harrish mohamed 350கடந்த காலமும் நிகழ் காலமும்!

ஆர்.எஸ்.எஸ் தனது பொருப்புதாரிகளும், உறுப்பினர்களும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை என வெளிப்படையாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றது.

ஜனவரி 10, 2011 ஆம் ஆண்டு குஜராத்தின் சூரத் நகரில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்காக நடந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இன் தலைவர் மோகன் பகவத் பேசும்போது தீவிரவாதிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் இல் இடமில்லை என்றார். மேலும் அவர் கூறியதாவது :

நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பான்மையினருக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பிருப்பதாக குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களில் சிலர் தானாக ஆர்.எஸ்.எஸ் இலிருந்து வெளியேறியவர்கள் என்றும் மற்றும் சிலரை தீவிரவாத எண்ணம் கொண்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் இல் இடமில்லை என்று ஆர்.எஸ்.எஸ் வெளியேற்றியதாக கூறினார்.

(தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 11 ஜனவரி 2011 பக்கம் : 3)

ஆர்.எஸ்.எஸ் தன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ் இல் தீவிரவாதம் எண்ணம் கொண்டவர்களுக்கு இடமில்லை என்று பூசி மொழுகினாலும் குற்றம் சாட்டப்படும் தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ் இன் உறுப்பினர்களே.

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சூரத் பேச்சு இயல்பான சில கேள்விகளை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. அவை :

1. முதலாவதாக ஆர்.எஸ்.எஸ் இலிருந்து தானாக வெளியேறிய தீவிரவாதிகளின் பெயர்களை வெளியிடவேண்டும்.

2. இரண்டாவதாக தீவிரவாதம் எண்ணம் கொண்டவர்கள் என ஆர்.எஸ்.எஸ் வெளியேற்றியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்.

இந்த கேள்விகளுக்கு பதிலைக் கொடுத்து ஆர்.எஸ்.எஸ் நாட்டு மக்களை தெளிவுபடுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக இந்த இரண்டு கேள்விகளுக்கான விடையை இந்தியாவின் காவல்துறை மற்றும் பாதுகாப்பு துறையிடம் பகிர்ந்து கொண்டால் விசாரணைகளுக்கு அது ஏதுவாக அமையும்.

இன்னும் குறிப்பாக மோகன் பகவத்தை விசாரணைக்கு உட்படுத்தினால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் முழு விவரங்களும், குற்றம் சுமத்தப்பட்டதற்காக தலைமறைவாக இருக்கும் சில தீவிரவாதிகலின் விவரங்களை பெறலாம். மேலும் திரைப் மறைவில் தீவிரவாத செயலில் ஈடுபடுகின்ற சில தீவிரவாதிகள் குறித்த விவரங்களையும் அவரை விசாரிப்பதின் மூலம் வெளிப்படலாம்.

இதுவரை நாட்டில் நடைபெற்ற அனைத்து குற்ற நிகழ்வுகளும் மக்களை வெளிப்படையான ஒரு கேள்வியை கேட்க நிர்பந்திக்கின்றன. ஏனென்றால் நாட்டில் எப்போது தீவிரவாத செயல்கள் நடந்தாலும் குற்றம் சாட்டப்படும் நபர் தனது உறுப்பினர் அல்ல. என்பதை காந்தியார் படுகொலை முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் கூறிவருகின்றது.

நம்மால் எப்படி இதை உறுதி செய்ய முடியும்? இது நாள் வரை ஆர்.எஸ்.எஸ் தனது அதிகாரப்பூர்வமான உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட்டதில்லை. ஒரு வேலை வெளியிட்டிருந்தால் குற்றம் சுமத்தப்படும் குற்றவாளியின் பெயர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரா? என்பதை சரிப்பார்த்து உறுதி செய்ய டியும்.இப்படியாக ஆர்.எஸ்.எஸ் எதையும் வெளிப்படுத்தாததால் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தனி நபர்களுக்கும், குழுக்களுக்கும், தீவிரவாத இயக்கங்களுக்கும், தொடர்பு கிடையாது என குற்றம் சுமத்தப்படும் போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தப்பித்து வருகின்றது.

