இணைப்பு 2 - சமபங்கு அடிப்படையில் பாசனப்பரப்பும் நீரும்:

  நமது கணக்குப்படி(இணைப்பு-1), 1924க்கு முந்தைய பயிர்பரப்பும், 1924 ஒப்பந்தப்படியான பயிர்பரப்பும், சிறுபாசனப்பரப்பும் சேர்ந்து மொத்தப் பாசனப் பயிர்பரப்புகள் தமிழகத்தில் 24.71 இலட்சம் ஏக்கரும், கர்னாடகத்தில் 9.22 இலட்சம் ஏக்கரும் இருப்பதாகக் கொண்டோம். நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கர்னாடகத்தின் 18.85 இலட்சம் ஏக்கரில், 9.63(18.85-9.22) இலட்சம் ஏக்கரும், கேரளாவின் 1.93 இலட்சம் ஏக்கரில், 1.40(1.93-0.53) இலட்சம் ஏக்கரும் குறைகிறது. பாசனப் பயிர் பரப்பில், மொத்தம் குறைவது 9.63+1.40=11.03 (அ) 11 இலட்சம் ஏக்கர் ஆகும்.

  மொத்தம் உண்மைப்பயிரிடும் நிலப்பரப்பு, நமது கணக்குப்படி அதில் பயிரிடும் பாசன நிலப்பரப்பு, மீதியுள்ள பாசனம் இல்லாத நிலப்பரப்பு, முதலியவற்றை இலட்சம் ஏக்கரில் கணக்கிடுவோம்.

உண்மைப்பயிரிடும் பரப்பு அதில் பாசனநிலப்பரப்பு மீதியுள்ள பாசனமில்லாப்பரப்பு

தமிழகம் -

கர்னாடகம்-

கேரளா -

பாண்டிச்சேரி-

மொத்தம்

50.88

41.61

2.79

0.27

95.35

22.30

9.22

0.53

0.27

32.32

28.58

32.39

2.26

-

63.23

        நடுவர் மன்றத்தீர்ப்புக்கும் நமது கணக்குக்கும் இடையே பாசனப் பயிர்பரப்பில் குறைகிற 11 இலட்சம் ஏக்கர் பரப்புக்கு மட்டும் புதிதாக புன்செய் பாசனம் வழங்க முடியும். பாசனம் பெறாத நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு, இந்த 11 இலட்சம் ஏக்கரை விகிதாச்சாரமுறையில், மாநிலம் வாரியாகப் பிரிக்கும்பொழுது தமிழகத்துக்கு 4.972 இலட்சம் ஏக்கரும், கர்னாடகத்துக்கு 5.635 இலட்சம் ஏக்கரும், கேரளாவிற்கு 0.393 இலட்சம் ஏக்கரும் கிடைக்கும். பாண்டிச்சேரியில் முன்பே அனைத்தும் பாசனம் பெறுகிறது.

   Cauvery 400இந்த கணக்குப்படி தமிழகத்தில் 22.3+ 4.97= 27.27 இலட்சம் ஏக்கர் பயிரிடும் நிலப்பரப்பு பாசனம்பெறும். கர்னாடகத்தில் 9.22+5.64=14.86 இலட்சம் ஏக்கர் பயிரிடும் நிலப்பரப்பு பாசனம்பெறும். கேரளாவில் 0.53+0.393= 0.923 (அ) 1.0 இலட்சம் ஏக்கர் பயிரிடும் நிலப்பரப்பு பாசனம்பெறும்.

தமிழகம்:

   தமிழகத்தில் இந்த கணக்குப்படி பயிரிடும் பாசனநிலப்பரப்பு என்பது 27.27 இலட்சம் ஏக்கர். ஆனால் பயிரிடும் பாசனபயிர்ப்பரப்பு என்பது 24.71+4.97= 29.68இலட்சம் ஏக்கர் ஏக்கர் ஆகும். சுமார் 2.40 இலட்சம் ஏக்கர் இருபோகப்பயிர் என்பதால் பயிரிடும் பாசனநிலப்பரப்பும், பயிரிடும் பாசனப் பயிர்ப்பரப்பும் வேறுபடுகிறது. புதிய பாசனபயிர்ப்பரப்பான 4.97 இலட்சம் ஏக்கர் பரப்புக்கும் நீர் உயரம்(டெல்டா) 2அடி எனக்கொண்டால், அதற்கென சுமார் 43 டி.எம்.சி நீர் தேவைப்படும்.

