நாகப்பட்டினத்தில் இருந்து ஜைனக் கோவிலின் பொன் விக்கிரகத்தைத் திருடி வந்து, அதை உருக்கி எடுத்துப் பணமாக்கி, திருமங்கை ஆழ்வார் என்ற நாமக்காரன் சிறீரங்கம் கோவிலின் மதில்களைக் கட்டினான்.  ஆனால், அக்கோவிலின் மதில்களையும், கட்டடங்களையும் கட்டிய தொழிலாளிகளுக்கோ அந்தக் கோவிலின் சின்னத்தையே அதாவது ‘நாமத்’தையே சாத்திவிட்டான்.  கூலி கேட்ட தொழிலாளர்களை ஓடத்தில் ஏற்றி, கூலி தருகிறேன் என்று கூறி, காவிரி நடு ஆற்றில் கொண்டு போய்க் கவிழ்த்துக் கொன்று விட்டான் ஓடக்காரன் துணையோடு.

ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார்.

அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்று விட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப் போகவிட மாட்டோம்” என்று ஆழ்வாரை மறித்துக் கொண்டனர். ஆழ்வார் செய்வதறியாமல் விழித்து நின்றார்.

பிறகு ஆழ்வாரின் அரங்கன் கனவில் தோன்றி சொன்னதாக, அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளை அழைத்து காவிரியில் நீராடச் சொல்லி, அனைவரின் நெற்றியிலும் நாமத்தைச் சார்த்தி என் சந்நிதியில் கொண்டு வந்து நிறுத்து, பிறகு அவரவரின் அப்பன், பாட்டன்மாரின் பெயர் சொல்லி அழையுங்கள் என்றான்.

பின்பு “ஆழ்வாரின் திருவருளால் அவர்கள் அரங்கனின் திருவடிகளை சேர்ந்துவிட்டார்கள். நீங்கள் ஆழ்வாருக்கு எதிராகக் கலகம் செய்யாமல், அவருக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.  அவர்களை ஆற்று வெள்ளத்தில் தள்ளி, படுகொலை செய்த இடத்திற்குக் ‘கொள்ளிடம்‘ என்றும், அந்தத் துறைக்குப் ‘பார்வானத்துறை’ என்றும் இன்றும் உள்ளது.

சிறீரங்கம் வைகுண்ட ஏகாதசியின்போது திறக்கப்படு கின்றதே ‘சொர்க்கவாசல்’ - அது எங்கே செல்லுவது தெரியுமா?  திருமங்கை ஆழ்வார் கொள்ளிடக்கரையில் தொழிலாளர்களைக் படுகொலை செய்த அந்தப் பார்வனத் துறைக்குத் தான் செல்லுகிறது. இதுதான் ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ரகசியம்.

(ஆதாரம் - திருமங்கை ஆழ்வார் வைபவம்‘ என்ற நூல் )

மோடி பிற்படுத்தப்பட்டவரா?

காங்கிரசு கட்சி யின் செய்தித் தொடர்பாளர் சக்திசிங் கோஹில் கூறியுள்ள கருத்து முக்கியமானது (9.5.2014).

மோத் கன்சாஸ் என்ற உயர்ஜாதி வகுப்பில் பிறந்த நரேந்திர மோடி 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குஜராத் மாநில முதல்வராகப்பதவியேற்றார்.

அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து தனது ஜாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இணைத்துக் கொண்டார். இதனால் உண்மையான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த வகுப்பினரிடம் மோடி மன்னிப்புக் கேட்கவேண்டும். காங்கிரசு ஆட்சிக் காலத்தில் மோத் கன்சீஸ் என்ற ஜாதிப்பிரிவு உள்ளிட்ட 40 ஜாதிப் பட்டியலை பிற்படுத்தப்பட்ட பிரிவில் இணைத்தது. இதில் எதுவுமே மோடியின் ஜாதி அல்ல; மோடி மோத் கன்சாஸ் என்ற உயர்ஜாதிப் பிரிவைச் சேர்ந்தவர். வேறுபாடு கண்டு பிடிக்க முடியாத பெயர் ஒற்றுமை காரணமாக தனது ஜாதிப் பிரிவையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்குள் இரகசியமாக சேர்த்து அரசாணையை வெளியிட்டார். இந்த மாற்றம் அவரது அமைச்சரவையில் இருந்த சிலருக்கு மட்டுமே தெரிந்ததாகும். ஊடகத்திலும் இந்த அரசாணை குறித்து எந்த ஒரு தகவலும் கூறாமல் மறைத்து விட்டனர்.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் இது.

மோடி தேநீர் விற்றாரா?

மோடி தேநீர் விற்றதாகக் கூறுவதும் கேள்விக்குறியே! ஒருகாலத்தில் தான் தேநீர் விற்றதாக மோடி கூறிவருவதும் பொய்.  அவரது உறவினர் நடத்திய உணவகத்தில் பொழுதுபோக்காக சில காலம் வேலை பார்த்ததையே அவர் அப்படி திரித்துக் கூறுகிறார் என்று சக்தி சிங் கூறினார்.

Pin It