல்லுங்கள்

பொதுமக்கள் செத்துப்போனால்

தியாகம் என்று சொல்லுங்கள்

சொந்த சகோதரர்களைக் கொல்வதை

வீரம் என்று சொல்லுங்கள்

இல்லையென்றால் உங்களை

நாட்டுப்பற்றில்லாதவன் என்று சொல்லி விடுவார்கள்...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.