இந்திய நாட்டை பீடித்துள்ள ஊழல் நோயை குணமாக்கப் போகிறேன் என திடீரென ஞானோதயம் ஏற்பட்டு இன்று இந்திய நாட்டின் இறையாண்மைக்கே சவாலாக விளங்கிவரும் இந்துத்துவா கும்பலால் களமிறக்கப்பட்டு ஊடகங்களாலும் ஆதிக்க சக்திகளாலும் ஒரே இரவில் "ஹீரோ" அவதாரம் எடுத்திருக்கிறார் அன்னா ஹசாரே என்கிற 73 வயது இந்தியன் தாத்தா....

vijay_anna_hazare_450மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் ஆட்சிக்காலத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது "முந்திரா" ஊழல்... மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சிகாலத்தில் இன்றளவும் பேர்சொல்லும் வகையில் சாதனையாக அமைந்தது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்... இந்த இந்தியன் தாத்தாவிற்கு நேசமான பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் "டெஹல்ஹா" அம்பலப்படுத்திய பங்காரு லட்சுமணின் ஊழல்... இன்னும் எண்ணிலடங்கா ஊழல்... ஊழல்... ஊழல்... இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து பழகிப்போய்விட்ட நமது இந்திய மக்களுக்காக மேற்குறிப்பிடப்பட்ட ஊழல்கள் நடந்தேறி நாடே சந்திசிரித்தபோதெல்லாம் அறக்கட்டளைகள்  மூலமாக கல்லா கட்டிக் கொண்டிருந்த இந்தியன் தாத்தாவின் கம்பனி இன்று ஏதோ ஒரு மறைமுக காரணத்திற்காக திடீரென ஊழலுக்கெதிராக உண்ணாவிரதம் என்கிற ஒரு கதை, திரைக்கதை, வசனத்தை புனைந்து மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது. இருப்பினும் இயக்கியவர் யார் என்பதை இதுவரை கண்டுகொள்ள இயலவில்லை...

எப்போதும்  ஏமாந்தே பழகிவிட்ட எம் இந்தியமக்கள் இன்று இந்தியன் தாத்தாவின் கொள்கையை சுமந்தவர்களாக ராம்லீலா மைதானத்தில் கொலுவில் உள்ளார்கள்... இந்தியன் தாத்தாவின் இந்த ஊழல் ஒழிப்பு என்கிற புருடாவிற்கு இந்தியா எங்கிலும் ஆதரவுக் குரல்கள், ஊர்வலங்கள், அடையாள உண்ணாவிரதங்கள் இதில் நமது தமிழ்நாட்டவர்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா...? அதிலும் குறிப்பாக தமிழ்த் திரையுலக நாயகர்கள் {நாளைய தமிழக முதல்வர்கள்} அவர்களுக்கென்ன யாரும் சொல்லியா தரவேண்டும்... தமிழ்த்திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர்சங்க கட்டிட வளாகத்தில் இந்தியன் தாத்தாவிற்கு ஆதரவு  தெரிவிக்கும் வகையில் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்கள்...!

இதில் கவனிக்கப்படவேண்டியவர் சமீபகாலமாக வெளியான மறுநாளே திரையரங்குகளைவிட்டு தனது படங்கள் பெட்டிக்குள் சுருண்டுவிடுவதால், தன்னை தக்கவைத்துக்கொள்ள திரைக்கு வெளியிலும் நடிக்கத் தொடங்கி இருக்கும் "இளைய தளபதி" விஜய்... இந்த இந்தியன் தாத்தாவின் விசயத்தில்கூட மற்றவர்கள் தமிழகத்திலேயே ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது இவர் இந்தியத் தலைநகருக்கு சென்று இந்தியன் தாத்தாவை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை சொல்லி வந்திருக்கிறார்... அப்போது பேசிய இளைய தளபதி, தாத்தாவின் போராட்டத்திற்கு தனது மக்கள் இயக்கம் முழுமையான ஆதரவு தருவதாக கர்ஜித்திருக்கிறார்...!

கடந்த ஆட்சிக்காலத்தில் இவரது படங்கள் முன்னாள் முதல்வர் 'தமிழ்த்தாத்தா'வின் பேரன்களால் முடக்கப்பட்டு பிழைப்புக்கே தட்டேந்தவேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவோமோ என்கிற அச்சத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்களிடம் அப்பா சகிதமாக தஞ்சம் புகுந்தார்... திடீரென ஒருநாள் நாகப்பட்டினத்தில் மீனவர் படுகொலையைக் கண்டித்து கூட்டம் எல்லாம் நடத்தினார்... அதன் பிறகு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாவிடம் அப்பாவிற்காக சீட்டெல்லாம் கேட்டு சீ...பட்டதாக கேள்வி...