சமீபத்தில் நடைபெற்ற தீவரவாத செயல்களில் ஈடுபட்ட தனி நபரோ அல்லது தீவிரவாத இயக்கமோ இந்துத்துவ தீவிரவாத தத்துவத்துடனும் ஆர்.எஸ்.எஸ் உடனும் தொடர்புள்ளவர்கள் என்பதனை மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

சிறுபான்மை மக்களை அழித்தொழிப்பதும் மத சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவை ஒரு இந்து இராஷ்டிராவாக மாற்ற வேண்டும் என்கின்ற தீவிர வன்மத்துடனேயே தீவிர வலதுசாரி இந்துத்துவ குழுக்களும், இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன.

தன்னை ஒரு கலாச்சார அமைப்பாக காட்டிக் கொண்டாலும் இது ஆர்.எஸ்.எஸ் இற்கும் பொருந்தும். ஆர்.எஸ்.எஸ் இன் ஆவணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் தெளிவாக புலப்படக்கூடிய விடயம் என்ன்வென்றால் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தனிநபரையோ அல்லது தீவிரவாத குழுக்களையோ உருவாக்கப்படுவதின் பின்புலத்திலும் அவர்களை மறைமுகமாக இயக்குவதும் ஆர்.எஸ்.எஸ் இன் பொருப்புதாரிகள்தான் என்பதே.

golwar guriji 350இந்துத்துவ தேசியவாத சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஹிட்லரைப் போன்று ஆரிய இனவாதத்தில் நம்பிக்கை கொண்டவர்கல். இனவாதமே நாஜிக்களுக்கும் இந்துத்துவத்திற்கும் பாலமாக உள்ளது.

இந்துக்கள் ஆரியர்கள். அவர்களே தேசிய இனம். இஸ்லாம் மற்றும் கிருஸ்த்தவமும் ஆரியர் அல்லாத நிலப்பரப்பில் தோன்றியதால் அவை வெளி நாட்டு மதமே.

ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் மதங்களை இரண்டாகப் பிரித்துள்ளது. அவை : இந்தியம் மற்றும் அந்நியம். இதில் இந்தியாவில் தோன்றிய புத்தம், ஜைனம், மற்றும் சீக்கிய மதங்களை இந்துமதத்தின் ஓரு பிரிவாக அங்கீகரித்ததே தவிர அதனை தனி மதமாக ஏற்றுக் கொள்வதில்லை.

மாதவ் சாதாசிவ கோல்வால்கர் (1906 - 1973) ஆர்.எஸ்.எஸ் இன் மிக முக்கியமான சிந்தனை வாதியான இவர் ஆர்.எஸ்.எஸ் இன் முதல் தலைவரான கேசர் பாலிராம் ஹெட்கேவருக்கு அடுத்தப்படியாக ஆர்.எஸ்.எஸ் தலைவராக பொருப்பேற்று இயக்கத்தை வழி நடத்தியவர்.

இயற்கையிலேயே இவருக்கு இவருடைய முந்தைய பொருப்புதாரிகள் போல ஃபாசிஸம் மற்றும் நாஜியாகத்தில் கடுமையான பற்று இருந்தது. ஹிட்லரின் நாஜி கலாச்சார தேசியவாதத்தை போன்றே ஆரியம் அல்லாதவர்களை இன சுத்திகரிப்பு செய்து ஒரு இந்து இராஷ்டிரியத்தை உருவாக்க எண்ணம் கொண்டிருந்தார்.

இது அவருடைய வார்த்தைகளில் அவர் எழுதிய "வீ ஆர் அவர் நேஷன் ஹூட் டிஃபைண்ட்" என்ற தலைப்பில் 1939 - இல் வெளிவந்த தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகமே இந்துத்துவத்தின் வேத நூலாக உள்ளது.

" இன்று உலகில் அத்துனை நாடுகளும் திரும்பி பார்க்கும் ஒரு தேசமாக ஜெர்மனி மாறியுள்ளது.

அதற்கு ஜெர்மனியர்கள் தங்கள் தந்தை பூமியின் மீது கொண்ட பற்றும் பெருமையுமே காரணமாகும். அவர்கள் தங்களது இனத்தையும் மொழியையும் போற்றுகிறார்கள். அதனையே பின்புலமாக்கி வளர்ந்து நிற்கின்றார்கள்.

ஜெர்மனியின் இந்த வளர்ச்சியில் நமக்கு நிறைய படிப்பினையும் பாடமும் இருக்கின்றது. நாமும் இதனை கற்றுக் கொண்டு அதனை நடைமுறைபடுத்தி முன்னேற வேண்டும்.

(கோல்வால்கர் எழுதிய "We are our National hood defind", Page - 34)

தொடரும்....

ஹாரிஸ் முஹம்மது

Pin It