இறுகிப் போன
பாறை ஒன்றினடியில்
ஒளிந்துகொண்ட
மண்புழுவொன்றின்
ஒற்றைக் கால்நுனி
கிளறிக் கிளறி
வழி அமைத்து வைத்த
பாதையொன்றில்
புழுவின் தடங்களை
அழித்து விடாமல்
நடந்து கொண்டிருக்கிறேன்...
வேறோர் மண்புழு இந்நேரம்
இதன் காலடித் தடங்களைத்
தேடி வந்து கொண்டிருக்கக் கூடும்...

- கிருத்திகா தாஸ்

Pin It