puthumaipithan 301புதுமைப்பித்தன் வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் சொ. விருத்தாசலம். பிறப்பு : 25 ஏப்ரல் 1906, திருப்பாதிரிப் புலியூர். தந்தை : வி சொக்கலிங்கம் பிள்ளை தாயார்: பர்வதத்தம்மாள், சிற்றன்னை: காந்திமதியம்மாள், உடன்பிறந்த தங்கை: ருக்மணி அம்மாள். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் பெற்றார்.

தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918 இல் சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931இல் பி.ஏ. பட்டம் பெற்றார். .

1932 ஜூலையில் திருமணம். மனைவி: கமலா ( 1917-1995 ); திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். 1933 அக்டோபர் 18இல் முதல் படைப்பு ‘குலோப்ஜான் காதல்’ காந்தியில் வெளியீடு, 1934 ஏப்ரலிலிருந்து மணிக்கொடியில் பல கதைகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டார். 1934 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.

1934 ஆகஸ்டு முதல் பிப்ரவரி 1935 வரை ஊழியனில் உதவி யாசிரியர். ( சிறுகதை ) மணிக்கொடியில் பி.எஸ் . ராமையாவுடன் நெருங்கிய உறவு. 1935 ஜூலை முதல் 1943 செப்டம்பர் வரை தினமணியில் உதவியாசிரியர். நிர்வாகத்துடனான மோதலின் காரணமாக டி.எஸ். சொக்கலிங்கம் தினமணி ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகியபோது பிற உதவியாசிரியர்களோடு புதுமைப்பித்தனும் விலகினார்.

1939இல் உலகத்துச் சிறுகதைகள், பேஸிஸ்ட் ஜடாமுனி, கப்சிப் தர்பார் ஆகியவை வெளிவந்தன. 1940 இன் தொடக்கத்தில் முதல் சிறுகதைத் தொகுதி புதுமைப்பித்தன் கதைகள் பாதும் நவயுகப் பிரசுராலய வெளியீடாக வந்தது.

1944 இல் டி.எஸ். சொக்கலிங்கம் தொடங்கிய தியாரியில் சேர்ந்தார். பின்பு அதிலிருந்தும் 1940 இன்தொடக்கத்தில் விதை திரைப்படத் துறையில் நுழைந்தார். 1946இல் ஜெமினியன் ‘அவ்வை’ மற்றும் ‘காமவல்லி’ படத்துக்காகவும் பணியாற்றினார். பின்பு ‘பர்வதகுமாரி புரொடான்ஸ்’ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார்.

1946 ஏப்ரலில் மகள் தினகரி பிறப்பு எம் கோடி பாகவதரின் ‘ராஜமுக்தி’ படத்திற்காக 1947இன் பிற்பகுதியிலிருந்து 1948 மே தொடக்கம் வரை புனே வாசம் அங்குக் கடுமையான காசநோய்க்கு ஆளானார். 5 மே 1948இல் திருவனந்தபுரத்திற்குத் திரும்பினார். ஜூன் 30இல் மறைந்தார்.

கதைகளின் ராஜா

புதுமைப்பித்தன் தமிழ் இலக்கிய உலகின் ஒரு தூண்டுகோல் கருவியாக விளங்கியவர். நான் இன்னமும் ஆச்சரியமாகப் புதுமைப்பித்தனின் எழுத்துக்களைத் தடவிப் பார்க்கிறேன். அது உயிர்ப்புடன் இருக்கிறது.

சோர்ந்த எழுத்துக்களைக் கொண்டு உருவாகும் தமிழ் இலக்கியங்கள் காலத்தால் நிலை பெறாதவை. அதைக் கடந்து நிற்பவர்களில் புதுமைப்பித்தன் தனிச்சிறப்பு உடையவர். கதைகளின் மீதான காதல் உண்டாவதற்கும், சமூக சிந்தனையுடன் கூடிய புதுமைப்பித்தனின் சிறுகதைகளும் ஒரு காரணம்.

எத்தனை பிறவி மனிதனுக்கு? யாருக்கும் தெரியாது!. புதுமைப்பித்தனின் கதையில் அது முற்றிலும் மாறுபடுகிறது. ஒவ்வொரு முறையும் புதுமைப்பித்தன் பிறந்து கொண்டே தான் இருக்கிறார். அவரின் சிறுகதையின் முடிவில். எல்லா காலத்துக்கும் மான ஒப்பீடு உடன் எழுதப்பட்ட கதைகள். தீர்க்கதரிசனங்கள் ஆகவே இருந்திருக்கக்கூடும்.

எல்லா கதைகளுமே சிறப்புடையதாக இருந்தாலும். நான் விரும்பிய சில கதைகள்.

வாடா மல்லி: சரஸ் என்னும் பிராமணப் பெண்ணுடன் தொடங்கும், அந்த கதை பெண்களுக்கான மதிப்பிடு குறையாமல் இருக்கிறது. விதவையான அவள் ஆண்களிடம் இருந்து கிடைக்கும் தியாகங்களையும், காதல்களையும் விரும்புவதில்லை. அவள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்றுதான் பாசம் மட்டுமே. அது பூவுலகில் கிடைக்காததால் அவள் புறப்படுகிறாள் பிரேதமாக.