சரி இப்போதைய கதைக்கு வருவோம். ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி என புறப்பட்டிருக்கும் இந்தியன் தாத்தாவை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்து தனது தேசப்பற்றை பதிவு செய்து வந்திருக்கும் இளைய தளபதிக்கும் தமிழகத்திலேயே இருந்தபடி ஆதரவு தெரிவித்திருக்கும் ஏனைய பிற யோக்கிய சிகாமணிகளுக்கும் நாம் கேட்க வருவது - உங்கள் ஆதரவெல்லாம் சரிதான் ஆனால் இந்தியன் தாத்தாவின் கொள்கை முழக்கத்தை முழுதுமாக உணர்ந்து அறிந்துதான் நீங்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தீர்களா...! இந்தியன் தாத்தா என்ன சொல்கிறார்  தெரியுமா...?

இந்திய நாட்டில் ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் இயற்ற வேண்டும்; கருப்புப் பண முதலைகளை களையெடுக்க வேண்டும் என்கிறார்... கருப்புப் பணத்தின் மொத்த குத்தகைதாரர்கள் திரையுலக பிரம்மாக்களே நீங்கள்தானே...

ஊழலும் வரி ஏய்ப்பும் உங்களிடமிருந்துதானே ஆரம்பமாகிறது. இல்லை என்று உங்களில் யாராவது மறுக்க முடியுமா? உங்களில் யாராவது வாங்கக்கூடிய கோடிக்கணக்கான சம்பளத்திற்கு முறையாக வருமானவரி செலுத்தியது உண்டா? உங்களைப் போன்ற நடிகர்களின் வரிஏய்ப்பைக் கண்டறிந்து கைப்பற்றினாலே அடுத்த ஐந்தாண்டுகால தமிழக பட்ஜெட்டை வரியில்லாமல் போட்டுவிடலாமே... எம் மக்கள் சற்று இளைப்பாற தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சிபெற கருவியாக பயந்தரக்கூடியவர்கள் நீங்கள் ஆகையினால் எம் மக்கள் உங்களை மதிக்கிறான் அந்த நிலையை தக்கவைத்துகொள்ளுங்கள்... மாறாக மக்களை மடையர்களாக ஆக்கும் இந்த ஆகாத வேளை எல்லாம் தேவை இல்லாதது...

எம் தமிழ் மக்களின் உழைப்பையெல்லாம் ஊதியமாக பெற்று கோமான்களாக வாழும் நடிகர்களே... இன்று ஊடகங்களின் பார்வை உங்கள்மீதும் படவேண்டும் என்பதற்காக இந்தியன் தாத்தா அன்னா ஹசாரேவின் ஜிகிர்தண்டா போராட்டதிற்கெல்லாம் டெல்லி வரை சென்று ஆதரவு தந்து போட்டோவிற்கு போசெல்லாம் கொடுத்துவிட்டு வரும் நீங்கள் உங்கள் கண்முன்னால் உங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் உறவுகள் செய்யாத குற்றத்திற்காக அனைத்து தரப்பினராலும் வஞ்சிக்கப்பட்டு தூக்குமேடையின் தூரத்தை வெகுவாக நெருங்கிக் கொண்டிருக்கிரார்களே... அதனைக் கண்டு ஒவ்வொரு தமிழனும் நெஞ்சுவெடித்து சிதறும் வேதனை அனுபவித்துகொண்டிருக்கிறானே... இந்த கொடுமையெல்லாம் கண்டு உங்களுக்கு உணர்வு பொங்கவில்லையா? அண்மையில் தமிழகத்தில் ஓர் இயக்கம், கொடுங்கோலன் தாய்ப்பாலுக்கு பதிலாக மனிதமலத்தை உண்டு வளர்ந்த ஈனப்பிறவி ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிடக்கூட மனம்வராத இந்த இளையதளபதி விஜய் இன்று டெல்லி சென்று வந்திருக்கிறார்...

தமிழினமே இவர்களை அடையாளம் கண்டுகொள்! நாம் இளித்தவாயர்களாக இருக்கும்வரை இவர்களைப் போன்றோர்  நமது உழைப்பிலேயே உண்டுகொழுத்து நம்மையே அழிக்க நினைப்பார்கள்... ஏன் ஆளவும்  நினைப்பார்கள்... நிழல்களை நிஜமாக நினைத்து நமது நிலையை நாமே இழக்கவேண்டுமா...?  

- வேங்கை.சு.செ.இப்ராஹீம்
Pin It