அன்புடையீர்,
வணக்கம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டுவரும் உலகுதழுவிய பெருந்திரள் கையொப்ப இயக்கத்திற்கான விண்ணப்பமும் படிவமும் இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். இதனைத் தரவிறக்கம் செய்து, அச்சிட்டுத்  தேவையான படிகள் எடுத்து, நண்பர்களிடமும் பொதுமக்களிடமும் கையொப்பங்கள் திரட்டி, வருகிற மே 18க்குள் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். இது குறித்து நீங்கள் செய்து வரும் பணியை எனக்குத் தெரிவித்தால் மகிழ்வேன். திரட்டிய கையொப்பங்களை கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன்..

அன்புடன்
தியாகு
(தொடர்புக்கு: 92831 10603, 98651 07107, 044-236 10603)
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்,
(நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் சார்பில்). 

87/31, காமராஜர் நகர் 3வது தெரு, சூளைமேடு, சென்னை ‍- 94


Transnational Government of Tamileelam

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


Office of the Chief Executive
875 Avenue of the Americas, Suite 1001,
New York, NY 10001, USA
www.tgte.org
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மேதகு பான் கீ மூன்
செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபை
ஜ நா அலுவலகம்
நியூ யோர்க் 

மதிப்புக்குரிய செயலாளர் நாயகம் அவர்களுக்கு, 

சிறீ லங்காவின் அரசியல் தலைவர்களையும், இராணுவத்தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் வழக்குத்தொடுநருக்கு முன் பாரப்படுத்துமாறு, நிபுணர்குழுவின் பரிந்துரையின்படி விசாரணைக்கான சர்வதேச நெறிமுறையினை உருவாக்குதல் 

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியனவற்றுக்கு பொறுப்பான அரசியல், இராணுவ தலைவர்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநருக்குப் பாரப்படுதுமாறு கீழே கையெழுத்திட்டிருக்கும் நாங்கள் தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் நிபுணர் குழுவின் பரிந்துரையில் குறித்தவாறு இந்த மேற்குறிக்கப்பட்ட குற்றங்களுக்காக சிறி லங்காவின் பெறுப்பினை விசாரிப்பதற்கான ஒரு சர்வதேச நீதிக் குழுவை அமைக்குமாறும் வேண்டுகின்றோம்.

நிபுணர் குழுவானது கீழ் காணும் ஐந்து விடயங்களின் சிறி லங்கா அரசின் கடுமையான மீறல்களை மேற்கொண்டுள்ளதாக அடையாளம் கண்டுள்ளது. 

(1) பரவலான செல் தாக்குதல்கள் மூலம் பொதுமக்கள் கொல்லப்பட்டமை, 

(2) மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான இலக்குகள் மீது செல்தாக்குதல்கள், 

(3) மனிதாபிமான உதவிகளை மறுத்தல், 

(4) போரின்போது பலியானவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள், இதில் உள்ளக இடம்பெயர்ந்தவர்களும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகப்பட்டவர்களும் அடங்குவர். 

(5) போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியே மானிடத்திற்கு இழைக்கப்பட்ட குற்றங்கள். 

ஊடகங்களும் அரசை விமர்சித்தவர்களுக்கு எதிரானவையும் இதனுள் அடங்கும். இவை தமிழ் மக்களுக்கு எதிராக பெரும்பாலும் சிங்களவர்களையே கொண்ட சிறிலங்கா அரசின் அரசியல், இராணுவத்தலைமைகளினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்களாக அமைந்துள்ளன. இச் சர்வதேச குற்றங்களை திட்டமிட்ட முறையில் அரசியல் இராணுவத்தலைமைகள் நிறைவேற்றியுள்ளதனால் அவர்கள் இதற்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும், நிபுணர் குழுவால் கவனமாக ஆராயப்பட்டு பெறப்பட்ட மேலதிக சான்றுகளின்படி யுத்தம் முடிவடைந்த பின்பும்கூட தமிழ் மக்கள் இன அடிப்படையில் சித்திரவதை, பலவந்தமான சிறைப்படுத்தல், ஏனைய வகையில் அமைந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பதும் இவை இலங்கை அரசின் நடைமுறைக் கொள்கையின் பால் அமைந்தவையே என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கையின்படி தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் மிகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. போரின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்கிறது. குறிப்பாக பாலியல் வன்முறை, உடனடியாகக் கொல்லுதல், பரவலான செல்லடி மற்றும் உணவு மருந்து மறுத்தல் ஆகியவற்றைத் கோடிட்டுக் காட்டுகிறது.

