"காலனி" சொல் நீக்க அறிவிப்பு தமிழக அரசு செய்த போது, தலைவர்கள் பலரும் இந்த அறிவிப்பை வரவேற்று பேசியிருந்தனர். அதில், அண்ணன் புனித பாண்டியன் அவர்கள் மட்டும் ஒரு மிகச் சிறப்பான, மிக மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார். காலனி என்ற சொல்லின் பயன்பாட்டை விட, "தாழ்த்தப்பட்டோர்" என்ற சொல்லின் பயன்பாடு கோடி மடங்கு அதிக புழக்கத்தில் இருக்கிறது என்றே கூற வேண்டும் . தமிழ்நாட்டில் எட்டு கோடி மக்களும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பயன்படுத்தும், constitution இல் இல்லாத ஒரே வார்த்தை "தாழ்த்தப்பட்டோர்" என்ற சொல் தான். உண்மையில் இச்சொல்லை தான் முதலில் நீக்கியிருக்க வேண்டும், இன்னும் சொல்ல வேண்டுமானால், இந்த வார்த்தையை unconstitutional, unparliamentary சொல்லாக அறிவிப்பு செய்ய வேண்டும். இனியும் இச்சொல்லை தமிழ் சமூகத்தில் வேரூன்ற விடக் கூடாது. இந்த சொல்லை ஒட்டிய social stigma, அது ஏற்படுத்தியிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சமூகக் களங்கம் / சமூக இழிவு எத்தகையது என்பதை சொல்லில் விவரிக்க முடியாது. எனவேதான் அண்ணன் அவர்களுடைய இந்த கோரிக்கை என்பது உண்மையிலேயே மிக முக்கியமான கோரிக்கை என்பதை யாரும் மறுக்க முடியாது என்று கருதுகின்றேன். "தாழ்தப்பட்டோர்" சொல்லை நீக்கிய பின்னர், அச்சொல்லை பயன்படுத்தினால் தூய்மை பணியாளர்கள் செய்யும் துப்புரவு பணிகளை சில நாட்கள் தண்டனையாக கொடுக்க வேண்டும். இச் சொல் நீக்கத்தை நான் எழுத்தில் கோரிக்கையாக தலைவர்களிடம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறேன் தவிர, இது முற்றும் முழுவதும் தலித் முரசு ஆசிரியர் அண்ணன் புனித பாண்டியன் அவர்களுக்கு உரித்தான கோரிக்கையாகும்.
இந்த கோரிக்கையை வலிமையாக எவ்வாறு அரசிடம் எடுத்து செல்ல வேண்டும் என்பது பற்றி மிக மூத்த முற்போக்கு தலைவர்கள், முன்னணி முற்போக்காளர்கள், முற்போக்கு அமைப்புகள், கூட்டமைப்பு ஆகியோர் கலந்துரையாடி, ஆலோசனை செய்யுமாறு மிக தாழ்மையுடன், உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை முறைப்படி எவ்வாறு எழுத வேண்டும் என்ற நிபுணத்துவம் எனக்கு இல்லை. எனவே வெறும் சாமானிய கோரிக்கையாக, சாமானிய வரிகளில் எழுதியுள்ளேன். இதை professional ஆக எவ்வாறு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமோ, அதற்காக ஆவன செய்ய வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். காலனி சொல் நீக்கத்தின் போது, அந்த சந்தர்ப்பத்தை மிகச்சரியாக பயன்படுத்தி, அதன் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்டோர் சொல்லையும் நீக்க வேண்டும் என்ற மிக முக்கிய கோரிக்கையை முன் வைத்த அண்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள் தெரிவிக்கிறேன். அண்ணன் அவர்களும் இந்த கோரிக்கை பற்றி முற்போக்கு தலைவர்களுடன் ஆலோசனை செய்து, இக்கோரிக்கையை அரசிடம் எடுத்து செல்ல ஆவன செய்ய வேண்டும் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=-KhPIS_Gd0c - "தாழ்த்தப்பட்டோர்" சொல் நீக்க கோரிக்கை காணொளி, இறுதி வினாடிகளில் அண்ணனின் கோரிக்கை இடம்பெற்றுள்ளது.