பால்வண்ணம் பிள்ளை: கஷ்ட ஜீவனத்தில் குடும்பத்தை நகர்த்தி வரும் பால்வண்ண பிள்ளை தனது பிள்ளைகளுக்கு நீச்சித் தண்ணீர் கொடுத்தே பழகி வருகிறார். ஒரு குடும்பம் வளர்ச்சி அடைவதாக இருந்தால்.

அதற்கு, அந்த வீட்டின் குடும்பப் பெண் காரணமாகி விடக்கூடாது. என்பதை நன்கு அறிந்தவராக இருக்கிறார் பால்வண்ணம் பிள்ளை. இந்த சிறுகதை எந்த அதிர்வும் இருக்காது. ஆனாலும் கதை ஒரு ஊசியைக் பழத்தில் நயமாக இறக்குகிறது.

தெருவிளக்கு: பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழி விளக்குகிறது கதை. தெருவின் ஓரத்தில் சாய்ந்து நிற்கும் ஒரு பழைய தெருவிளக்கையும் அதன் கீழே இருக்கும் ஒரு கிழவனறையும் தான் கதை ஒப்பிடுகிறது. மங்கிய வெளிச்சத்துடன், உடைந்த கண்ணாடியுடன் தனது ஒளி கதிர்களை வீசிக் கொண்டிருக்கும்.

தெருவில் அதை யாரும் கவனிக்க நேரம் இல்லை என்கிற நயமும். அதன் கீழே தங்கியிருக்கும் கிழவனைக் குறிக்கிறது. சாய்ந்த கம்பில் இருந்த விளக்கு அகற்றப்பட்ட இரவே கிழவனும் இறந்துவிடுகிறார்.

இதை நகர்ந்து கொண்டிருக்கும் உலகம் கவனிக்கவும் மறுக்கிறது. புதிய விளக்குடன் பிள்ளை காடுகள். அந்த தெருவின் ஓரமாய் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் புது வரவாய்.

இது மிஷின் யுகம்: ஒரு ஓட்டலில் சர்வருக்கு நமக்கும் இருபது நிமிடங்களிலுக்காண பழக்கம்தான். சாப்பிட்டு முடித்தபின் பில் எவ்வளவு என்கிற ஏக்கத்துடன் நாம் இருப்போம். புதுமைப்பித்தன் வித்தியாசமானவர். அவர் உணவுடன் சேர்த்து சர்வரையும் கவனிக்கிறார்.

உணவுடன் சேர்த்து மனிதனின் உணர்வுகளையும் படைக்கிறார். மனிதன் கேட்பதையெல்லாம் கடவுள் தருகிறாரா இல்லையா எனக்குத் தெரியாது. சர்வர் தருகிறார். என்கிற மன நிறைவுடன் கதையைப் படித்தேன்.

இரண்டு உலகங்கள்: மீனு, ராஜம், ராமசாமி பிள்ளை. மீனு ராஜம், ராமசாமியின் குழந்தை. ராமசாமி ஒரு அறிவியல் வாதி. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத எதுவும் இந்த உலகத்தில் உடையது இல்லை என்று அதீதமாய் நம்பக்கூடியவர்.

தன்னுடைய ராஜம் பெயரை ஒரு காகிதத்தில் இரண்டு முறைக்கு மேல் எழுதினால் இமாலய வெற்றியாக நினைப்பவள். அதுதான் அவளுடைய கல்வித் தகுதியாக இருக்கிறது. என்று கதை விரிகிறது.

ஆண் ஒரு அறிவியல் வாதியாகவும், பெண் அன்புவாதியாகவும் இருப்பது கதையிலும் கட்டு அமைக்கப்பட்டுள்ளது. அன்பிற்கு அன்பு தரும் ராஜத்தை அறிவியல் ஏற்பாடுகள் அனுமதிப்பதில்லை. 

கட்டுடைய மண்புகளுடன் கணவனின் பின்னால் பயணிக்கிறார்கள் அறிவியல் உலகிற்கு அப்பாற்பட்ட உலகான அன்புக்காரி.

பாலத்தின் முடிவில்

அகண்ட பிரகாசமாய் இருக்கும். சூரிய வெளியில் மங்கிய கதிர்களை யாரும் கவனிப்பதில்லை. அதை தன்னுடைய இஷ்டமான கட்டமைப்புடன். கட்டி எழுப்புகிறார் புதுமைப்பித்தன். தொடர்ந்து புதுமைப்பித்தனை வாசிக்கும் தொழிலில் நாம் இருந்தால். நாமும் கவிப்பித்தன் ஆக மாறிவிடுகிறோம்.

காலனுடன் புதுமைப்பித்தனுக்கும் தோழமை ஏற்பட்டதால். அவர் சீக்கிரமாகவே புறப்பட்டுவிட்டார். இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாம். சரி பரவாயில்லை அதுதானே இயற்கை அப்படித்தானே நடக்கும். என்று நாமும் புதுமைப்பித்தனின் பாஷையிலேயே சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. நம் எல்லாம் ரகசியமாய் பார்க்கிறார் அந்தன் மௌன விழிகளிலே.

- மு.தனஞ்செழியன்

Pin It