கர்னாடகம்:

    மூன்று மாநிலங்களிலும் உள்ள பாசனம் பெறாத வறட்சிப் பகுதிகள், இதர நீர்வள ஆதாரங்கள், வாழ்வாதாரத்திற்காக வருடம் ஒரு பயிர், அனைவருக்கும் சமத்துவப் பங்கீடு, நடுவர் மன்றத்தீர்ப்பு ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு நமது கணக்கீடு ஒரு உதாரணத்திற்காக செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இதர நீர்வள ஆதாரங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளதே ஒழிய கணக்கில் கொள்ளவில்லை.

  கர்னாடகத்தின் நடுவர் மன்றத்தீர்ப்பின் பரப்புக்கும் நமது கணக்கிற்கும் இடையே 18.85-14.86=4.01(அ)4.0 இலட்சம் ஏக்கர் இடைவெளி உள்ளது. டியூட்டி மூலம் பாசனப்பரப்பை அதிகரித்தல் என்பதில் கர்னாடகத்தில் இருந்து 2.72 இலட்சம் ஏக்கர் பரப்பும், 23.19 டி.எம்.சி. நீரும் திரும்பப் பெற வேண்டும். 4.01 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பில் 2.72 போக 1.29 இலட்சம் ஏக்கர் பரப்பும் அதற்குரிய 11 டி.எம்.சி.(2அடி, டெல்டா) நீரும் திரும்பப் பெற வேண்டும். ஆகவே மொத்தம் கிட்டத்தட்ட 34 டி.எம்.சி. நீர் கர்னாடகத்தில் இருந்து திரும்பப் பெறவேண்டும்.

கேரளா:

     நடுவர் மன்றத்தீர்ப்பிற்கும் நமது கணக்கிற்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ஏக்கர்(1.93-0.923=1.07) உள்ளது. கேரளாவிற்கு இருபோக சாகுபடிக்கு, கிட்டத்தட்ட 2 இலட்சம் ஏக்கர் பயிர்பரப்புக்கு 30 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டுள்ளது. அதில் 1 இலட்சம் ஏக்கர் பயிர்பரப்பு திரும்பப் பெறப்படுவதால் அதற்குறிய 15 டி.எம்.சி. நீர் கேரளாவிடமிருந்து திரும்பப் பெற வேண்டும். கேரளா மிகுந்த நீர்வளம் மிக்க மாநிலம் ஆகும்.

  ஆகவே மீதி உள்ள பரப்பை பாசனம் செய்ய கேரளா தனது இதர நீர்வளங்களில் இருந்து நீரைப்பெற்று பாசனம் செய்து கொள்ள முடியும் என்பதாலும், நீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்கு அதிக பாதகம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதாலும் இந்த 15 டி.எம்.சி. நீர் என்பது நியாயமான, போதுமான நீரளவு என்பதாலும் கணக்கீட்டின்படி 15 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டுள்ளது.

  மொத்தம் உள்ள 726 டி.எம்.சி. நீரை உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பின் அடிப்படையில் விகிதாச்சாரக் கணக்கில் பிரிக்கும்பொழுது கேரளாவிற்கு அதிகபட்சம் 21 டி.எம்.சி தான் வருகிறது. எனவே பாரம்பரியப்பரப்போ அல்லது 1924 ஒப்பந்தப்படியான பரப்போ இல்லாத, அதிக நீர்வளமுடைய கேரளாவிற்கு இந்த 15 டி.எம்.சி. நீர் என்பது போதுமானதாகும்.

பாண்டிச்சேரி:

    பாண்டிச்சேரியின் மொத்தப் பயிரிடும் நிலப்பரப்பு 27000 ஏக்கர் ஆகும். அதில் 16000 ஏக்கர் இருபோகப்பாசனம் பெறுகிறது. ஆக மொத்தம் 27000+16000=45000 ஏக்கர் பயிர்ப்பாசனம் உள்ளது. இவை அனைத்தும் 1924 க்கு முன் பாசனம் பெற்று வருவதால், பாரம்பரிய உரிமைப்படி எதனையும் குறைக்க இயலாது. இந்த 46000 ஏக்கருக்கான நீர்த்தேவை என்பது 6.84 டி.எம்.சி ஆகும். enavaeஎனவே பாண்டிச்சேரிக்கு மொத்தம் 7 டி.எம்.சி நீர் தேவை.