Scheduled Caste (SC) - பெயர் மாற்றக் கோரிக்கை:
"SC" என்கிற பட்டியல் சாதியினர் என்பதற்கான சொல் குறுக்கம், தாழ்த்தப்பட்டோர் சொல்லை போலவே, அதே அளவில் அல்லது அதைவிட மோசமான social stigma, சமூகக் களங்கம் / சமூக இழிவு ஏற்படுத்தியிருக்கிறது, "SC" என்ற அந்த சொல் குறுக்கம் மீது கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆதிதிராவிடர் என்ற சொல்லை அரசு துறைகளில் இருந்து நீக்கிவிட்டு, பட்டியல் சாதிகள் என்ற சரியான மொழிபெயர்ப்பு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அண்மையில் வலுத்துள்ளது அனைவரும் அறிந்ததே.
தமிழகத்தில் உள்ள அனைத்து சாதிகளுமே ஏதேனும் ஒரு பட்டியலில் தான் இடம் பெற்றிருந்தாலும், அது என்னமோ SC பட்டியலில், பட்டியல் சாதியினர் பட்டியலில் இடம்பெற்ற சாதிகளுக்கு மட்டும் பொதுச் சமூகத்தில் "இழிவு" கற்பிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே இதையொட்டி, என்னுடைய பரிந்துரை கோரிக்கை என்னவென்றால், ஆதிதிராவிடர் சொல் நீக்கப்பட்டு, பட்டியல் சாதிகள் என்று பெயர் மாற்றம் பெற்றாலும் மீண்டும் அதே "SC" என்கிற சமூக களங்கம் கற்பிக்கப்பட்ட சொல் குறுக்கம் இருக்கத்தான் போகிறது, எனவே SC/ST என்பதற்கு பதிலாக EBC/EBT, அதாவது, Extreme Backward Class / Extreme Backward Tribes என்று ஒட்டுமொத்தமாகவே சொற்களை மாற்ற கோரிக்கை செய்தால் என்ன? ஏற்கனவே இது போன்ற ஒரு சொல் குறுக்கம், சில சாதிகளின் தொகுப்பு பட்டியலுக்குப் பெயராக, EBC என்று சொல் குறுக்கம், ஏற்கனவே பீகார் மாநிலத்தில் இருப்பதாக அறிந்து கொள்ள முடிகிறது.
அதாவது எவ்வாறு BC, MBC, OBC என்ற பட்டியல்கள் இருக்கின்றனவோ, அதே போல EBC/EBT பட்டியல். இது ஒரு முறை - option 1
மற்றொரு option, ஏற்கனவே இருக்கும் MBC பட்டியலை, MBC 1 என்றும், MBC 2 (EBC) என்ற பட்டியலில் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரை, EBC என்று பட்டியல் செய்துவிட்டால் என்ன? - option 2
பட்டியலின் பெயரும் இடமும் தான் மாற்றம், மற்றபடி அதே இடஒதுக்கீடு முறையை அப்படியே பின்பற்றுவதில் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்றே அனுமானிக்கிறேன்.
ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக இருக்கும் MBC பட்டியலில், வன்னியர், நரிக்குறவர் மற்றும் வாழ்வியல் நிலையில் சமூக நிலையில் பட்டியல் சாதியினரை விடவும் மோசமான நிலையில் இருக்கும் பல சாதிகளை MBC பட்டியலில் காணமுடிகிறது (MBC பட்டியல் இணைத்துள்ளேன்). இன்னமும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், வன்னியர் சாதியின் மிகப்பெரும் பிரதிநிதியாக வாழ்ந்த காடுவெட்டி குரு அவர்கள், அவருடைய பல்வேறு நேர்காணல்களில் எவ்வித ஒளிவுமறைவின்றி பதிவு செய்திருக்கும் செய்தி என்னவென்றால், "தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பட்டியல் சாதியினருக்கும் கீழான நிலையில் தான் வன்னியர் மக்கள் வாழ்கின்றனர்" என்பதுதான் அந்த செய்தி. இப்போதும், மிக சமீபத்தில் கூட வன்னியர் மக்கள் பிரதிநிதிகள் சிலர் தங்களுடைய நேர்காணல்களில், 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் இன்னமும் குடிசைகளில் தான் வாழ்கின்றனர் என்ற செய்தியை பதிவு செய்துள்ளனர். இப்பேர்பட்ட மிகவும் மோசமான வாழ்நிலையில் வன்னியர்கள் வாழ்ந்தாலும், MBC பட்டியலில் இருப்பதால் மட்டுமே தங்களை உயர்வானவர்கள் என்று கருதிக்கொண்டு, SC என்ற பட்டியலில் இருப்பதாலேயே அவர்களெல்லாம் கீழானவர்கள் என்று தவறாக எண்ணிக் கொண்டு, சமீப ஆண்டுகளில் வன்னியர்கள் பட்டியல் சாதியினர் மீது ஏவிய சாதிய வன்முறை வெறியாட்டங்கள் எத்தகையது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே பட்டியல் சாதியினர் "SC" என்ற சமூகக் களங்கம் கற்பிக்கப்பட்ட பட்டியலிலிருந்து, MBC 2 அல்லது EBC என்ற பட்டியலுக்கு மாறுவது மிகச் சரியானது, மிக அவசியமானது, மிக விரைவில் நடக்க வேண்டியது என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து.
