போப் யான் பால்-II:-

     1995 ஆம் ஆண்டு ரோமன் கத்தோலிக்க பேராயர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

“ ஒரு உயிரைக் கொன்று மற்றொரு உயிரை காக்கும் சூழலில் எந்த அரசுகளும் இருக்கக் கூடாது”.

செப்டம்பர் 13, 2000 அன்று செய்ன்ட் பீட்டர் சதுக்கத்தில் நடந்த கூட்டத்தில் “ தனது தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்புகளைத் தடுக்கும் மரணதண்டனை இருக்க வேண்டாம்” என்று நான் விருப்பப்படுகிறேன், என பேசியுள்ளார்.

சனவரி 27, 1999-ல் “மரணதண்டனை என்பது கொடூரமானது, தேவையற்றது. ப்ரோ-லைஃப் என்ற அமைப்பின் முன்முயற்சியால், தவறு செய்தவனின் உயிரை எடுக்கும் மரணதண்டனைக்கு எதிரான கருத்து எல்லா மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தவறு செய்யும் மனிதனை திருத்தும் வழிமுறைகள் இந்த புதிய சமுதாயத்தில் அதிகம் உள்ளன”, என்று கூறியுள்ளார்.

போப் பெனடிக் 16:-

யூலை 10, 2009 ஆம் ஆண்டு வாடிகனுக்கான மெக்சிக்கோவின் பிரதிநிதியை, மெக்சிக்கோவில் 2005ம் ஆண்டில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டது தொடர்பாக பாராட்டியுள்ளார்.

“எல்லா நேரங்களிலும் மனித உயிர்கள் மதிக்கப்படவேண்டும். மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் மனித உயிர்கள் மீதான மதிப்பை கவனத்தில் கொள்ளவேண்டும்”.

“மனித வாழ்வின் ஆரம்ப படிநிலையில் இருந்தே மனித உயிர்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட முயற்சி மேற்கொண்டுள்ள மெக்சிக்கோ அரசை தான் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் “ஒரு உயிரைக் கொன்று மற்றொரு உயிரை காக்கும் சூழலில் எந்த ஒரு அரசுகளும் இருக்கக்கூடாது” என்றும் சொல்கிறார்.

கார்டினல் ரெனடோ மார்டினோ:-

     நீதி மற்றும் அமைதிக்கான ஆணையத்தின் தலைவரான இவர்                  “மரணதண்டனை என்பது அடிப்படை கோட்பாட்டிற்கு எதிரானது, இது கண்டிப்பாக நீக்கப்பட வேண்டிய ஒன்று” என்று செப்டம்பர்-29,2008 ல் உரையாற்றியுள்ளார்.

     “ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் சரியாகாது, உலகம் முழுவதும் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும், ஏனெனில் இது மனித நாகரிக வளர்ச்சிக்கு எதிரான குறியீடாகும்” என்று மே-25, 2009 ம் ஆண்டு பேசியுள்ளார்.

     “மரணதண்டனை என்பது நீதியின் வரையறைக்குள் வராது. ஒவ்வொரு உயிருக்கும் இயற்கை மரணம் வரும் வரைக்கும் தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை உள்ளது” என்று மார்ச்-28 2008 அன்று வாடிகன் செய்திதாளுக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.

     “நமது குரல், கருக்கலைப்புக்கு எதிராக மட்டுமல்லாமல் கருணைக் கொலை மற்றும் மரணதண்டனைக்கு எதிராகவும் இருக்க வேண்டும், மேலும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களை எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது” என்று யூன் 20, 2001ல் மனித வாழ்விற்கான அமைப்பின் போதகர்களிடம் கூறியுள்ளார்.

     பிரான்சில் உள்ள ஸ்டார் போர்க்-ல் யூன் 21-23, 2001-ல் நடைபெற்ற மரணதண்டனைக்கு எதிரான உலகமாநாட்டில் வாடிகன் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.

     “மரணதண்டனை என்பது வன்முறை மற்றும் நீதியற்ற செயலின் குறியீடாக உள்ளது. மரணதண்டனையை ஒழிப்பது என்பது மனித உயிர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படிநிலையின் முன்னேற்றமாகும். குற்றங்களை அணுகும் முறையில் உள்ள மாற்றங்கள் மூலம் மனிதகுலத்தால் மரணதண்டனையை தவிர்க்கலாம். மேலும் இது மனிதகுலத்திற்கான வெற்றியையும் புதுநம்பிக்கையையும் கொடுக்கும்”.

“கருக்கலைப்பிற்கு எதிராக போராடுகிறவர்கள், மரணதண்டனைக்கு ஆதரவாக பேசுகிறார்கள். இது மிகப்பெரிய முரண்பாடு” என்று போப்-அய் தேர்ந்தெடுக்கும் நிலையில் உள்ள திரு.ஆன்சலினோ அவர்கள் 1992-ல் செய்தித்தாள் ஒன்றுக்கு கொடுத்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழில் : குமணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It