Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

modi and jaggivasu

நம்முடைய தோழர்கள் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஷ்வஹிந்து பரிசத், சிவசேனா போன்ற மதவாத அமைப்புகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருப்பதிலேயே கவனத்தை குவித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இது போன்ற நேரடியான மதவாத அமைப்புகளின் வளர்ச்சியை விட பல மடங்கு வளர்ச்சியை சத்தமில்லாமல் இன்று தமிழ்நாட்டில் சாதித்துக்காட்டி இருக்கின்றது ஈஷா யோகா மையம். பொறுக்கி சாமியார் ஜக்கி வாசுதேவன் ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டு இருக்கின்றான். அரசு கட்டமைப்பு முழுவதையும் தன்னுடைய பணபலத்தால் தன் வசப்படுத்தி இருக்கின்றான். மேற்கூறிய மதவாத அமைப்புகள் அனைத்தும் இணைந்து செய்யும் வேலையை இவன் ஒரு ஆளாகவே செய்திருக்கின்றான். மதம் சாராத ஆன்மீகம் என்ற பெயரில் லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களை சனாதன இந்து மதத்தைப் பரப்பும் புரவலர்களாக மாற்றி இருக்கின்றான். இவனது ஈஷா யோகா மையத்துடன் தொடர்பில் உள்ள அனைவரும் பெரும்பாலும் ஆர்.எஸ்.எஸ் அபிமானிகளாகவும், மோடியின் பிரச்சார பீரங்கிகளாகவும் உள்ளார்கள்.

 நகர் ஊரமைப்புத் துறை மற்றும் மலைத்தள பாதுகாப்புக் குழுமத்தின் அனுமதியின்றி ஒரு லட்சம் சதுர அடியில் வனப்பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதை எதிர்த்து வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு குழுத் தலைவர் முத்தம்மாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் ஏன் இதனை கண்டுகொள்ளவில்லை, ஏன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ளனர். அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கட்டிடம் குறித்து மத்திய மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகர் ஊரமைப்புத் துறை , மாநில வீட்டுவசதித்துறை, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆகியோர் வரும் மார்ச் 3-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.(நன்றி: தீக்கதிர்)

 பல மாநில முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் என அனைவரையும் தனது வாடிக்கையாளராகக் கொண்டிருக்கும் இந்த யோகா வியாபாரி எப்படியும் நம்மை யாரும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்ற தைரியத்தில் தொடர்ச்சியாக காடுகளை அழித்து கட்டிடங்களைக் கட்டிக் கொண்டே இருக்கின்றான். ஊரை ஏமாற்றுவதற்காக அவ்வப்போது மரம் நடுகின்றேன் என்ற அபத்த நாடகத்தையும் அரசியல் கட்சித் தலைவர்களின் துணையுடன் நடத்திக்கொண்டு இருக்கின்றான். இவனை இன்னும் கொஞ்ச நாள் தமிழ்நாட்டில் நாம் இருக்கவிட்டோம் என்றால் மேற்குத் தொடர்ச்சி மலையையே சுத்தமாக மொட்டை அடித்து இவனது சொத்தாக ஆக்கிக் கொள்வான். இது எல்லாம் இங்கிருக்கும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தெரியாத ஒன்றல்ல. ஆனால் அவன் கொடுக்கும் எச்சில் காசுக்கு ஆசைப்பட்டு அவனது எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் உடந்தையாக இருக்கின்றார்கள். யானைகளின் வழித்தடத்தை காவி சொறிநாய்கள் ஆக்கிரமிப்பதை எந்தவித சூடு சுரணையும் அற்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். இவனிடம் வரும் முட்டாள் பயல்களுக்கு மனநிம்மதி கொடுக்கின்றேன் என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்க ஆயிரக்கணக்கான வன விலங்குகளின் நிம்மதியைக் கெடுப்பதற்குத் துணைபோகின்றார்கள்.