(குறிப்பு - MBC பட்டியலில் இடம்பெற்றுள்ள வன்னியர் சாதி உட்பட பல சாதிகள், பிரிட்டிஷ் அரசால் பட்டியல் சாதியினர் என வரையறை படுத்தப் பட்டவர்கள் தான் என்பதும் அனைவரும் அறிந்ததே)
மேலும், SC to EBC பெயர் மாற்றம் செய்தோ அல்லது ஒரு பட்டியலிலிருந்து வேறு பட்டியலுக்கு உங்கள் சாதிகளின் தொகுப்பை மாற்றிவிட்டால் மட்டும் உங்கள் சாதிகளின் மேல் கற்பிக்கப்பட்டிருக்கும் சமூக இழிவு போய்விடுமா என்ற கேள்வி எழலாம். உடனே நடக்காமல் போகலாம், ஆனால், நிச்சயம் போகப் போக / eventual ஆக சமூக perception மாறும். எழுபது வருடங்களுக்கு முன்னால் வன்னியர் உள்ளிட்ட பல சாதிகள் பட்டியல் சாதியினராக இருந்துள்ளனர், ஆனால், இன்றைக்கும் அவர்களுடைய வாழ்வு மற்றும் பொருளாதார நிலை அதல பாதாளத்தில் இருந்தாலும், அதை அவர்களே ஒப்புக் கொண்டு பதிவு செய்தாலும், பொதுப்புத்தி சமூகத்தில் அவர்கள் மீது இழிவான பார்வை இல்லை. எனவே நிச்சயம் இந்த கோரிக்கை eventual சமூக மாற்றங்களை கொண்டு வரும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இதுபோன்ற SC பெயர் மாற்றம், EBC பட்டியல் மாற்றம் அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை. எனவே, முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள், முற்போக்கு கட்சிகளின் தலைவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள் in general, ஆகிய அனைவரும் இக்கோரிக்கையை பரிசீலனை செய்து, அனைவரும் கலந்துரையாடி, வழக்கறிஞர்கள் மற்றும் துறை வல்லுநர்களின் ஆலோசனை பெற்று, இவற்றை எவ்வாறு கோரிக்கையாக அரசுக்கு எடுத்துச் செல்வது என்பதை முடிவு செய்து, கோரிக்கைகள் வெற்றி பெற ஆவன செய்ய வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் உரிமையுடன் அனைவரிடமும் கோரிக்கை செய்கின்றேன். முதற்படியாக, பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள், முதலமைச்சரை நேரில் சந்தித்து, இக்கோரிக்கைகளை அவரிடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து, கோரிக்கைகளுக்கான நியாங்களை அவரிடம் நேரில் விளக்கிக் கூறலாம், அதன் பிறகு அதற்கான அடுத்தடுத்து நகர்வுகளை ஆலோசித்து முடிவு செய்யலாம் என்று கருதுகிறேன். எப்படி கலைஞர் தவிர வேறு யாராலும் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு கோரிக்கையின் நியாயத்தை புரிந்து கொள்ள கூட முடிந்திருக்காதோ, அதே போல முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அளவுக்கு இந்த கோரிக்கையை புரிந்து கொண்டு செயல்படுத்த, சாதி உணர்வற்ற முதலமைச்சர் அமைவதற்கு இனி வாய்ப்பே இல்லை. எனவே, அவர் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் இக்கோரிக்கையை முன்வைத்து செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே இக்கோரிக்கைகள் செயல் வடிவம் பெற சிறிதளவேனும் வாய்ப்புள்ளது என்று கருதுகிறேன்.
https://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm - list of BC, MBC
https://ncbc.nic.in/writereaddata/cl/tamil.pdf - central list of OBC for the state of Tamil Nadu
- தேன்மொழி