நியாயமான பகிர்வின் அளவு: 

  காவேரி நடுவர் மன்றம் முன்பே ஒப்புதல் வழங்கிய 24.71 இலட்சம் ஏக்கர் பயிர்பரப்புக்கு 419 டி.எம்.சி. நீர் தேவை. சமபங்கு உரிமை அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்கப்படும் 4.97 இலட்சம் ஏக்கர் புன்செய் பரப்புக்கு, 43 டி.எம்.சி. நீர் தேவை. 1924க்கு முந்தைய கோடைகால நெற்பயிருக்கு என 4.86 டி.எம்.சி. நீரும், சேத்தியாத் தோப்புக்கு 3.29 டி.எம்.சி. நீரும் தேவை. எனவே மொத்தமாக 419+43+4.86+3.29= 470.15 (அ) 470 டி.எம்.சி. நீர் தேவை.

 தமிழகத்திற்கு புதிதாக 51 டி.எம்.சி. நீர் தேவை. கர்னாடகா 34 டி.எம்.சி. நீரும், கேரளா 15 டி.எம்.சி. நீரும் தந்தால் 49 டி.எம்.சி. நீர் கிடைக்கும். பொதுப்பங்கில் இருந்து 2 டி.எம்.சி. நீர் எடுத்துக்கொண்டால் தமிழகத்தின் தேவையான 51 டி.எம்.சி. நீர் பெறப்பட்டுவிடும். பொதுப்பங்கில் இருந்து எடுக்கும்பொழுது தமிழகம், கர்னாடகம் ஆகியவற்றுக்கு தலா 1 டி.எம்.சி. நீர் குறையும். அப்பொழுது தமிழகத்திற்கு 50 டி.எம்.சி. நீர் அதிகமாகவும், கர்னாடகத்திற்கு 35 டி.எம்.சி. நீர் குறைவாகவும் கிடைக்கும்.

 அப்பொழுது. நமது கணக்குப்படி தமிழகத்துக்கு 469 டி.எம்.சி. நீரும், கர்னாடகத்துக்கு(270-35) 235 டி.எம்.சி. நீரும், கேரளாவுக்கு 15 டி.எம்.சி. நீரும், பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் கிடைக்கும். இதுவே நியாயமான முறையான பகிர்வு ஆகும்.                              

இணைப்பு 3 - காவேரி நதிநீர்த்தரவுகள்:

   தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பான 1.30 இலட்சம் சதுர கி.மீ இல், தமிழகத்தின் காவேரி வடிநிலப் பரப்பு என்பது 44,016 ச.கி.மீ. ஆகும். இது தமிழகப் பரப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆகும். கர்னாடக அரசின் காவேரி வடிநிலப் பரப்பு என்பது 34,273 ச.கி.மீ. ஆகும். கேரள அரசின் காவேரி வடிநிலப் பரப்பு என்பது 2,866 ச.கி.மீ. ஆகும். மொத்தக் காவேரி வடிநிலப் பரப்பு என்பது 81,155 ச.கி.மீ. ஆகும்.

  காவேரி வடிநிலப் பரப்பின் மொத்த உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு (NET SOWN AREA) என்பது 95.55 இலட்சம் ஏக்கர் ஆகும். அதில் தமிழகத்தின் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது 20,59,000 EKTARஎக்டர்(50.88 இலட்சம் ஏக்கர்) ஆகும். பாண்டிச்சேரியின் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது 0.27 இலட்சம் ஏக்கர் ஆகும்.

  காவேரி வடிநிலப் பரப்பில் கர்னாடகத்தின் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது 16,84,000 எக்டர்(41.61 இலட்சம் ஏக்கர்) ஆகும். கேரளாவின் உண்மைப் பயிரிடும் நிலப்பரப்பு என்பது 1,13,000 எக்டர்(2.79 இலட்சம் ஏக்கர்) ஆகும். காவேரி நதி தமிழகத்தில் 416 கி.மீ தூரமும், கர்நாடகத்தில் 320 கி.மீ தூரமும், இரு மாநில எல்லைகளிலும் 64 கி.மீ தூரமும் ஆக மொத்தம் 800 கி.மீ தூரம் ஓடிக் கடலில் கலக்கிறது. (பார்வை: காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொகுதி-1, பக்: 28,29.& தொகுதி-5, பக்: 20)