 ஏற்கெனவே லட்சக்கணக்கான சதுர அடி கட்டிடங்கள் அனுமதி இன்றி கட்டப்பட்டிருக்கும் நிலையில், இப்போது புதிதாக 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கும் இன்னும் அனுமதி பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆதி ஆண்விபச்சாரன் சிவனின் சிலையைத் திறந்துவைக்க உலக அளவில் அதிகமான ஆண்விபச்சாரன்களை தன் கட்சி உறுப்பினர்களாய்ப் பெற்றிருக்கும் பலான ஜனதா பார்ட்டியின் உறுப்பினரும், ஆர்எஸ்எஸ் அடிமையும், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை குஜராத்தில் கொன்றுகுவித்த மரணவியாபாரியுமான திருவாளர் மோடி அவர்கள் வருகின்றார். யாரின் கையால் திறந்தால் அதற்கான முழு அர்த்தமும் கிடைக்குமோ, அவரின் கையாலேயே அதைத் திறந்து வைக்கச் சொல்லி இருக்கின்றார்கள். மோடியைவிட இந்த ஊர்மேய்ந்த சிவனின் சிலையைத் திறக்க ஒரு தகுதியான நபர் வேறு யார் இருக்கின்றார்கள்?

 தாருகாவனத்து ரிஷி பத்தினிகளை பைரவர் வேடமிட்டு வந்து கள்ளப் புணர்ச்சி புரிந்த உலகின் முதல் பாலியல் குற்றவாளி இந்தச் சிவன் தான். இன்று உலகத்தில் இருக்கும் பல பாலியல் குற்றவாளிகளுக்கு சிவன் தான் ஆதிபிதா. அதுமட்டும் அல்லாமல் விஷ்ணு உடன் ஹோமோ செக்ஸ்சில் ஈடுபட்டு ஐயப்பனைப் பெற்றெடுத்ததன் மூலம் உலகின் முதல் ஓரினச் சேர்க்கையாளனும் இந்தச் சிவன் தான். ஊர்மேய்வதையே தனது தொழிலாகக் கொண்ட ஒரு ஆதி பொம்பளைப் பொறுக்கியின் சிலையை ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் திறந்து வைக்கும் முழு தகுதியும் திறமையும் உண்டு என்பது நமக்குத் தெரியாததல்ல. அதன் அடிப்படையில் இந்தக் கார்ப்ரேட் பொறுக்கி சாமியார், மோடியைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம். இதன் மூலம் இனி இந்தியாவில் எங்கெல்லாம் பொம்பளைப் பொறுக்கிகளின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றதோ, அங்கெல்லாம் இனி ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் ஆட்களைத் திறந்துவைக்க அழைக்கலாம்; அவர்களும் மறுக்காமல் வருவார்கள் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

shiva statue

 கர்நாடகாவில் இருந்து கஞ்சா விற்றுப் பிழைக்க தமிழ்நாட்டிற்கு ஓடி வந்த இந்தக் கேடி இன்று தமிழ்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை ஆன்மீகத்தின் பெயரால் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றான். தமிழகத்தின் முக்கிய மழைவளக் காடுகளான மேற்குத் தொடர்ச்சி மலையைக் கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து தனது சொத்தாக மாற்றிக்கொண்டு இருக்கின்றான். அது மட்டும் அல்லாமல், தமிழகத்தில் காவிபயங்கரவாதிகளுக்கு மறைமுகமான உதவிகள் செய்து அவர்கள் தமிழ்நாட்டில் வேர்கொள்ள உதவி வருகின்றான். மதமற்ற ஆன்மீகம் என்பதெல்லாம் இவனைப் போன்ற அயோக்கியர்கள், மற்ற மதத்துக்காரர்களையும் தன் பக்கம் ஈர்த்து அவர்களை இந்துமதச் சார்பாளர்களாக மாற்றுவதற்காக வைத்துக் கொள்ளும் போலியான பெயர்கள் ஆகும். இதை ரொம்ப நாளைக்கு அவர்களால் மூடிமறைத்து வைக்க முடியாது என்பதைத்தான் இந்துமதத்தின் ஆதி பொம்பளைப் பொறுக்கியின் சிலை பிரதிஷ்டை காட்டுகின்றது. நாம் ஏற்கெனவே ஈஷா யோகாவில் உள்ள பல பேர் மிக மோசமான பொம்பளைப் பொறுக்கிகள் என்பதைக் கூறி இருக்கின்றோம். இப்போது அவர்களின் செயலுக்கு ஓர் அங்கீகாரம் கொடுக்கும் முகமாகவே இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு மிகப் பிரமாண்டமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் காலிகளுக்கு இருக்கும் எதிர்ப்பை மடைமாற்றும் வேளையில் இந்தக் காலிப்பயல் ஈடுபட்டு வருகின்றான். இதன் மூலம் தமிழ்நாட்டை இன்னொரு குஜராத்தாக மாற்ற துடித்துக் கொண்டு இருக்கின்றான். இதற்காக தன்னிடம் உள்ள ஆன்மீக அடிமைகளின் பலத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி மோடி எதிர்ப்பை இல்லாமல் செய்ய முயன்று வருகின்றான். தமிழ்நாட்டில் உள்ள முற்போக்குவாதிகள் இப்பொழுதாவது விழித்துக்கொண்டு இவனது அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிராக போராடத் தயாராக வேண்டும். அனுமதி வாங்காமல் கட்டப்பட்டுள்ள இந்த அவமானச் சின்னத்தை உடனடியாக அகற்ற என்ன செய்ய வேண்டுமோ, அதை உடனடியாக செய்ய வேண்டும்.