சர்வதேச சட்டவியலின் கீழ் மட்டும் இல்லாது ஒரு நாட்டின் சட்டவியலின் கீழும் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் இனப்படுகொலை இடம் பெறும் அல்லது இடம்பெறலாம் என்பதை நாம் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. இனப்படுகொலையில் உள்நோக்கம் முக்கிய உறுப்பாகும். அதனை நடவடிக்கையின் அளவு மற்றும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உய்த்துணரலாம். இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் காணப்பட்ட தகவலின் அடிப்படையில் இனப்படுகொலைக்குரிய இவ்வகையான உறுப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே சர்வதேச நியமங்களுக்கு எதிரான வகையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்பான அரசியல், இராணுவ தலைவர்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத்தொடுநருக்குப் பாரப்படுதுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இச்சர்வதேச குற்றங்களை விசாரிக்க ஒரு விசாரணைக்குழுவை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

உண்மையுள்ள


Transnational Government of Tamileelam

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


Office of the Chief Executive
875 Avenue of the Americas, Suite 1001,
New York, NY 10001, USA
www.tgte.org
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

His Excellency Ban Ki-moon
Secretary General of the United Nations
New York, NY 10017
USA 

Dear Mr. Secretary General: 

Referral of the Political and Military Leaders of Sri Lanka to the Prosecutor of the ICC for Investigation and Establishment of an International Mechanism Recommended by the Panel

We, the undersigned, request you to refer those responsible for genocide, crimes against humanity and war crimes committed against the Tamil People in Sri Lanka to the Prosecutor of the International Criminal Court (ICC) for investigation. We also urge you to appoint a Commission of Inquiry as recommended by the Secretary General’s Panel of Experts on Accountability in Sri Lanka to conduct investigations pertaining to the above crimes. 

The Panel of Experts has identified five serious violations committed by the Government of Sri Lanka. These are:

(i) Killing of civilians through widespread shelling, 

(ii) Shelling of hospitals and humanitarian objects, 

(iii) Denial of humanitarian assistance, 

(iv) Human rights violations suffered by victims and survivors of the conflict, including both IDPs and suspected LTTE cadres,

 (v) human rights violations outside the conflict zone, including against the media and other critics of the Government 

They constitute actions directed by the military and political command of the Sri Lankan Government comprising almost exclusively Sinhalese against the Tamil civilians and therefore clearly establish that genocide, crimes against humanity and war crimes had been planned and perpetrated by the political and military command, resulting in the joint responsibility of the political and military command for the international crimes. 

Furthermore, the Panel has gathered additional evidence which discloses that the policies of the Sri Lankan government immediately after the war subjected the Tamil population to torture, forcible imprisonment and other denials of human rights. Such persecutory and discriminatory conduct was based entirely on the ethnicity of people. 

The report states that thousands of Tamil civilians were killed in the final months of the war and highlights rape, summary execution, enforced disappearances, widespread shelling, and denial of food and medicine. It is abundantly clear from the Panel’s information that Genocide of Tamil civilians has taken place. 

We also note that based on recent international as well as national jurisprudence the act of genocide can and has taken place in a limited geographic zone. The intent, an important component of the act of genocide can be inferred from the scale and nature of the operation. Based on information in the Panel report these components of the crime of genocide are present. 

We urge you to hold those responsible for the international crimes against the Tamil People by referring the political and military command of Sri Lanka at the time to the Prosecutor of the International Criminal Court (ICC). We also urge you to appoint a Commission of Inquiry to investigate international crimes that took place in the island of Sri Lanka against the Tamil People. 

Thank you.

Sincerely,

 


Referral of the Political and Military Leaders of Sri Lanka to the Prosecutor of the ICC for Investigation and Establishment of an International Mechanism Recommended by the Panel

# Name City / Country E-Mail or Phone Number Signature
1
2
3
4
5
6
7
8
9
Pin It