காவேரி நதியின் நீர்வளம், அணைகள்:(பார்வை: தொகுதி-3, பக்:77,79)

  1900-01 முதல் 1971-72 வரை 72 வருடங்களுக்கு காவேரி நதியின் வருட சராசரி நீர்வளம் 792.3 டி.எம்.சி. 1900-01 முதல் 1933-34வரை 34 வருடங்களுக்கு காவேரி நதியின் வருட சராசரி நீர்வளம் 830 டி.எம்.சி. 1934-35 முதல் 1971-72வரை 38 வருடங்களுக்கு காவேரி நதியின் வருட சராசரி நீர்வளம் 767 டி.எம்.சி. 1934-35 முதல் 1971-72வரை 38 வருடங் களுக்கு மேட்டூர் அணைவரை வருட சராசரி நீர்வளம் 527 டி.எம்.சி.

    1934-35 முதல் 1971-72வரை 38 வருடங்களுக்கு மேட்டூர் அணைக்கு வந்த வருட சராசரி நீர் அளவு 377 டி.எம்.சி. இந்த 38 வருடங்களில் கர்னாடகாவின் வருட சராசரி நீர்ப்பயன்பாடு 150 டி.எம்.சி.

அணைகள்: கொள்ளளவு டி.எம்.சி யில்(தொகுதி-3, பக்:97-100)

 மாநிலம் 1972 வரை பின் இன்றுவரை மொத்தம்
 தமிழகம் 149 1 150
 கர்னாடகம் 57 78 135
 கேரளா 11 21 32
இதர சிறு அணைகள் - - 13
 மொத்தம் 217 - 330

  1900முதல்1934வரை 830 டி.எம்.சி. நீர்வளம் கொண்டிருந்த காவேரி 1934க்குப்பின் 767 டி.எம்.சி. என குறைந்து போனது. இன்று மேலும் குறைந்து போயிருக்கவேண்டும். 1972க்குப் பின் நாம் அணை எதையும் கட்டவில்லை. ஆனால் கர்னாடகம் 78 டி.எம்.சி.யும் கேரளம் 21 டி.எம்.சி.யும் கொள்ளளவு கொண்ட அணைகளைக் கட்டியுள்ளன, கட்டப்போகின்றன. இவ்வாறு தொடர்ந்து அணை கட்டப்பட்டு வந்தால் காவேரியின் நீர் வரத்து இல்லாது போய்விடும். அணை கட்டுவதற்கும், காவேரியின் நீர் வரத்து குறைவதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். கேரளத்திற்கு 32 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணைகள் தேவை இல்லை.

1924 ஒப்பந்தமும் தீர்ப்பும்-நீர் வரத்து: (பார்வை: தொகுதி-1, பக்:44,45 & தொகுதி-5, பக்:240)

    1924 ஒப்பந்தத்தில் கல்லணையில் வழங்கவேண்டிய நீரளவு சொல்லப்பட்டு அது 1929ல் வினாடிக்கு இவ்வளவு கன அடி என மாற்றப்பட்டது. அதனை நடுவர் மன்றம் சாத்திய மற்றதாகக் கருதி நிராகரித்து விட்டது. 1924 ஒப்பந்தப் படியும், நடுவர்மன்றத் தீர்ப்புப்படியும் வழங்கவேண்டிய நீர்அளவு

1924ஒப்பந்தப்படி கனஅடி/வினாடி டி.எம்.சி. தீர்ப்புப்படி(டி.எம்.சி.)
ஜுன் 6.5’ 29,800 75 10

ஜுலை

ஆகஸ்ட்

7.5’

7.7’

40,100

40,100

103

103

34

50

செப் 7.0’ 35,000 87.5 40
அக் 6.5’ 29,800 75 22
நவம் 6.0’ 25,033 62.5 15
டிசம் 3.5 8013 22.5 8
ஜன 3.0’ 6170 15 3
பிப்-மே - - - 4 x 2.5
வழங்கவேண்டிய மொத்த நீரளவு 543.5 192.0