 இவனை வளரவிடுதல் என்பது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பேராபத்தாகும். ஒரு டீ மாஸ்டரை விட, ஒரு புரோட்டா மாஸ்டரை விட இவன் எந்த வகையிலும் சிறந்தவன் அல்ல. உழைக்காமல் சோறு தின்பதற்கும், ஊரைக் கொள்ளையடிப்பதற்கும் அயோக்கியர்கள் கண்டுபிடித்த ஒன்றுதான் இந்த யோகா. கொஞ்சம் தாடியும், கொஞ்சம் தலைமுடியும் வளர்த்துக் கொண்டு ஒரு காவி வேட்டியையும், நாலு யோகாசனத்தையும் தெரிந்துகொண்டால் உடனே கிளம்பி விடுகின்றார்கள் நானும் குருஜி என்று. மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளைப் பயன்படுத்திக்கொண்டு அதற்கு தீர்வு சொல்கின்றேன் என்று புற்றீசல் போல இது போன்ற பொறுக்கிகள் கிளம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களை ஆரம்பத்திலேயே நாம் எதிர்க்காமல் விட்டால், நாட்டில் மக்கள் போராடும் குணத்தை இழந்து ஆன்மீக அடிமைகளாக மாறுவதைத் தடுக்க முடியாமல் போய்விடும். இவனைப் போன்ற கழிசடைகள் பெருமுதலாளிகளுக்கும், அவர்களை அண்டிப் பிழைக்கும் அதிகார வர்க்கத்திற்கும் சேப்டி வால்வுகளாக சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும். பெரியார் பிறந்த மண்ணில் இது போன்ற அயோக்கியர்கள் தலை தூக்குவதை நாம் உடனடியாக தடுக்காமல் விட்டால் நிச்சயம் தமிழகத்தை காவிப் பேரிருள் சூழ்வது உறுதி.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Manikandan 2017-02-22 05:35
கார்க்கியின் கண்மூடித்தனமான ஹிந்து மத வெறுப்பினால் என்ன பேசுகிறோம் என்று கூட புரியாமல் பேசுகிறார்
Report to administrator
+1 #2 rajamaruthu 2017-02-22 10:47
It's True
Report to administrator
+1 #3 rashtrapathi 2017-02-22 13:49
super karki Sir
Report to administrator
0 #4 வே. பாண்டி.. 2017-02-22 20:04
இந்தியாவில் உள்ள பல கார்பொரேட் சாமியார்களில் இவன் முதல் திருடன். இவனிடம் மக்கள் ஏமாந்து கொண்டிருப்பது மிகவும் கவலைக்குரியது. ஏமாளிகள் இருக்கும் வரை இவனைப் போன்று ஏமாற்றுக்காரர்க ளுக்கு கொண்டாட்டம் தான்..
Report to administrator
+1 #5 Manoharan 2017-02-22 22:52
Can Manikandan give his reply for the charge against Jakki Vasudev for construction of buildings in the forest area without proper approval from the concerned authorities?The buildings are situated in the elephant corridor.How much ecology and wild life will be affected by 2 lakh peoples crowd there on 24th?So much crowd gathers during Sivaraathiri every year.Why the yoga gurus are very particular in destroying the ecology?Another yoga guru destroyed the river bed of Yamuna.Instead of replying,do not talk like a parrot Mr Manikandan as you used to do in "Vinavu"site.
Report to administrator

Add comment


Security code
Refresh