 1924ல் நமக்குக் கிடைப்பதில் மூன்றில் ஒருபங்குதான் இன்று நமக்குக் கிடைக்கிறது. அன்று சுமார் 850 டி.எம்.சி நீர் வளம் இருந்தது, 540 டி.எம்.சி நீர் vazhகல்லணையில் வழங்கப்பட்டது. 1934-35முதல் 1971-72வரை மேட்டுர் அணைக்கு 377 டி.எம்.சி நீர் தரப்பட்டது எனில் பில்லிகுண்டுவில் சுமார் 350 டி.எம்.சி நீர் எனவும், தமிழகத்தில் கல்லணையில் 540 டி.எம்.சி நீர் எனவும் ஆகிறது. தமிழகப் பயன்பாடு போக மீதி 190 டி.எம்.சி நீர்வளம் தமிழகத்தில் சேர்ந்துள்ளது என ஆகிறது. இன்று 750 டி.எம்.சி நீர் வளம் இருக்கிறது, ஆனால் 192 டி.எம்.சி நீர் மட்டுமே தீர்ப்புப்படி வழங்கப்படவேண்டும். அதையும் வழங்கக் கர்னாடகம் தயாராக இல்லை. நமது கணக்குப்படி 35 டி.எம்.சி நீர் அதிகமாக, அதாவது 227 டி.எம்.சி நீர் வழங்கவேண்டும். இது 1990 வாக்கில் கர்னாடகம் தமிழகத்திற்கு பில்லிகுண்டுவில் வழங்கிவந்தது ஆகும். மழை அளவு குறைய வில்லை. ஆனால் நீரைத்தடுத்து நிறுத்தும் கட்டுமானங்கள் பல மேல் பகுதியில் பெருகிவிட்டன. அதனால் நீர்வளம் 100 டி.எம்.சி குறைந்துள்ளது போல் தெரிகிறது. அதைக்காரணம் காட்டி கர்னாடகா, கேரளா அரசுகள் நமக்கான நீர் அளவைக் குறைக்கின்றன.

தீர்ப்பு நடைமுறை :

   நடுவர் மன்றம் மேட்டூர் அணை வரையான நீர்வளத்தை 508 டி.எம்.சி எனவும், அதன் கீழ் தமிழகத்தில் உள்ள நீர் வளத்தை 232 டி.எம்.சி எனவும் எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட உத்தரவுகளை வழங்கியது. பில்லிகுண்டுவில் கர்நாடக அரசு 192 டி.எம்.சி (182 + 10) நீர் விட வேண்டும். அதில் 10 டி.எம்.சி நீர் சுற்றுப்புறச் சூழ்நிலைக்காகத் தரப்பட வேண்டும்.

  தமிழகத்தில் உள்ள 232 டி.எம்.சி நீரில், கேரளாவிற்கு பவானி நதியில் 6 டி.எம்.சி உம் பாம்பார் நதியில் 3 டி.எம்.சி உம் ஆக மொத்தம் 9 டி.எம்.சி நீரும் (6 + 3), பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி நீரும், கடலில் வீணாக 4 டி.எம்.சி.நீரும் ஆக மொத்தம் 20 டி.எம்.சி போக, தமிழகத்திற்கு 212 டி.எம்.சி மட்டுமே கிடைக்கும். பில்லிகுண்டுவில் 182 டி.எம்.சி நீரும், பில்லிகுண்டு முதல் மேட்டூர் அணை வரை 25 டி.எம்.சி நீரும் மேட்டூர் அனைக்குக் கீழ் 212 டி.எம்.சி நீரும் சேர்ந்து ஆக மொத்தம் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி நீர் (182 + 25 + 212 ) கிடைக்கும்.

     மேட்டுர் அணை வரை நீர்வளம் 508 டி.எம்.சி என்பதால் தமிழகத்துக்கு வழங்கப்படும் 217 டி.எம்.சி(192+25) நீரும், கர்னாடகத்தில் இருந்து கேரளாவிற்கு வழங்கப்படும் 21 டி.எம்.சி நீரும் போக மீதி உள்ள 270 டி.எம்.சி ( 508-(217+21) ) நீர் கர்னாடகத்திற்குக் கிடைக்கும். கேரளாவிற்கு கர்னாடகாவில் இருந்து 21 டி.எம்.சி நீரும், தமிழகத்தில் இருந்து 9 டி.எம்.சி. நீரும் ஆகமொத்தம் கேரளாவிற்கு 30 டி.எம்.சி. நீர் கிடைக்கும். இவ்விதமாக நடுவர்மன்றத் தீர்ப்பு நடைமுறைப் படுத்தப்படும்.[பார்வை : காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பு, தொகுதி-5, பக்: 205, 206]   

- கணியன்பாலன், ஈரோடு.

Pin It